கொலைகார மகிந்தாவின் சவப்பெட்டி ஏந்தி மலேசியத் தமிழர் போராட்டம்
மலேசியத் தமிழர்களால் இன்று 15-05-2009 மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக நண்பகல் 12 மணியளவில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
கோலாலம்புரில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தக்கு முன்பாக கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களின் விவரணப்படங்கள், தேசியத்தலைவரின் உருவப்படங்கள் போன்றவற்றை தாங்கி நின்றவாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இதன்போது மகிந்தவின் சவப்பெட்டி ஊர்வலம் நடைபெற்று தூதரகத்துக்கு முன்பாக ஆவேசம் கொண்ட மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது. அத்துடன் கருணாநிதி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் பொம்மைகள் படங்களுக்கு ஆவேசம் கொண்ட மக்களால் செருப்படி வழங்கப்பட்டது.
மலேசியப் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்பேரணிநடைபெற்ற போதும் ஆவேசம் கொண்ட மக்கள் எமது உறவுகள் சிறிலங்காவில் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென முழக்கமிட்டனர்.
@செய்தி & படங்கள்: வர்மன்
@ஆய்தன்:-
ஈழப் போரில் தமிழர்கள் வெற்றிபெற வேண்டும்; தமிழீழம் வென்றெடுக்க வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்கள் வேண்டுதலாகும்...!!
1 கருத்து:
nandri. mikka nandri. eelathil saakum emathu makkalukkala neengal saiyum poorattam em kavalaikalukul oru mararchiyal erpaduthukirathu. enngalukkaka ala kooda yaarum uriroodu illai endrithoom. neengal irukkireerkal.
கருத்துரையிடுக