வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 7 மே, 2009

தமிழனுக்கு வேண்டும் ஒரு தனியரசு

 • தமிழனாய் பிறந்ததனால்
 • தவிக்கின்றோம் பாரினிலே
 • தடைநீக்கித் தழிழனுக்கு
 • தரணியிலே – ஒரு
 • தனியரசு வேண்டும்
 • கழிகின்ற ஒரு கணமும்
 • அழிகின்றான் ஒரு தமிழன்
 • இருக்கின்ற இனம் வாழ
 • எமக்கு ஒரு அரசு வேண்டும்
 • பிறக்கின்ற குழந்தைக்குப்
 • பெயர் சூட்டத் தந்தை இல்லை
 • பெற்றெடுத்த தாயும்
 • பிணமாகக் கிடக்கின்றாள்
 • பிரசவ வலிதீர்க்க
 • மருத்துவம் எமக்கில்லை
 • துடிக்கின்ற குழந்தைக்கு
 • துயர்; துடைக்கும் ஆச்சிரமம்
 • ஆகாயத் தாக்குதலில்
 • அழிவுற்றுக் கிடக்கிறது
 • நலிவுற்ற எம் மக்கள்
 • நல்வாழ்வுதனைக் காண
 • நல்லரசு ஒன்று
 • நமக்கு வேண்டும்
 • பரம்பரை பரம்பரையாய்
 • பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை
 • பாதகச் சிங்களவன் பறித்து
 • எம்மை அகதியாக்கி
 • புதைக்கின்றான் புத்தர் சிலை
 • பூர்வீக எம் மண்ணில்
 • ஆண்டுகள் கடக்கவிட்டு
 • அகழ்ந்து அதை எடுத்து
 • ஆதாரம் காட்டுகிறான்
 • அழிந்த நகரமென்று
 • புண்ணிய பூமி என்று
 • புதுக் கதைகள் புனைந்து
 • அன்னிய உதவியை
 • ஆதாரமாய் கொண்டு
 • எண்ணிய விதமெல்லாம்
 • ஏவல்கள் பல செய்து
 • சிங்களச் சிறைகளிலே
 • ஆயுள் கைதிகளை
 • சிதறுகுடியேற்றம் செய்து
 • சிதைக்கின்றான்
 • தமிழ் மண்ணை...
 • ஆண்ட பரம்பரைக்கு
 • ஆயுள் காலம்வரை
 • அகதி வாழ்வு
 • அன்னியச் சிங்களவன்
 • ஆளுகையில் எமக்கு
 • அடிமை வாழ்வு- இதை
 • வேடிக்கை பார்க்கும் - இந்த
 • விசித்திர உலகம்,
 • ஆளுக்கொரு வார்தை சொல்லி
 • தமிழர் அழிவையே விளைவாக்கும்
 • அதிசய உலகம்.
 • உலக உருண்டையின்
 • ஒவ்வொரு திசையிலும்
 • உதிரியாய் வாழும் தமிழா!
 • உறையும் பனியிலும் - உன்
 • உறங்காத உளைப்பு உதவாது - உன்
 • உரித்தான சந்ததிக்கு,
 • பாலைவனத்தை பசுமையாக்கி - உன்
 • பருவ வயதினைப் பாழாக்கி
 • எத்தனை காலம்
 • அன்னியன் வீட்டினில்,
 • அன்னியன் நாட்டினில்
 • அடிமை வாழ்வு?
 • வீறுகொண்டு எளு! - தமிழர்
 • விடுதலை யாகத்தில் ஆகுதீயாய்!
 • பூகோள எல்லையிலெல்லாம் -உன்
 • புரட்சி வெடிக்கட்டும்
 • பூமிப் பந்திலே
 • தமிழர் பிரளயம்
 • எரிமலை ஆகட்டும்..!
 • பூண்டோடு ஒழிவது நம் எதிரியாகட்டும்
 • புதுக்காலம் பிறப்பது தமிழருக்காகட்டும்
 • புதுமைகள் படைத்தது தமிழினமாகட்டும்
 • இந்தப் பூமிப்பந்தில் புதிதாகப் பிறப்பது தமிழீழமாகட்டும்.
 • @நன்றி:யாழ் இணையம்

@ஆய்தன்:-
ஆண்டப் பரம்பரை - எம்
தமிழினப் பரம்பரை
மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில்
என்ன குறை..?

கருத்துகள் இல்லை: