வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் என்று காட்டப்பட்டவர் பிரபாகரன் தானா?
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகம் அறிவித்துள்ளது. அதனையே உலக ஊடகங்கள் அனைத்தும் வழிமொழிந்துள்ளன.
பிரபாகரன் என்று படத்தில் காட்டப்பட்டவர் உண்மையிலேயே பிரபாகரன் தானா? என்ற ஐயப்பாடு பெரிய அளவில் இப்போது வலுத்துள்ளது. அதற்கான அடிப்படைகள் இதோ:-
இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. முதலாவதாக உள்ள படம் 2004-கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.
*4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?
*முகத்தில் இருந்த சுருக்கங்கள் எங்கே?
*இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?
*கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பார்த்த அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள். கொல்லப் பட்டவரின் முகம் இப்படியா இருக்கும்?
*இருபத்தி நான்கு மணி நேர தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிரதேசத்தில் இருந்த பிரபாகரன் இப்படி கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா?
இவற்றில் சில உண்மைகள் இருப்பதை இந்நேரம் சற்று உணர்ந்திருக்கலாம். இவைபோக, இன்னும் இப்படி நிறைய ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. அவற்றைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

1.எதையும் நம்ப வேண்டாம்

2.நெகிழி அறுவை (Plastic Surgery) மூலம் சோடிக்கப்பட்ட முகம்

3.நெகிழி அறுவை (Plastic Surgery) பிரபாகரன் மாண்டார்

4.பிரபாகரன் சந்தித்த "மரணங்கள்" 15

5.பிரபாகரனை எத்தனை முறை கொல்லுவார்கள்

@ஆய்தன்:-

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (தமிழ்மறை)

6 கருத்துகள்:

ஷாகுல் சொன்னது…

yes it should be fack. he may be left from SL r safe place in SL. He have to come front of the media. that only stop all the rummer. Now situation going very bad in relif camp. It will be open jail for the Tamils. SL govt never give good life for the Tamils.No one ready to believe SL govt. I also have some conflict against his activities like Kathankudi. Any way if they got final solution we will be happy. Inshaallah

ALIF AHAMED சொன்னது…

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?
///தவறாக எண்ண வேண்டாம்

அப்ப இந்த வீடியோவில் யாரோ இறந்தது போல் நடிக்கிறார்னு சொல்லுறீங்களா..?

//


எனக்கென்னவோ தசவதாரா மேக்கப் மாதிரி தெரியுது.. !!!

பெயரில்லா சொன்னது…

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் கண்டிப்பாக இப்படி சாகக்கூடாது. இலங்கை அரசால் வெளியிடப்பட்ட பிரபாகரன் உடல் நிஜமாக அவராக இருக்கக்கூடாதென்றே
Ungalai Pola ellam valla eraivanai vaendikondirukkum pala kodi Thamilargalil naanum oruvan

( Nile Raja )

Tamilvanan சொன்னது…

தலைவர் நிச்சயமாக நலமாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

Tamilvanan சொன்னது…

தலைவர் நிச்சயமாக நலமாக இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருப்போம். இனி தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் புலியாக மாறுவான். எப்போதெல்லாம் வாய்ப்பு கிட்டு கின்றதோ அப்போதெல்லாம் நம் இனத்திற்கு எதிரானவர்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தி கொள்ள (கொல்ல)வேண்டும். முட்டாள் சிரி லங்கா அரசாங்கம் சுயமாக வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்து கொள்கிறது. (ஒரு வேளை உலக நாடுகளில் இருந்து பணம், உதவி பெற அல்லது கடன் வாங்க ஒரு வழியோ ) . உண்மை போராட்டம் ஒய்ந்ததாக வரலாறு இல்லை. சரியாகச் சொன்னால் இனிமேல்தான் போராட்டம் திட்டமி்ட்டு வெவ்வேறு வழிகளில் அல்லது வெவ்வேறு விதங்களில் தொடரும். சிரி லங்கா அரசு ஈழத் தமி்ழர்களை மட்டுமல்ல உலக தமி்ழர்கள் அனைவரையும் எதிரிகளாக ஆக்கி கொண்டது மாபெரும் அடி.

யுவனேஸ் சொன்னது…

இறந்தவர், மேதகு.பிரபாகரன் அல்ல என்பதே உண்மை! பல புரளிகளைப்பரப்பும் இலங்கை அரசின் மற்றுமொரு திருவிளையாடலாக இது இருக்கலாம், இருக்கவேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனை. வாழ்க பிரபாகரன்!