வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 23 பிப்ரவரி, 2008

நல்லதமிழை அழிக்கும் நெகிரி ஆ'சிறியர்'கள்


நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடாக இடைநிலைப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி இலக்கணச் சிப்பம் என்ற பெயரில் தமிழை அழிக்கும் நோக்கத்தோடு ஒரு நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் தமிழ்ப் பற்றாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. காரணம், தமிழ் இலக்கண நூல் என்ற பெயரில் கிரந்தமொழிப் பாடமும், சமற்கிருதப் பெயர்களும், வலிந்து திணிக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழிப் பாடத்தில் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ள கிரந்த எழுத்துகள் பற்றிய சிறுபகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், மறைமுகமாகக் கிரந்தத்தைப் புகுத்தி நல்லதமிழை ஓரங்கட்டும் முயற்சியாகவும் இந்த இலக்கணச் சிப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜ, ஷ, ஸ, ஹ, ஆகிய கிரந்த எழுத்துச் சொற்களைத் திட்டமிட்டுப் புகுத்தி தமிழை அழிக்கப்பார்க்கும் 'கோடரிக்காம்பர்கள்' சிலரின் கொடிய முயற்சி இந்த நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே நன்கு வெளிப்படத் தெரிகின்றது.

தமிழ் இலக்கண நூலில் எதற்கு கிரந்தம்? செத்துப் போன கிரந்தத்தைக் கட்டி அழவேண்டிய தேவை என்ன வந்தது? தமிழை வளர்க்க வேண்டியவர்கள் கிரந்தத்தை நக்கிப்பிழைக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவர்கள் சொந்தமொழியை அழித்துவிட்டு, மானங்கெட்டத்தனமாக செத்தவொரு மொழியை வளர்க்க முன்வருவார்களா? அப்படியும் சிலர் முன்வந்துள்ளனர் என்றால் அதற்குக் காரணம், தமிழை அழிக்கும் குரூர புத்தியே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நெகிரி செம்பிலான் மாநில இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும், முழுநேர ஆங்கில ஆசிரியராகவும் பகுதிநேர தமிழ் ஆசிரியராகவும் மாறடித்து தமிழிடம் பிச்சை வாங்கும் முத்தப்பன் பெற்ற குள்ளநரிக் குலமகன் இராசன் என்வரும், கல்வி அதிகாரி தங்கமான இராசு ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து, 'தமிழ்மொழிப் பணிப்படை' என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு தமிழுக்குப் பிணிசேர்க்கும் இந்த மாபெரும் பாழ்பட்டச் செயலைச் செய்திருக்கின்றனர். அன்னைத் தமிழை அழிக்க முனைந்திருக்கும் இவர்கள் அனைவரையும் தமிழுயிர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த இலக்கண நூலில் வேண்டுமென்றே கிரந்தமொழிக்கான பாடத்தை 'தற்சமம்', 'தற்பவம்' என்ற பிரிவுகள் மூலம் சந்தோஷம், மகரிஷி, விஷம், விஷ்ணு, காரியதரிஷி முதலான சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. குறில் நெடில் பிழைகள் மலிந்துள்ளன. நிறுத்தக்குறிகள் தப்பும் தவறுமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் உச்சமாக, ஷாமினி, தனுஷா, வஸந்தா, ஹேமலதா, ஜெயமாலினி, ரோஷினி, ஊர்ஷினி, அஸ்வினி, சுலோஷனா, ‚தேவி, ‚வாணி, தனுஷ், ரமேஷ், ராஜேஷ், ராஜீவ், விஷ்ணுவர்த்தன், ராஜேந்திர பூபதி, ஷர்வின், ரிஷபரன், சுபாஷ், புஷ்பமாலினி முதலான நூறுக்கும் மேற்பட்ட வடமொழிப் பெயர்கள் வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. கிரந்தம் வழியாக சமற்கிருதத்தை வாழவைக்க சூழ்ச்சி செய்துள்ள இந்த நூலாசிரியர்களின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்லுவது? தமிழைக் குழைக்கவேண்டும் என்ற அவர்களின் முடிச்சவிக்குத் தனத்தை எதுவென்று சொல்லுவது?

நாய்கூட சோறுபோட்ட கையைக் கடிப்பது இல்லை. ஆனால், அதனினும் கேடாக குடும்பத்திற்கே சோறுபோட்ட மொழிக்குக் குந்தகம் செய்யத் துணிந்த இந்தப் பணிப்படை ஆசான்களை மன்னிக்கவே கூடாது. கிரந்த வெறி தலைக்கேறிப்போய் இருக்கும் இவர்களை வெறுமனே விட்டுவிடவும் கூடாது. காரணம், இவர்கள் இப்படி செய்வது இது முதல்முறை அன்று. ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலம் முதற்கொண்டு தமிழுக்கு இரண்டகம் செய்வதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆகக் கடைசியாக, சில மாதங்களுக்கு முன்னர் 'தமிழ் நீச மொழி' என்றும் 'சமற்கிருதத்தைக் கலந்து எழுதினால்தான் தமிழ் வாழும்' என்றும் பிதற்றிவிட்டு தமிழ்ப்பற்றாளர்களிடம் செம்மையாக வாங்கிக்கட்டிக் கொண்டதும் இந்தக் குள்ளநரிக் கூட்டம்தான்.

நரித்தனமாக இவர்கள் மேற்கொண்டுள்ள இந்தச் செயல் மிகவும் வெட்கக்கேடானது மட்டுமல்ல முதல்தர நன்றிகெட்டத்தமும் கூட. தமிழால் பிழைப்பு நடத்திக்கொண்டு மனைவி பிள்ளைகளை நன்றாக வளர்த்துக்கொண்டு வளமாக வாழும் இத்தகைய தமிழாசிரியர்கள் வீட்டை அரிக்கும் கரையான்களுக்கு ஒப்பானவர்கள். கரையான் உள்ளிருந்து வீட்டை அழிப்பதுபோல் இவர்கள் மொழியை அழிக்கின்றனர்.

ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையாதத் தமிழைக் கீழறுப்புச் செய்து செத்தமொழியான கிரந்தத்தையும் சமற்கிருதத்தையும் தலையில் தூக்கிவைத்து ஆடும் இவர்கள் தமிழ்த்துரோகிகள்! தமிழ்க்கேடர்கள்! தமிழ்மானம் கெட்டவர்கள்! கிரந்தமொழி வெறியும் சமற்கிருத வெறியும் கொண்ட இவர்கள் தமிழ் ஆசிரியர்களாக இருப்பதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர்கள்.

ஆகவே, இவர்கள் சூடு, சுரணை, மானம் உள்ளவர்களாக இருந்தால் தமிழால் பிழைக்கும் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்த்துக்கொள்ளட்டும். அல்லது கிரந்தம், சமற்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்களில் போய் வேலை செய்யட்டும். ஒருவேளை, இவர்களால் எந்தத் தொழிலும் செய்யமுடியாவிட்டால் தம் மனைவியை ஏதாவது தொழிலுக்கு அனுப்பியோ அல்லது பிள்ளைகளைப் பிச்சை எடுக்கவைத்தோ பிழைத்துக் கொள்ளட்டும். தமிழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்துகொண்டு தமிழை அழிக்க வேண்டாம் என இவர்களைத் தமிழுயிர் சீற்றத்துடன் கேட்டுக்கொள்கிறது.
  • ஆய்தன்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை தமிழ்நன்றி கொன்ற மகற்கு.

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமானது


நூற்றாண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் இப்போதுதான் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் இச்செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் பிறந்த மண்ணிலேயே தமிழுக்கு ஏற்பட்டுள்ள இப்படியொரு அவல நிலைகண்டு மனம் கொந்தளிக்கிறது.

இந்திய நாட்டின் மற்றைய மாநிலங்களில் அவரவர் தாய்மொழிகள் பள்ளிகளில் கட்டாய மொழிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மட்டும் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழுக்கு இடமில்லை என்பது வெட்கக் கேடான நிலைதான். இத்தனை காலத்திற்குப் பிறகு இப்போதுதான் தமிழகத் தமிழனுக்கு தாய்மொழி உணர்வு வந்துள்ளது போலும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருந்தாலும் கல்விமொழியாக இல்லாத அவலநிலை இப்போது நீங்கியுள்ளது. இனி தமிழுக்குத் தமிழ்மண்ணில் நல்ல எதிர்காலம் மலரும் என்று மலேசியத் தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 12-6-2006இல் தமிழக அரசினால் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி 2006-2007ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாகப் படிப்படியாக அமுலாக்குவது அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆயினும், இந்தச் சட்டத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம், நாயர் சேவை சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களிடையே தமிழைக் மட்டும் பயிலவேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழநாட்டில் ஆந்திரா மற்றும் கேரளா மாநில எல்லைகளில் முறையே தெலுங்கு, மலையாள மொழிகளைப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் வாதிட்டனர்.

எனினும், தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும். இதன் மூலம் தமிழ்மொழியின் பெருமையை உணர வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு சட்டத்தைக் கொண்டுவந்து உள்ளது. எனவே, தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பினால், தமிழை அழிப்பதற்குக் காலங்காலமாக சூழ்ச்சிகளும் கீழறுப்புகளும் குளறுபடிகளும் செய்துவருகின்ற தமிழ்ப்பகைவர் கூட்டத்தினர் மூக்கு மொக்கையாகி குப்புற கவிழ்ந்து மண்ணைக் கௌவியுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது கண்டு தமிழ்க்கூறு நல்லுலகம் உவகை அடைந்துள்ளது. இதன்வழி, தமிழின் எழுச்சியும் வளர்ச்சியும் விரைவுபடும்; செம்மொழி தகுதிபெற்ற தமிழ் அனைத்துத் துறைகளிலும் நிறைவுபடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழுக்குப் புதிய அடையாளமும் ஆக்கமும் ஏற்படும் என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளது.  • ஆய்தன்: தமிழகத் தமிழர்களே.. உங்களுக்காக இல்லாவிட்டாலும் கடல்கடந்து வாழும் தமிழர்களை நினைந்து தமிழை வாழவையுங்கள்!

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

வாக்கெடுப்பு(2) முடிவு


எந்தப் பள்ளியில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது நல்லது?

தேசியப் பள்ளிகளில் :- 8%
இடைநிலைப் பள்ளிகளில் :- 75%
மேற்கண்ட இரண்டிலும் :- 17%

  • ஆய்தன்: கட்டாயப் பாடமாக்கினால்தான் தமிழைப் படிக்கவேண்டுமா? ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்மொழி உணர்வு வேண்டாமா?

போட்டுத் தாக்கு 2


நன்றி: மலேசிய நண்பன் செய்தி (10.2.2008)

  • ஆய்தன் : தமிழ் இலக்கண வழிகாட்டிச் சிப்பத்தில் கிரந்த எழுத்துகளைக் கொண்ட சமற்கிருத பெயர்களை வலிந்து திணித்துள்ள ஆரிய அடிவருடி ஆசிரியர்களே... உங்களுடைய வடமொழி வக்கிரப் புத்தியைத் தமிழ் மாணவர்களிடையே பரப்ப வேண்டாம். உங்களுடைய பெண்டாட்டி பிள்ளைகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உண்ணும் அரிசியைக் கலப்படம் செய்யவும்.. உடுத்தும் ஆடையை அழுக்குச் செய்யவும்.. கட்டிய மனைவியைக் கலங்கம் செய்யவும் சம்மதமா உங்களுக்கு!!!