வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 23 பிப்ரவரி, 2008

நல்லதமிழை அழிக்கும் நெகிரி ஆ'சிறியர்'கள்


நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடாக இடைநிலைப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி இலக்கணச் சிப்பம் என்ற பெயரில் தமிழை அழிக்கும் நோக்கத்தோடு ஒரு நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் தமிழ்ப் பற்றாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. காரணம், தமிழ் இலக்கண நூல் என்ற பெயரில் கிரந்தமொழிப் பாடமும், சமற்கிருதப் பெயர்களும், வலிந்து திணிக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழிப் பாடத்தில் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ள கிரந்த எழுத்துகள் பற்றிய சிறுபகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், மறைமுகமாகக் கிரந்தத்தைப் புகுத்தி நல்லதமிழை ஓரங்கட்டும் முயற்சியாகவும் இந்த இலக்கணச் சிப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜ, ஷ, ஸ, ஹ, ஆகிய கிரந்த எழுத்துச் சொற்களைத் திட்டமிட்டுப் புகுத்தி தமிழை அழிக்கப்பார்க்கும் 'கோடரிக்காம்பர்கள்' சிலரின் கொடிய முயற்சி இந்த நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே நன்கு வெளிப்படத் தெரிகின்றது.

தமிழ் இலக்கண நூலில் எதற்கு கிரந்தம்? செத்துப் போன கிரந்தத்தைக் கட்டி அழவேண்டிய தேவை என்ன வந்தது? தமிழை வளர்க்க வேண்டியவர்கள் கிரந்தத்தை நக்கிப்பிழைக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவர்கள் சொந்தமொழியை அழித்துவிட்டு, மானங்கெட்டத்தனமாக செத்தவொரு மொழியை வளர்க்க முன்வருவார்களா? அப்படியும் சிலர் முன்வந்துள்ளனர் என்றால் அதற்குக் காரணம், தமிழை அழிக்கும் குரூர புத்தியே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நெகிரி செம்பிலான் மாநில இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும், முழுநேர ஆங்கில ஆசிரியராகவும் பகுதிநேர தமிழ் ஆசிரியராகவும் மாறடித்து தமிழிடம் பிச்சை வாங்கும் முத்தப்பன் பெற்ற குள்ளநரிக் குலமகன் இராசன் என்வரும், கல்வி அதிகாரி தங்கமான இராசு ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து, 'தமிழ்மொழிப் பணிப்படை' என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு தமிழுக்குப் பிணிசேர்க்கும் இந்த மாபெரும் பாழ்பட்டச் செயலைச் செய்திருக்கின்றனர். அன்னைத் தமிழை அழிக்க முனைந்திருக்கும் இவர்கள் அனைவரையும் தமிழுயிர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த இலக்கண நூலில் வேண்டுமென்றே கிரந்தமொழிக்கான பாடத்தை 'தற்சமம்', 'தற்பவம்' என்ற பிரிவுகள் மூலம் சந்தோஷம், மகரிஷி, விஷம், விஷ்ணு, காரியதரிஷி முதலான சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. குறில் நெடில் பிழைகள் மலிந்துள்ளன. நிறுத்தக்குறிகள் தப்பும் தவறுமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் உச்சமாக, ஷாமினி, தனுஷா, வஸந்தா, ஹேமலதா, ஜெயமாலினி, ரோஷினி, ஊர்ஷினி, அஸ்வினி, சுலோஷனா, ‚தேவி, ‚வாணி, தனுஷ், ரமேஷ், ராஜேஷ், ராஜீவ், விஷ்ணுவர்த்தன், ராஜேந்திர பூபதி, ஷர்வின், ரிஷபரன், சுபாஷ், புஷ்பமாலினி முதலான நூறுக்கும் மேற்பட்ட வடமொழிப் பெயர்கள் வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. கிரந்தம் வழியாக சமற்கிருதத்தை வாழவைக்க சூழ்ச்சி செய்துள்ள இந்த நூலாசிரியர்களின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்லுவது? தமிழைக் குழைக்கவேண்டும் என்ற அவர்களின் முடிச்சவிக்குத் தனத்தை எதுவென்று சொல்லுவது?

நாய்கூட சோறுபோட்ட கையைக் கடிப்பது இல்லை. ஆனால், அதனினும் கேடாக குடும்பத்திற்கே சோறுபோட்ட மொழிக்குக் குந்தகம் செய்யத் துணிந்த இந்தப் பணிப்படை ஆசான்களை மன்னிக்கவே கூடாது. கிரந்த வெறி தலைக்கேறிப்போய் இருக்கும் இவர்களை வெறுமனே விட்டுவிடவும் கூடாது. காரணம், இவர்கள் இப்படி செய்வது இது முதல்முறை அன்று. ஆசிரியர் தொழிலுக்கு வந்த காலம் முதற்கொண்டு தமிழுக்கு இரண்டகம் செய்வதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆகக் கடைசியாக, சில மாதங்களுக்கு முன்னர் 'தமிழ் நீச மொழி' என்றும் 'சமற்கிருதத்தைக் கலந்து எழுதினால்தான் தமிழ் வாழும்' என்றும் பிதற்றிவிட்டு தமிழ்ப்பற்றாளர்களிடம் செம்மையாக வாங்கிக்கட்டிக் கொண்டதும் இந்தக் குள்ளநரிக் கூட்டம்தான்.

நரித்தனமாக இவர்கள் மேற்கொண்டுள்ள இந்தச் செயல் மிகவும் வெட்கக்கேடானது மட்டுமல்ல முதல்தர நன்றிகெட்டத்தமும் கூட. தமிழால் பிழைப்பு நடத்திக்கொண்டு மனைவி பிள்ளைகளை நன்றாக வளர்த்துக்கொண்டு வளமாக வாழும் இத்தகைய தமிழாசிரியர்கள் வீட்டை அரிக்கும் கரையான்களுக்கு ஒப்பானவர்கள். கரையான் உள்ளிருந்து வீட்டை அழிப்பதுபோல் இவர்கள் மொழியை அழிக்கின்றனர்.

ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையாதத் தமிழைக் கீழறுப்புச் செய்து செத்தமொழியான கிரந்தத்தையும் சமற்கிருதத்தையும் தலையில் தூக்கிவைத்து ஆடும் இவர்கள் தமிழ்த்துரோகிகள்! தமிழ்க்கேடர்கள்! தமிழ்மானம் கெட்டவர்கள்! கிரந்தமொழி வெறியும் சமற்கிருத வெறியும் கொண்ட இவர்கள் தமிழ் ஆசிரியர்களாக இருப்பதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர்கள்.

ஆகவே, இவர்கள் சூடு, சுரணை, மானம் உள்ளவர்களாக இருந்தால் தமிழால் பிழைக்கும் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்த்துக்கொள்ளட்டும். அல்லது கிரந்தம், சமற்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்களில் போய் வேலை செய்யட்டும். ஒருவேளை, இவர்களால் எந்தத் தொழிலும் செய்யமுடியாவிட்டால் தம் மனைவியை ஏதாவது தொழிலுக்கு அனுப்பியோ அல்லது பிள்ளைகளைப் பிச்சை எடுக்கவைத்தோ பிழைத்துக் கொள்ளட்டும். தமிழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்துகொண்டு தமிழை அழிக்க வேண்டாம் என இவர்களைத் தமிழுயிர் சீற்றத்துடன் கேட்டுக்கொள்கிறது.
  • ஆய்தன்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை தமிழ்நன்றி கொன்ற மகற்கு.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்தச் செய்தியை நாளும் மலேசிய நண்பன் நாளிதழில் படித்தேன். தமிழைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்க வேண்டும் என்றே நெகிரி மாநிலத்தில் ஒரு மொள்ளமாரி கூட்டம் செயல்பட்டு வருகிறது என நினைக்கிறேன். அவர்களின் முகத்திரையை கிழிகிழியென கிழித்துள்ளீர்கள். அந்த திருட்டுப்பயல்களின் புகைப்படங்கள் கிடைத்தால் தமிழுயிரில் வெளியிடவும். இவனுங்களூக்கும் இவனுங்க புள்ள குட்டிக்கும் தமிழ் என்ன பாவம் செய்தது? தமிழை சீரழிக்க ஏன்தான் இந்த கூலிப்பட்டாளம் துடிக்கிறது? இவனுங்களூக்குப் பின்னால் வேறு எவனெவன் செயல்படுகிறான் என்று துப்புத்துலக்கி மூஞ்சியில் துப்பு துப்பு என காரித்துப்ப வேண்டும்.

இப்படி தமிழுக்கு துரோகம் செய்யும் குள்ளநரிகளை போட்டுத் தாக்கி பின்னி எடுக்கும் தமிழுயிரின் தீவிரப் பணி கூ..ள்!

தமிழுயிர் அடி.. தூள்!!

மீண்டும் வருவேன்.. கூ..ள்!
சித்தன் சிவாஜி

பெயரில்லா சொன்னது…

வணக்கம் தமிழ்நலம் சூழ்க

நண்பனில் வெளியாகைய மேற்கண்ட செய்தியைப் படித்தவர்களின் நானும் ஒருவன் என்பதால் இக்கருத்தினை முன்வைக்கின்றேன்.

தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டு தமிழ்ச்சோறு தின்று கொண்டு தமிழுக்கே ஆப்பு அடிக்க நினைக்கும் சுரணைகெட்ட பிறவிகளை என்வென்று சொல்வது. செம்மொழியாம் தமிழை விடுத்து சமற்கிருத சொற்களைப் இலக்கணச் சிப்பத்தில் வலிந்து திணித்திருக்கும் இவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. இவர்கள் தமிழச்சிக்குப் பிறந்தவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழுக்குத் தொண்டு செய்யாவிட்டாலும் பரவாயில்லை தமிழைக் கொன்று தொலைக்கும் மண்டுகளாக இருக்கவேண்டாம் எனக்கேட்டுக் கொள்கின்றேன். இதைத்தான் பாவேந்தர் அவர்கள்
வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய்- எதிர்
வரக்கானில் காறி நீ உமிழ்வாய் எனக் குறிப்பிடுகின்றார். இருந்திருந்தால் காறி உமிழ்ந்திருப்பார்.

தமிழ்ச்சோறு தின்று கொண்டு தமிழுக்கு கேடு செய்ய நினைக்கும் கயவர்களை மலேசியத் தமிழர்கள் களையெடுக்க வேண்டும். மீண்டும் தாய்மொழியாம் தமிழின் மீது கைவைத்தால் உங்கள் பிறப்பின் மீதே ஐயம் கொள்ள நேரிடும்.
வாழ்க மக்கள் சக்தி
வெல்க தமிழர் சக்தி

தாய்தமிழ்ப்பணியில்

கவின்முகிலன்
நெகிரி செம்பிலான்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க தமிழர்

மலேசியத்தில் தமிழுக்குத் துரோகம் இழைக்கும் கயவர்களின் முகத்திரையை உடனுக்குடன் கிழிக்கும் தமிழுயிரின் தமிழ்க்காப்புப் பணியைப் பாராட்டுகின்றேன். தொடரட்டும் உங்கள் பணி

அரிசியில் கல் இருந்தால் அது உடலுக்கு கெடுதி, மொழியில் கலப்பு இருந்தால் அது மொழிக்கு கெடுதி என்பதை ஏன் இந்த மர மண்டைகளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவும் மொழிக்கு அரணாக விளங்கும் தமிழாசிரியர்களே அதற்குத் துணைபோவது வெட்கக்கேடான ஒன்றாகும்.தமிழில் வடமொழிச்சொற்களை வலிந்து திணிப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? இவர்கள் என்ன உண்மையிலே தமிழாசிரியர்களா அல்லது வடமொழியாசிரியர்களா ? அல்லது பார்ப்பணத்திக்குப் பிறந்தவர்களா என்று எண்னத் தோன்றுகிறது. கண் இருந்து குருடர்களாக வாழும் நெகிரி செம்பிலான் "குருட்டு ஆசிரியர்களை " என்ன சொல்லித் திட்டுவது( இலக்கணச் சிப்பத்திற்குப் பொறுப்பானவர்கள் மட்டுமே )வட்மொழியைப் புகழும் உங்களுக்கு எதற்கு தமிழாசிரியர் பணி.சமற்கிருத அடிவருடிகளின் காலை கழுவிக் மொழிக்கு இரண்டகம் செய்யும் உங்களைப் போன்ற கேடு கெட்ட பிறவிகளுக்கு சரியான பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் மறவாதீர்கள்.மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது உங்களுக்குத் தெரியாதா அல்லது புரியாதே? தமிழ்மீது அப்படியென்ன கோபம் உங்களுக்கு.

தமிழ் தேவையிலையென்றால் உடனே தமிழாசிரியர் பணியில் இருந்து விலகுங்கள்

இவனா தமிழன் ?

இவனா தமிழன் இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொருக்காது- இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைப்பேறு


தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மரபெல்லாம் மீறுகிறான் - அதைத்
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்

வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச்சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் - அதை
கடிந்தால் உடனே தூற்றுகிறான்

தானும் முறையாய்ப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நட்ப்பதில்லை- நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே- தான்
அடைந்ததை எல்லாம் இழப்பவனே


இன்பத் தமிழின் நலன் கருதும்

விவேகன்
மலாக்கா

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க

நெகிரி செம்பிலான் ஆசிரியர்களின் முயற்சியில் வெளியாகியிருக்கும் தமிழ்மொழி இலக்கணச்சிப்பம் தொடர்பாக மலேசிய நண்பன் நாளிதழில் வெளியாகிய கண்டன செய்தி தொடர்பான எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.இவ்விலக்கணச்சிப்பத்தைப் பார்த்தவன் என்கிற அடிப்படையில் இக்கருத்தினை எழுதுகிறேன். இச்சிப்பம் நமது தமிழ்மாணவர்களிடையே எம்மாதிரியான விளைவுகளை ஏற்படும் என்பதைக் காண்போம்.

1. இவ்விலக்கணச்சிப்பத்தில் சற்றேறக்குறைய 100 பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர்களில் ஒன்றுகூட தமிழ்ப்பெயர்களாக இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியதான ஒன்றாகும். தமிழாசிரியர்கள் தங்கள் தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் வழக்கிலிருந்து மறைந்துருக்கின்ற பெயர்களை வலிந்து திணித்திருப்பது தாய்மொழியாம் தமிழை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்த வேலையாகவே இப்பணியினை எண்ணத் தோன்றுகிறது. மாறாக நல்லத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கலாம்
எ.கா : காரியதரிசி

இன்று நடைமுறையில் நாம் செயலர் அல்லது செயலாளர் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். இப்படி ஒரு சொல் இருக்க எதற்கு இந்த காரியதரிசி? தமிழைத் தொலைக்கவா? அல்லது சமற்கிருத மோகமா? வடமொழிச் சொற்களைக் கற்பிக்க நடமுறையில் கிரந்த எழுத்துகள் என்ற பகுதி பாடத்திட்டத்தில் இருக்கின்ற பொழுது எதற்கு தமிழ்ப்பெயர்களில் கைவைத்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

2. இரண்டாவதாக, தமிழாசிரியர்கள் இலக்கணச் சிப்பத்தை உருவாக்கும் போது பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆனால், இவ்விலக்கணச் சிப்பத்தில் நிறைய இலக்கணப் பிழைகள் காணப்படுகின்றன. இச்சிப்பத்தைப் பயன்படுத்தும் மாணவர்களும் இதனைப் பின்பற்றுதல் கூடும். அதனால் தமிழ்மொழியின் தரம் குறையும் . தமிழுக்கு ஆக்ககரமான பணி செய்ய வேண்டிய தமிழாசிரியர்கள் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துச் செய்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இம்மாதிரியான சிப்பங்கள் உருவாக்கும் போது மொழியின் தரம் உறுதி செய்யப்படவேண்டும். மேலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் மொழிவளம், மொழிஉணர்வு மிக்க ஆசிரியர்களும் இப்பணிக்கு அமர்த்தப்படவேண்டும். தமிழ்மொழிச்சிப்பம் தமிழர் பண்பாடு, தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ்ப்பெயர்கள்,போன்ற கூறுகள் கவனிக்கப்படவேண்டும்.தமிழால் வாழ்கின்ற நாமே இவற்றுக்கு முன்னோடிகளாக இருந்து தமிழின் பெருமையை தலைநிமிரச் செய்ய வேண்டும். தக்கார் சொல்கின்ற கருத்துகளையும் செவிமடுத்து தமிழ்க்காப்புப் பணியாற்ற வேண்டும்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து- அதனை
அவன்கண் விடல்
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கொப்ப தக்கவர்களைக்கொண்டு பணிகளைச் செவ்வனே செய்திடல் வேண்டும்

மொழி,இனம் சமயம் எனப்படும் முப்பெரும் பல்வேறு கூறுகளுக்குப் பல்வேறு வகையில் கேடுகள் மலிந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் நமது மொழியையும் பண்பாட்டையும் சமயத்தையும் கட்டிக்காக்கின்ற மதிநுட்பம் வாய்ந்தவர்களாக தமிழாசிரியர்கள் உருவாக வேண்டும். இல்லையேல் நாளைய தலைமுறையின் பழிச்சொல்லுக்கு ஆளாகுவதோடல்லாமல் தமிழாசிரியர்களின் முகத்தில் காறி உமிழும் நிலைக்கும் நாம் தள்ளப்படுவோம் என்பது உறுதி.

" தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளி எங்கள் உடல் "

தமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை

அன்புடன்

கவியரசன்
சொகூர் மாநிலம்

பெயரில்லா சொன்னது…

தமிழுயிர் தளபதி ஐயா ஆய்தன் அவர்களுக்கும் தமிழுயிர் அன்பர்களுக்கும் வணக்கம். நெகிரி மாநிலத்தில் வெளியிடப்பட்டு பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் தமிழ் இலக்கணச் சிப்பம் குறித்து தக்க காலத்தில் தமிழுயிர் வன்மையாகக் கண்டித்து எழுதியுள்ளதைப் பாராட்டுகிறேன். மலேசியாவில் தமிழ்க் காப்புப்பணிக்கு முன்னிருந்து பாடாற்றும் தமிழுயிரின் பணிசிறக்க வாழ்த்துகிறேன்.

கிரந்த எழுத்துகளையும் வடமொழியும் (சமற்கிருதம்)வலிந்து திணித்து தமிழைக் கெடுக்கும் 'நூற்றாண்டுச் சூழ்ச்சியை' இன்று நமது மலேசிய நாட்டிலும் சிலர் முனைந்து செய்வது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் கூட. காரணம், கிரந்தத்தாலோ அல்லது வடமொழியாலோ தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை! தமிழ் வளர்ந்ததாகச் சான்றுகள் இல்லை! தமிழ் நிலைத்ததாக ஆதாரங்கள் இல்லை!

மாறாக, அதிகமான வடமொழிக் கலப்பினால் தமிழ் கன்னடமாகவும் தெலுங்காகவும் மலையாளமாகவும் திரிந்ததுதான் மிச்சம்! தமிழரோடு தமிழராக இருந்தவர்கள் பின்னர் கன்னடர்களாகவும் ஆந்திரர்களாகவும் மலையாளிகளாகவும் பிரிந்துபோய் பகைவர்கள்போல் ஆனதுதான் மிச்சம்!

தமிழ் தமிழாக இருப்பதை தமிழர்கள் குறிப்பாகத் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முனைப்பாக இருக்க வேண்டும். அதற்கு, தமிழின் உண்மை வடிவத்தையும், மொழியமைப்பையும் முழுதுமாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் இலக்கணத்தின் கட்டுமானத்தைக் கற்றுகொள்ள வேண்டும். தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும் சிதைந்துபோகாமல் இருக்கின்ற வரலாறுகளை ஊன்றிக் கவனிக்க வேண்டும். மொழி அறிஞர்களின் ஆய்வுகளைக் கருத்தூன்றிப் படித்திட வேண்டும். தமிழுக்கு ஆக்கமான செயல்களையும் பாதகச் செயல்களையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவாற்றல் வேண்டும். அனைத்திற்கும் மேலாக, மொழிநலம் பேணுகின்ற உண்மை உள்ளம் வேண்டும்.

இத்துணைக் காலமும் தமிழ் இலக்கணத்திற்கு துணைநூல்கள் ஆக்கிய எவரும் செய்யத் துணியாத மாபாதகச் செயலை நெகிரி மாநில ஆசிரியர் குழுவினர் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள இந்தச் செயல் தமிழ் அழிப்பு வேலையே அன்றி பிறவல்ல!

ஏதோ ஒரு சார்பு சிந்தனையில் அல்லது தமிழின் நல்வாழ்வைப் அங்கீகரிக்க முடியாத நிலையில் அல்லது தமிழைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்தச் சிறுகூட்டத்தார் கொள்ளைப்புற வழியாக வந்து இப்படியொரு கொடுஞ்செயலைச் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் செயலானது தமிழுக்கு எதிரான அவர்களின் ஆழ்மன அரிப்பையும்; பகைமை எண்ணத்தையும், தன்னம்பிக்கையின்மையையும் படம்பிடித்து காட்டுகிறது. இது ஒருவகை வக்கிர எண்ணம் மட்டுமல்ல மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையும் கூட.

இதுபோன்ற செயல் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆரியர்கள் தொடங்கிய இந்த தமிழ் அழிப்பு மனநோய் இங்கேயும் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்மையக் காலத்தில் இத்தகைய மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதற்கு இந்த இலக்கணச் சிப்ப ஆசிரியர் குழுனரே சான்று.

இவர்கள் உடனடியாக இந்த இலக்கணச் சிப்பத்தை மீட்டுக்கொள்ள வேண்டும். அதற்குத் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் அன்பர்களும் சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான தமிழ் அழிப்பு வேலைகள் நாட்டில் தொடராமல் இருக்க தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்
www.thirutamil.blogspot.com

பெயரில்லா சொன்னது…

எங்கள் நெகிரி மாநிலத்தில் தமிழைக் கெடுக்கும் சில புல்லுருவிகள் இருப்பது உண்மையே. தமிழால் சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழுக்கே துரோகம் செய்யும் "கழிப்பட்ட" ஆசிரியர் கூட்டம் இது. ஏதோ தமிழுக்கே இவர்கள்தான் பொறுப்பு போலவும் தமிழ்ப் பண்டிதர்கள் போலவும் நடந்துகொள்ளும் களவானிக் கூட்டம் இது. உயர் அதிகாரிகள்; பட்டதாரிகள்; நீண்ட அனுபவசாலிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு அலையும் கூட்டம் இது.

ஆனால் உண்மையில் மண்டையில் சரக்கே இல்லாத மண்டுக் கூட்டம்! மழுங்கைக் கூட்டம்!

இவனா தமிழன் இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொருக்காது- இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைப்பேறு
என்று விவேகன் என்பவர் எழுதியிக்கும் கருத்து முற்றிலும் உண்மை.

இந்தியர் என்ற பொதுப் பெயரில் புகுந்துகொண்டு தமிழ் மூலம் வரும் காசுபணத்தைக் கொள்ளயடித்துப் பிழைக்கும் கூட்டம் இது. எந்தக் காலத்திலும் தமிழுக்கு நன்மை செய்யாத இந்தக் கூட்டம் திருந்தாதக் கூட்டம். இவர்களுக்கு மேலிடத்தில் சிலருடைய ஆதரவும் உதவியும் இருக்கிறது. அந்த தைரியத்தில்தான் இந்தக் கூட்டம் பொல்லாத ஆட்டம் போடுகிறது.

இந்தக் கூட்டத்தின் கொட்டம் தாங்க முடியாமல் நெகிரியில் பல ஆசிரியர்கள் தவிக்கிறோம். இவர்களின் கிடுக்குப்பிடியை அடித்து நொறுக்கிப் போட புறப்பட்டிருக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.


அன்புடன்,
தமிழ்மானமுள்ள தமிழ் ஆசிரியன்,
இளையவேல்,
சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

உங்கள் இணையத் தளத்தில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது என்று எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பிறகுதான் தமிழுயிர் இணையத் தளத்தைப் பார்த்தேன். அந்த இலக்கண சிப்பத்தை உருவாக்கி தமிழுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ள ஆசிரிய குழுவினருக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் கொஞ்சம் கடுமை இருந்தாலும், அது தேவையானது என்றே நினைக்கிறேன். சில சமயங்களில் கண்ணியமான முறையில் சொன்னால் சிலர் கேட்டுக்கொள்வதே இல்லை. அந்த ஆசிரியர் குழுவினர் தங்கள் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் சிப்பத்தை மீட்டுக் கொள்ள வேண்டும்.

மற்றபடி, தமிழுயிர் இணையத் தளத்தை இபோதுதான் முதல் முறையாக பார்க்கிரேன். சிறப்பாக உள்ளது. தமிழ்மொழி சம்பந்தமான நல்ல செய்திகள் உள்ளன. தமிழுக்கு துரோகம் செய்யும் ஆட்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அவர்களுக்கு உறைக்கும் வகையில் கண்டித்து எழுதி உள்ளீர்கள். நம் நாட்டில் தமிழுயிர் மாதிரி ஒரு இணையத் தளம் இல்லாத குறையை தீர்த்து உள்ள தமிழுயிருக்கும் அதன் ஆசிரியருக்கும் என்னுடைய பாராட்டுகளைக் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.
இப்படிக்கு,
திருமதி.கோதைநாயகி
கடாரம்.

பெயரில்லா சொன்னது…

vanakkam.
saya ingin mengutuk perlakuan sekumpulan guru yang cuba memperdayakan pelajar sekolah menengah dengan menyelitkan perkataan-perkataan sanskrit. Umum mengetahui bahawa sanskrit tidak membawa apa-apa kebaikan pun kepada bahasa tamil. Ini adalah perbuatan keji dan bermotif untuk menghancurkan bahasa tamil yang tercinta.

saya mohon maaf kerana tidak dapat menulis komen ini menggunakan bahasa tamil. Ini kerana saya tidak mengetahui caranya. Mungkin pihak weblog tamiluyir boleh membantu saya dan juga orang lain yang menghadapi masalah ini. Kalau boleh tunjuk ajarkan saya cara-cara untuk menghantar komen ini di dalam bahasa tamil.

sekian. nandri vanakkam.

tamiluyirai nesikkiren.
sundramoorthy,
kuala lumpur

பெயரில்லா சொன்னது…

தாய் புணர்ந்தது ஒரு நாயை
நாய் புணர்ந்தது ஒரு பேயை
தப்பிப் பிறந்தது ஒரு பன்றி
தமிழன் நிறத்தொடு ஒன்றி

என்று ஒரு மலேசியப் பாவலன் இந்தக் கேடு கெட்டவர்களுக்காத்தான் பாடியுள்ளார்.

தமிழால் பிழைக்கும் தமிழன்
வீரமாமணி - தலைநகர்

பெயரில்லா சொன்னது…

தமிழுயிரை சிறப்பாக வழிநடத்தும் ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.

நெகிரி மாநிலத்தில் வெளியிடப்பட்ட 'தமிழ் இலக்கணச் சிப்பம்' தொடர்பாக எழுந்த சிக்கலில் என்னுடைய சிறிய பங்காக ஒரு விளக்கக் கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை 9.3.2008இல் மலேசிய நண்பனில் (சுருக்கமாக)வெளிவந்தது. அக்கட்டுரையை முழுமையாக என்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன். அன்பர்கள் படித்து பயனடைய வேண்டுகிறேன்.

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்