வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 30 மே, 2009

தமிழீழம் மலரும்; அது காலத்தின் கட்டாயம் -தமிழருவிமணியன் (காணொளி)

@ஆய்தன்:-
காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்

வெள்ளி, 29 மே, 2009

சிங்களத் தூதுவர் மலேசியத் தமிழர்களை இழிவுபடுத்துவதா?

சிறிலங்கா அரசு நடத்தும் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த 24-5-2009ஆம் நாள் பத்துமலையில் மாபெரும் கண்டனப் பேரணி கடந்த நடத்தப்பட்டது.

அப்பேரணியில் கலந்துகொண்ட மலேசியத் தமிழ் மக்களை மலேசியாவிற்கான சிறிலங்கா தூதுதர் “கோமாளிகள்” என்று வருணித்துள்ளார்.

மலேசியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் டி.டி. இரணசிங்கே மகா ஆணவமாகப் பேசியுள்ள இந்த பேச்சால் மலேசியர்கள் கடும் சினம் அடைந்துள்ளனர். இந்தச் சிங்கள காடையன் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்பாக, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-


“இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரைக் கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுபோல் உள்ளது.

மலேசியத் தமிழர்கள் பொதுவாகவே தங்களது ஈழத்து சகோதரர்கள் மீது அளவிலா அன்பும், பற்றும் கொண்டுள்ளவர்கள். தங்களது இன சகோதரர்கள் ஈழத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கொலைவெறிப் போரில் சிக்கித் தவிப்பதைக் கண்டு, மனம் வெதும்பி அமைதியான முறையில் நடத்தும் கண்டனக் கூட்டங்களை ஏளனம் செய்வதைப்போல் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கை தூதரின் பேச்சை நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனிமேல் இதுப்போன்ற முட்டாள் தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன்.

எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் சொல்லென்னா துயரைக் கண்டு மனம் வெதும்பிகிடக்கும் எங்களை, மலேசியாவில் உள்ள சிங்கள காடையர் அரசின் பிரதிநிதிகள் வீணே சீண்டி பார்க்கவேண்டாம். நாங்கள் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளமையால் யாரும் எங்களை வீணே சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இந்நாட்டு தமிழர்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல என்பதைத் தமிழினத்தின் எதிரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகளை வென்று விட்டோம் என்ற வெற்று மாயையில் உழன்றுக்கொண்டிருக்கும் இந்த சிங்கள காடையர் பிரதிநிதிகளின் பேச்சுகள் எல்லாம், நாங்கள் எங்கள் ஈழத் தமிழ் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பை சிதைத்து விடாது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றுமே எமது ஈழத்தமிழ் உறவுகளை மறந்து விடமாட்டோம். ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று தங்கள் மண்ணில் சுதந்திரத்தோடு வாழ மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். "

இவ்வாறு மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலேசியத்தில் தூதுவராகக் குப்பைக்கொட்டும் டி.டி.ரணசிங்கே என்ற இந்தச் சிங்களக் காடையன் வந்த வேலையை மட்டும் பார்த்துக்கொள்வது நல்லது. அதைவிட்டு, மலேசியத் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் சண்டாள வேலையைச் செய்ய வேண்டாம் என மலேசியத் தமிழர்கள் சார்பில் தமிழுயிர் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. உன்னுடைய காடைத்தனத்தை எங்களின் மீது காட்ட வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றோம்.

துப்பாக்கி தூக்கிய ஈழப் போராளிகளையே வென்றுவிட்டோம்.. இந்த மலேசியத் தமிழர்கள் நீங்கள் என்னடா.. சுண்டைக்காய் என்று நினைத்து அந்தச் சிங்களக் காடையன் கொக்கரித்திருப்பதை மலேசியத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மலேசியத் தமிழர்கள் 'கோமாளிகள்' என்ற மகா இழிவான சொல்லை சிங்களத் தூதுவக் காடையன் பேசுகிறான் என்றால், அவன் எந்த அளவுக்கு மலேசியத் தமிழர்களை எடைபோட்டு வைத்திருக்கிறான் என்பது புரிகிறது.

எவன் வந்து ஏசினாலும்.. ஏறி மிதித்தாலும்.. எதிரே நின்று முகத்திலேயே மூத்திரம் அடித்தாலும்.. ஏன் கொத்துக்குண்டை வீசி கொன்றே போட்டாலும் தமிழர்கள் சிலருக்கு சூடு சுரணை.. எதுவுமே வருவது கிடையாது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துதான் அவன் அவ்வாறு பேசியிருக்கிறான்.

இதனைக் கண்டு மலேசியத் தமிழர்களும் அந்தத் தமிழர்களின் தலைவர்களாக இருப்பவர்களும் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் காண தமிழுயிர் ஆவலுடன் காத்திருக்கிறது.

@ஆய்தன்:-
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!

1.மலேசிய இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) இளைஞர் பிரிவின் கண்டனம்

பி.கு: தாம் மலேசியத் தமிழர்களைக் கோமாளிகள் என கூறவில்லை என்று சிறிலங்கா தூதுவர் மறுத்துள்ளார்.

தமிழர்களே... தலைவர் இருக்கிறார் கலங்காதீர்..!


‘கலங்காதீர்கள்; தக்க நேரத்தில் பிரபாகரன் வருவார்!’ - பழ.நெடுமாறன்


பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மீண்டும் கூறியுள்ளார்.


பாளையில் நடந்த ஒரு திருமண விழாவில் அவர் பேசியதாவது:-


எனக்குப் பொய் சொல்லி பழக்கமில்லை. அதுவும் ஒரு இனத்துக்கே துரோகம் செய்யும் அளவுக்கு பொய் சொல்லும் பழக்கம் நமது தோழர்களுக்கும்கூட கிடையாது. அதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பொய்கள் மூலம் பதவி சுகங்களில் திளைக்கிறார்கள்.

தோழர்களே - எத்தனையோ துரோகங்களையும், இன மோதல்களையும் தாண்டி வந்ததுதான் தமிழர் வரலாறு.

ஆனால் எதைக் கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனைப் போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். இப்போது அவரைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும்.

வைகோ எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராசீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர் தமிழினத்தின் எதிரிகள்.

கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிப்பட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். இருக்கட்டும்… இப்போது அழிந்தவர்களாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொரில்லா முறையில் தாக்க வருவார்கள்… தலைவர் பிரபாகரன் தலைமையில். இதில் ஒரே சிக்கல்… இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும் அந்த வீரத் தம்பிகள்.

அவர் இறந்து விட்டார் என்பதை உலக தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ஆயுதம் தாங்காத போராளிகளான நாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும்.

இராசபக்சே தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டுவிட்டார். இனி மன்மோகன்சிங், சோனியாவை அவர் மதிக்கமாட்டார். இப்போது சீனாவுடன் கைகுலுக்குகிறது இந்தியா… தமிழனை அழிக்கவே இந்த கூட்டணி. குலுக்கிய கைகளில் உள்ள இரத்தத்தைக் கழுவும் மீண்டும் மீண்டும் துரோகத்தைப் பரிசளிக்கத்தான் போகிறது சீனா. இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது அவர்களின் தலையாய இலக்குகளில் ஒன்று. புலிகளின் ஆதிக்கம் இருந்தவரை அவர்களால் முடியாமல் போனது. இனி சீனா காலூன்ற வசதியாகப் போய்விட்டது. விரைவில் இது இந்திய - இலங்கை கூட்டணிக்கு புரியத்தான் போகிறது.

பிரபாகரனை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தவர்களும் அவரது அருமையைப் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அவரே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்”, என்றார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த வீடியோ பேட்டியிலும், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்தும், இது பற்றி அடிக்கடி பேசாமல் அமைதி காப்பது இப்போதைக்கு அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

@ஆய்தன்:-
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் கலங்காதே..!!

திங்கள், 25 மே, 2009

அதிர்ச்சி அறிவிப்பும்.. அதற்கான மறுப்பும்.. தொடரும் போரும்..

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
 • தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழம்.
  24 வைகாசி, 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம். (விரிவாக)
இந்தப் பேரதிர்ச்சியான செய்தியைப் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரும் மறுத்துள்ளனர். அந்த மறுப்பு அறிக்கைகள் பின்வருமாறு:-
இதற்கிடையில் ஈழத்தில் இன்னமும் போர் தொடர்வதாக புலிகளின் தளபதி அறிவித்துள்ளார்.

@ஆய்தன்:-
???????????????????????????????????????????????.

சனி, 23 மே, 2009

"(ஈழ) போர்க் குற்றவாளிகளை ஆதரிக்க வேண்டாம்" மலேசிய அரசுக்குக் கோரிக்கைசிறிலங்கா அரசாங்கம் அதன் உள்நாட்டு விவகாரங்களில் ஐநா உறுப்பினர்கள் தலையிடக்கூடாது எனக் கோரும் தீர்மானம் ஒன்றை ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மலேசிய அரசாங்கம் அத்தீர்மானத்திற்கு வழங்கியுள்ள ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்தியன் காங்கிரசு தலைவர் ச. சாமிவேலு மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


சிறிலங்கா அரசாங்கம் தாக்கல் செய்துள்ள இத்தீர்மானம் வரும் திங்கள்கிழமை (மே 25) ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் விவாதிக்கப்படும்.


“மலேசியாவில் வாழும் 1.8 மில்லியன் இந்தியர்களில் 1.4 மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.


“சிறிலங்கா போர்க் குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கு” போர்க் குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினார். (விரிவாக)
@நன்றி:மலேசியாஇன்று
@ஆய்தன்:-
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

மலேசியாவில் தமிழ் ஈழ ஆதரவுப் பேரணியும் வீரவணக்க நிகழ்ச்சியும்


நிகழ்ச்சி 1:- கோலாலும்பூர், பத்துமலையில் மாபெரும் பேரணி

சிங்கள இனவெறி அரசாங்கத்தின் படுகொலைத் தாக்குதலால் மனித இனம் இதுவரையில் கண்டிராத உயிர் இழப்பிற்கும், உடல் உறுப்புகள் இழப்பிற்கும், கற்பிழப்பிற்கும், உடமைகள் இழப்பிற்கும் ஆளாக்கப்பட்டு உணவின்றி, குடிநீரின்றி, வைத்திய உதவிகள் இன்றி புழுவாகத் துடிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் பத்துமலையில் அணித்திரள அழைக்கப்படுகிறார்கள்.


***************************
***************************
நிகழ்ச்சி 2:- பினாங்கு, பட்டர்வெர்த்தில் வீரவணக்கமும் விளக்கமும்

தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம்.

 • நாள் : 24-05-2009 (ஞாயிற்றுக்கிழமை)
 • இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
 • நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல் -(விரிவான செய்தி)
பேச்சாளர்கள்:-
1.பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் இராமசாமி
2.சமூக சேவகர் க.முருகையன்
3.எழுத்தாளர் சை பீர் முகம்மது

(மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128).

@ஆய்தன்:
மலேசியத் தமிழ் நெஞ்சங்களே,
நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நமது அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கு அலையென திரண்டு வாருங்கள்!!

வெள்ளி, 22 மே, 2009

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: புலிகள் அறிவிப்பு


தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்பதை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். (மேலும் படிக்க)


@ஆய்தன்:-

தமிழினத் தலைவர் - தமிழீழப் போராளி - உலகத் தமிழரின் தானைத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்க..! வாழ்க..! வாழ்க பல்லாண்டு..!

வியாழன், 21 மே, 2009

ஈழப் போர் குறித்து சி.என்.என். வாக்கெடுப்பு


இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? என சி.என்.என் தொலைக்காட்சி வாக்கெடுப்பு ஒன்றை தொடங்கியுள்ளது.

கடந்த நாட்களிலும் பல வாக்கெடுப்புக்களை சி.என்.என் தொலைக்காட்சி நடத்தியிருந்து குறிப்பிடத்தக்கது. இருந்தும் இப்போது இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, (இந்தப் பதிவிடும் வரை) ஆம் என்று 39792 (28%); இப்போதைக்கு ஆம் என்று 2428 (2%); இல்லை என்று 97675 (70%) ஓட்டுகள் விழுந்துள்ளன.

அந்த வாக்கெடுப்பிற்கு நீங்களும் வாக்களிக்க விரும்பினால் கீழேயுள்ள இணைப்பு மூலமாக வாக்களிக்கலாம்.

உங்கள் ஓட்டளிக்க இங்கே அழுத்தவும்

எமது போராட்டம் தொடரும்..-"பிரபாகரன்" (காணொளி)

புதன், 20 மே, 2009

தலைவர் பிரபாகரன் இறப்பு குறித்த ஆய்வு:- மக்கள் தொலைக்காட்சி

தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறப்பு குறித்து மக்கள் தொலைக்காட்சியின் ஆய்வுச் செய்தி இது:-

செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன் என்று காட்டப்பட்டவர் பிரபாகரன் தானா?
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகம் அறிவித்துள்ளது. அதனையே உலக ஊடகங்கள் அனைத்தும் வழிமொழிந்துள்ளன.
பிரபாகரன் என்று படத்தில் காட்டப்பட்டவர் உண்மையிலேயே பிரபாகரன் தானா? என்ற ஐயப்பாடு பெரிய அளவில் இப்போது வலுத்துள்ளது. அதற்கான அடிப்படைகள் இதோ:-
இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. முதலாவதாக உள்ள படம் 2004-கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.
*4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?
*முகத்தில் இருந்த சுருக்கங்கள் எங்கே?
*இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?
*கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பார்த்த அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள். கொல்லப் பட்டவரின் முகம் இப்படியா இருக்கும்?
*இருபத்தி நான்கு மணி நேர தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிரதேசத்தில் இருந்த பிரபாகரன் இப்படி கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா?
இவற்றில் சில உண்மைகள் இருப்பதை இந்நேரம் சற்று உணர்ந்திருக்கலாம். இவைபோக, இன்னும் இப்படி நிறைய ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. அவற்றைப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

1.எதையும் நம்ப வேண்டாம்

2.நெகிழி அறுவை (Plastic Surgery) மூலம் சோடிக்கப்பட்ட முகம்

3.நெகிழி அறுவை (Plastic Surgery) பிரபாகரன் மாண்டார்

4.பிரபாகரன் சந்தித்த "மரணங்கள்" 15

5.பிரபாகரனை எத்தனை முறை கொல்லுவார்கள்

@ஆய்தன்:-

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (தமிழ்மறை)

திங்கள், 18 மே, 2009

தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!! உண்மையா?

ன்னிப் போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது மகன் சார்லசு ஆண்டனியும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் செய்தியில் உண்மையில்லை; இது வெறும் வதந்தி; எஞ்சியுள்ள தமிழ் மக்களைப் பூண்டோடு அழித்தொழிக்க சிறிலங்கா மேற்கொள்ளும் வஞ்சகமான பொய்ப் பரப்புரை என்ற செய்திகளும் கசிந்துள்ளன.

இன்று காலைதான் அவர் உயிருடன் இருப்பதாக புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சில மணி நேரம் கழித்து பிரபாகரனை சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக அரச தரப்பினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பி.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை உலக முன்னணி ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டு வருகின்றன.

இவற்றையும் படிக்க:-

1.இரண்டாயிரம் போராளிகளுடன் பிரபாகரன் இருக்கிறார்

2.முற்றுகையை உடைத்துத் தலைவர் வெளியேறினார்

3.பிரபாகரன் குறித்த வதந்திகளை நம்பாதீர்

4.பிரபாகரன் இன்னும் களத்திலேயே உள்ளார்

5.பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உறுதிபடுத்தப்படவில்லை

6.பிரபாகரன் நலமாக இருக்கிறார்- பழ.நெடுமாறன்

7.தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளில் உண்மையில்லை

@ஆய்தன்:

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 17 மே, 2009

ஈழ யுத்தம் முடிந்ததா? இராணுவம் தனது இலக்கை அடைந்ததா? -அலசல்

ராணுவத்தின் முன் நகர்வுகள் என்ன தற்போது இராணுவம் எங்கு நிலை கொண்டுள்ளது என்பது பற்றி பல குழப்பமான தகவல்கள் பல இணையங்களில் உலாவருகின்றன. உண்மை நிலை என்ன என ஆராய்ந்து பார்த்தால், கடந்த 2 வாரமாக இராணுவம் ஒரு தரையிறக்க முயற்சியை மேற்கொண்டு எஞ்சியுள்ள இடங்களை கைப்பற்ற பாரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் இங்கு இணைத்திருக்கும் வரைபடத்தை பார்வையிடுங்கள்.

இராணுவத்தின் Task Force வலைஞர் மடப்பகுதில் நிலைகொண்டிருந்தது, 53வது படையணி மத்தளான் புதுமத்தளான்னில் இருந்து வட்டுவாகல் பக்கமாக நகர்ந்தது, வட்டுவாகல் பாலத்திற்கு பின்புறமாக நிலைகொண்டிருந்த 59வது படைப்பிரிவினர் முறையே வலைஞர்மடம் நோக்கி நகரத்தொடங்கினர். இதனால் பெரும் சமர் மூண்டது. வட்டுவாகல் பகுதியில் இருந்து முன்னேறிய இராணுவத்தினரை வட்டுவாகல் பாலத்தில் வழிமறித்து புலிகள் கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்தனர், பெரும் இழப்பைச் சந்தித்த 59வது படைப்பிரிவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வரை அவ்விடத்திலேயே புலிகளால் முடக்கப்பட்டனர். பாரிய சூட்டாதரவுடன் 58வது படைப்பிரிவினர் கடலேரமாக முன்னேறத் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்தபோது புலிகளின் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

இத்தாக்குதலை சமாளிக்க முடியாது அவர்கள் பலதடவை விமானப்படையினரது உதவியை நாடியுள்ளனர், சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் சுமார் 17 முறை வான் தாக்குதல்கள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது, இதில் பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றைமேற்கொண்டால் எஞ்சியிருக்கும் இடங்களை இலகுவில் மீட்டுவிடலாம் என கருதிய சரத்பொன்சேகா அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பல தரையிறக்க முயற்சிகளை இராணுவம் மேற்கொள்ள முனைந்தன.

இந்த வேளையில் கடற் கரும்புலிகள் தமது திறமையால் பல தரையிறக்க முயற்சிகளை தோற்கடித்தனர். முள்ளிவாய்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த பாரிய மன் அரன் இராணுவத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. அத்துடன் தரையிறக்க முயற்சிகளும் தோல்வியைத்தழுவ, கடந்த 3 தினங்களுக்கு முன் ராணுவத்தினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்தனர். மக்கள் செறிந்துவாழும் பகுதி என்று கூட்ப்பாராமல் அகோர குண்டுமழை பொழிந்தனர். இதன் காரணமாக பல பொதுமக்கள் இறந்தனர்.

நேற்றை தினம் நடந்த உக்கிரமோதலில் கடல்கரை ஓரமாக நகர்ந்த 59வது படையணியின் ஒரு பகுதியினர் முன்னேறி 58வது படைப்பிரிவினரை சந்தித்துள்ளனர். இராணுவத்தின் தரையிறக்கம் காரணமாகவே இவ்விரு படையணிகளும் சந்தித்தனர். தற்போது நந்திக்கடல் களப்பு வழியாக நகரும் 59 படையணியினர் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நகரும் 53வது படையணியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முணைகிறது.

தற்போது எஞ்சியுள்ள சுமார் 1சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் உக்கிர சமர் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அதாவது இராணுவத்தின் 53வது படையணியும், 59வது படையணியும் ஒன்றிணையும் போது அவர்கள் இலக்கு பூர்த்தியாகிவிடும். தற்போது வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் சமர் இடம்பெற்றுவருகிறது. இருப்பினும் ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த யுத்தம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.

கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை தயார்நிலையில் இருக்குமாறு இராணுவம் அறிவித்துள்ளது. எந்தநேரத்திலும் தாம் அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இராணுவம் தனது இலக்கை அடைந்தாலும், இடங்களை காப்பற்றுவதை விட அதைத் தக்கவைப்பதே பெரும் கடினம் என்பது வரலாற்று பூர்வமான உண்மை. ஈராக்கை அமெரிக்கப் படையினர் கைப்பற்றும் போது ஒரு இராணுவ வீரரைக் கூட இழக்கவில்லை. அனால் தற்போது ஆயிரக்கணக்கில் அமெரிக்க இராணுவம்கொல்லப்பட்டுள்ளது. எனவே பரப்பளவு பெரிதாகப் பெரிதாக அதை தக்கவைப்பது, பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடையம். மன்னாரிலோ அல்லது மட்டக்கிளப்பிலோ ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை புலிகள் இன்னும் இழக்கவில்லை என்பதில் ஜயமில்லை. சிறிய ஒரு பரப்பை இறுதியாக கைப்பற்றி, அதனை ஒரு மாபெரும் யுத்தவெற்றியாக காட்டி சிங்கள மக்களிடம் நற்பெயர் எடுக்க இலங்கை அரசு முயல்கிறது

யுத்தத்திற்கு பின் என ஒரு அத்தியாயம் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அந்த அத்தியாயம் இனி தொடரும்போது இலங்கை அரசு அதிர்ச்சியடையும் என்பதில் ஜயமில்லை.

@நன்றி: அதிர்வு இணையம்

வெள்ளி, 15 மே, 2009

ஈழத்தில் இறுதிக் கட்டப் போர்; வரலாறு காணாத மனிதப் பேரழிவு

தற்போது வன்னி தமிழ்நிலத்தில் வரலாறு காணாத இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருக்கிறது.
சிறிலங்கா இராணுவம் கொஞ்சமும் மனித நேயமின்றி இரத்தவெறியுடன்.. கொலைவெறியுடன்.. இறுதிக்கட்டப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் உலகில் இதுவரை எங்குமே நிகழ்ந்திராத மாபெரும் மனிதப் பேரவலம்.. பேரழிப்பு.. இனத் துடைத்தொழிப்பு ஈழத்தில் நிகழக்கூடும்.
கைக்குழந்தைகள் முதற்கொண்டு தாய்மார்கள், முதியோர்கள், நோயாளிகள் என ஒருவரையும் விடாமல் சிறிலங்காவின் கொடூர ஆயுதங்கள் தமிழ் மக்களின் உயிர்களை ஈவு இரக்கமின்றி விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
அந்தக் கொடூரம்.. குரூரம்.. கொலைவெறி.. இரத்த களறியை இணைய ஊடகங்கள் விரிவாக வெளியிட்டு வருகின்றன.
@ஆய்தன்:-
சீ.......!!!!! இத்தனைக் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறதே...!!!! என்ன உலகமடா இது..!??

கொலைகார மகிந்தாவின் சவப்பெட்டி ஏந்தி மலேசியத் தமிழர் போராட்டம்

லேசியத் தமிழர்களால் இன்று 15-05-2009 மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக நண்பகல் 12 மணியளவில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

கோலாலம்புரில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தக்கு முன்பாக கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களின் விவரணப்படங்கள், தேசியத்தலைவரின் உருவப்படங்கள் போன்றவற்றை தாங்கி நின்றவாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதன்போது மகிந்தவின் சவப்பெட்டி ஊர்வலம் நடைபெற்று தூதரகத்துக்கு முன்பாக ஆவேசம் கொண்ட மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது. அத்துடன் கருணாநிதி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் பொம்மைகள் படங்களுக்கு ஆவேசம் கொண்ட மக்களால் செருப்படி வழங்கப்பட்டது.

மலேசியப் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்பேரணிநடைபெற்ற போதும் ஆவேசம் கொண்ட மக்கள் எமது உறவுகள் சிறிலங்காவில் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென முழக்கமிட்டனர்.

@செய்தி & படங்கள்: வர்மன்


@ஆய்தன்:-

ஈழப் போரில் தமிழர்கள் வெற்றிபெற வேண்டும்; தமிழீழம் வென்றெடுக்க வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்கள் வேண்டுதலாகும்...!!

வியாழன், 14 மே, 2009

ஈழச் சிக்கல்:-ஒபாமா முதல் முறையாக கடும் எச்சரிக்கை


மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். (விரிவாகப் படிக்க)
@ஆய்தன்:-
தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கௌவும்.. ஆனால், இறுதியில் தருமமே வெல்லும்..!

புதன், 13 மே, 2009

ஈழக் கொடுமையைத் தடுக்க ஒரு கையொப்பம் இடுங்கள்


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம்.

வளம் நிறைந்த தமிழ் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது.

தமிழர் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள்.

கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை.

சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார்.

கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள்.

என்ன கொடுமையிது!!! மனித வரலாறு கண்டிராத மாபெரும் கொடுமையிது!!!

இந்தக் கொலைபாதகத்தை.. கொலைவெறியை.. கொடூரத்தை.. குரூரத்தை.. குருதி வெறியை.. தடுக்க உங்கள் பங்குக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் தயவுசெய்து கீழே உள்ள விண்ணப்பத்தில் கையொப்பம் இடுங்கள்.

நமது தமிழ் உறவுகளுக்கு.. உடன்பிறப்புகளுக்கு.. உடனே உதவுங்கள்!!

Please sign the petition by clicking Link below

@ஆய்தன்:-
ஈழப்போர், ஈழத்தமிழர் போரல்ல..
உண்மையில், உலகத் தமிழர் போர்..!!

திங்கள், 11 மே, 2009

தமிழக உறவுகளே.! இம்முறை.. ஒரே முறை.. தமிழ் இனநலம் கருதி வாக்களியுங்கள்!

வருகிற மே திங்கள் 13ஆம் நாள் இந்திய நாட்டின் மக்களைவைத் தேர்தலில் ஓட்டளிக்க உள்ள தமிழக உறவுகளுக்கு மலேசிய மண்ணிலிருந்து விடுக்கப்படும் வேண்டுகை இது:-

மது அன்பான தமிழக உறவுகளே,
நீங்கள் வாக்களிக்கும் முன் அருள்கூர்ந்து இவற்றைச் சிந்தியுங்கள்.
இதுவரை நடந்த தேர்தல்களில்..
உங்கள் கட்சிக்காரர் என்பதற்காக
உங்கள் சாதிக்காரர் என்பதற்காக
உங்கள் ஊர்க்காரர் என்பதற்காக
உங்களுக்குப் பணம் கொடுத்தார் என்பதற்காக..
உங்களுக்குப் பதவி கொடுத்தார் என்பதற்காக..
நீங்கள் யார் யாருக்கெல்லாமோ வாக்களித்திருக்கலாம்.
ஆனால், இந்த முறை.. ஒரே ஒரு முறை..
தமிழ் இனத்துக்காக உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்!
நமது தமிழ் இனத்தின் இருப்பை உலகத்திற்குக் காட்டுங்கள்!
மானமுள்ள தமிழர்கள் இன்றும் தமிழகத்தில் வாழுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்!
உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தாலும் தட்டிக் கேட்டத் தமிழகத் தமிழன் இருக்கிறான் என்பதை அறிவியுங்கள்!
வரலாற்றில் பதிவாக உள்ள இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் முன் இதனைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்:-
* ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டில் நாம் போராடியும், ஈழத்தில் போர் நிறுத்தம் வரவில்லையே ஏன்?

* வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் ஈழப்போரை இயக்குவது நடுவண் காங்கிரசு ஆட்சியாளர்கள்தாம்.!

* போரை இயக்குபவர்களை நடுநிலையாளர்களாகக் கருதி நாம் அவர்களிடம் போர் நிறுத்தக் கோரிக்கை வைத்தோம். இது நமது முதல்குறை.

* ரேடார் முதல் போசுபரசு பீரங்கிவரை இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைக்குக் கொடுத்துள்ளார்கள்.

* இந்தியக் கடற்படை ஈழ மண்ணைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளது. இந்தி வான்படையும் இப்போரில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்களை அழிக்கப் பல்லாயிரம் கோடி ரூபாய்களை இந்தியா கொட்டிக் கொடுக்கிறது இலங்கைக்கு!

* முல்லைத் தீவின் முகப்பில் குவியல் குவியலாய்த் தமிழர் பிணங்கள்; கைகள் துண்டிக்கப்பட்டு கால்கள் துண்டிக்கப்பட்டு குழந்தைகள்!

* “தமிழ் ஆண் கடலுக்கு, தமிழ்ப் பெண் இராணுவ வீரனுக்கு” என்று கொக்கரிக்கிறான் கோத்தபய இராசபட்சே!
* பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரவழைத்துத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் குண்டு போட்டுக் கொல்கிறார்கள்.
* ஒரே இரவில் பல்லாயிர குண்டுகளைப் போட்டு இரண்டாயிரம் தமிழர்களை மிக மிக கொடூரமாகப் படுகொலை செய்கிறார்கள்.
* இந்த மனித அழிவை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்துப் பார்த்து மனம் பதைத்துத் தீக்குளித்து மடிகிறார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
* தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேர்க்கு மேல் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதற்கான துணிச்சலை இந்திய அரசுதான் சிங்களப் படைக்கு அளித்து வருகிறது.
* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் உள்ளிட்டவற்றில் தமிழக உரிமைகளைப் பக்கத்து மாநிலங்கள் பறிப்பதற்கு இந்திய அரசு தான் மறைமுகமாகத் துணை செய்கிறது.
* ஈழத்திலிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்தாலும் தமிழர்களைப் பகையினமாகத்தான் தில்லி ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். தமிழர் அவர்களுக்குப் பகையாளி; சிங்களர் அவர்களுக்குப் பங்காளி.
* ஈழத்தமிழ் இனத்தை அழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள இந்தியக் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டாவிட்டால், நம் இனம் பூண்டோடு அழிந்துவிடும்.
* தற்காப்புணர்ச்சியும், தன்மான உணர்ச்சியும் இல்லையேல் ஈழத்தில் நம் கண் முன்னால் தமிழ் இனம் அழிந்துவிடும். தமிழ்நாட்டில் நாம் கொத்தடிமைகள் ஆக்கப்படுவோம்!
2009 மே 13-ஆம் நாள் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
தீக்குளித்த தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்!;!
அன்றாடம் ஈழத்தில் கொல்லப்படும் ஈழத்தமிழர் நினைவு அனலாக எரியட்டும்.
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடாதே ஓட்டு!
தமிழினத்திற்கு வைக்காதே வேட்டு
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடும் வாக்கு!
தமிழினத்திற்குப் போடும் தூக்கு

@ஆய்தன்:-
ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை - உள்ளத்தே
தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும்வரை
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் - மண்டியிட்டால்

பிறப்பின்மேல் ஐயம் பெற்றவர் மேல் ஐயம்
என்று தயக்கமின்றிச் சாற்று!! (பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

ஞாயிறு, 10 மே, 2009

உதயாவின் விடுதலையும்; புதியதோர் விடியலும்

2007 திசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சரியாக 514 நாள்கள் தைப்பிங் தடுப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழர்(இந்தியர்) உரிமைப் போராளி உதயக்குமார் 9-5-2009 பிற்பகல் மணி 2.55க்கு விடுவிக்கப்பட்டார்.

உரிமைப் போராளி உதயக்குமார் விடுதலையான மறுகனமே இடம்பெற்ற அதிரடியான அறிவிப்புகளும் நிகழ்வுகளும் இதோ:-

அதிரடி 1:- என்னை மன்னிக்கவும். இந்த விடுதலைக்காக நான் நன்றி சொல்ல விரும்பவில்லை.
அதிரடி 2:- என்னிடம் வழங்கப்பட்ட நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டாலும் கட்டாயமாக மறுத்துவிட்டேன்.
அதிரடி 3:- நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பமிட மறுத்ததால் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து காவல் வாகனத்தில் குண்டுக்கட்டாக தூக்கிப்போட்டு வெளியேற்றினர்.
அதிரடி 4:- நான் எந்தத் தவறும் செய்யவில்லை; அதனால், எந்த நிபந்தனைக் கடித்தத்திலும் நான் கையொப்பமிட அவசியமில்லை.
அதிரடி 5:- அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்று சேர்ந்தார்.
அதிரடி 6:- நான் இலண்டனில் உள்ள வேதமூர்த்தியுடன் எதிர்காலத் திட்டம் பற்றி பேசுவேன். ஆதரவாளர்கள் கோருவதுபோல் ஒரு கட்சி தோற்றுவிப்பதற்கான உணர்வுகள் வலுவாக இருக்குமானால், நாங்கள் நிச்சயமாக அது பற்றி தீவிரமாகச் சிந்திப்போம்.
அதிரடி 7:- இண்ட்ராப் புகழ் பெற்றிருப்பதால் சிலர் அதனை பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். ஒரு நகைச்சுவை இருக்கிறது: சீனர்களுக்கு “சிண்ட்ராப்” மற்றும் ஜெமமா இஸ்லாமியாவுக்கு “ஜிண்ட்ராப்” போன்றவை உருவாக்க வேண்டுமாம்.
அதிரடி 8:- தன்முன் மண்டியிட்டு தன்னுடைய காலைத் தொடவும் முத்தமிடவும் எத்தனித்த ஆதரவாளர்களை அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதிரடி 9:- உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர்.
அதிரடி 10:- எவ்வளவு இன்னல்கள் வந்த போதிலும் தன்னுடைய போராட்டம் தொடரும்; அதைத் தடுப்பதற்கு அதிகாரவர்க்கத்தை அனுமதிக்கப் போவதில்லை.
@ஆய்தன்:-
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியில் வா..
எளியயென உன்னை இகழந்தவர் நடுங்க
புலியென செயல்செயப் புறப்படு வெளியில்.. (புரட்சிக்கவி பாரதிதாசன்)

சனி, 9 மே, 2009

எழுச்சி கொண்ட இனம்தான் வெல்லும்! வாழும்!


ஒர் உயிரினம் நீடித்து நிலைத்து வாழவேண்டும் என்றால் அந்த இனம் பலமுள்ள இனமாக இருக்க வேண்டும் என்பது டாவின்சியின் கோட்பாட்டுத் தத்துவம். ஒரு மனித இனம் நிலைத்து வாழவேண்டும் என்றால் பலம் மட்டும் போதாது, அது எழுச்சிகொண்ட இனமாகவும் இருக்க வேண்டும் என்பதே புதிய பூகோள தத்துவம். எழுச்சி கொண்ட இனம்தான் விடுதலை அடையும் எனபதே வரலாறு கூறும் தத்துவம்.

எழுச்சி கொள்வோம். விடுதலை அடைவோம்.
*வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் வடக்கு, கிழக்கில் வாழ்வதில்லை

*பின்னர் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் தென்னிலங்கையிலும் வாழ்வதில்லை
*பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
ஏனெனில் நான் தமிழ்நாட்டிலும் வாழ்வதில்லை

**இப்போது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களைக் கொல்கிறார்கள்.
இப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை.....!!!

என்று சொல்லும் நிலையை வைக்காமல் இப்போதே விடுதலைக்காக வீதியில் இறங்குவோம்.

விடுதலை நமதாகும்! (மேலும் படிக்க)
 • பி.கு:-தமிழினப் படுகொலையைக் கண்டித்து மலேசியாவில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்.(விரிவான செய்தி)
@ஆய்தன்:-
எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே..

வியாழன், 7 மே, 2009

தமிழனுக்கு வேண்டும் ஒரு தனியரசு

 • தமிழனாய் பிறந்ததனால்
 • தவிக்கின்றோம் பாரினிலே
 • தடைநீக்கித் தழிழனுக்கு
 • தரணியிலே – ஒரு
 • தனியரசு வேண்டும்
 • கழிகின்ற ஒரு கணமும்
 • அழிகின்றான் ஒரு தமிழன்
 • இருக்கின்ற இனம் வாழ
 • எமக்கு ஒரு அரசு வேண்டும்
 • பிறக்கின்ற குழந்தைக்குப்
 • பெயர் சூட்டத் தந்தை இல்லை
 • பெற்றெடுத்த தாயும்
 • பிணமாகக் கிடக்கின்றாள்
 • பிரசவ வலிதீர்க்க
 • மருத்துவம் எமக்கில்லை
 • துடிக்கின்ற குழந்தைக்கு
 • துயர்; துடைக்கும் ஆச்சிரமம்
 • ஆகாயத் தாக்குதலில்
 • அழிவுற்றுக் கிடக்கிறது
 • நலிவுற்ற எம் மக்கள்
 • நல்வாழ்வுதனைக் காண
 • நல்லரசு ஒன்று
 • நமக்கு வேண்டும்
 • பரம்பரை பரம்பரையாய்
 • பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை
 • பாதகச் சிங்களவன் பறித்து
 • எம்மை அகதியாக்கி
 • புதைக்கின்றான் புத்தர் சிலை
 • பூர்வீக எம் மண்ணில்
 • ஆண்டுகள் கடக்கவிட்டு
 • அகழ்ந்து அதை எடுத்து
 • ஆதாரம் காட்டுகிறான்
 • அழிந்த நகரமென்று
 • புண்ணிய பூமி என்று
 • புதுக் கதைகள் புனைந்து
 • அன்னிய உதவியை
 • ஆதாரமாய் கொண்டு
 • எண்ணிய விதமெல்லாம்
 • ஏவல்கள் பல செய்து
 • சிங்களச் சிறைகளிலே
 • ஆயுள் கைதிகளை
 • சிதறுகுடியேற்றம் செய்து
 • சிதைக்கின்றான்
 • தமிழ் மண்ணை...
 • ஆண்ட பரம்பரைக்கு
 • ஆயுள் காலம்வரை
 • அகதி வாழ்வு
 • அன்னியச் சிங்களவன்
 • ஆளுகையில் எமக்கு
 • அடிமை வாழ்வு- இதை
 • வேடிக்கை பார்க்கும் - இந்த
 • விசித்திர உலகம்,
 • ஆளுக்கொரு வார்தை சொல்லி
 • தமிழர் அழிவையே விளைவாக்கும்
 • அதிசய உலகம்.
 • உலக உருண்டையின்
 • ஒவ்வொரு திசையிலும்
 • உதிரியாய் வாழும் தமிழா!
 • உறையும் பனியிலும் - உன்
 • உறங்காத உளைப்பு உதவாது - உன்
 • உரித்தான சந்ததிக்கு,
 • பாலைவனத்தை பசுமையாக்கி - உன்
 • பருவ வயதினைப் பாழாக்கி
 • எத்தனை காலம்
 • அன்னியன் வீட்டினில்,
 • அன்னியன் நாட்டினில்
 • அடிமை வாழ்வு?
 • வீறுகொண்டு எளு! - தமிழர்
 • விடுதலை யாகத்தில் ஆகுதீயாய்!
 • பூகோள எல்லையிலெல்லாம் -உன்
 • புரட்சி வெடிக்கட்டும்
 • பூமிப் பந்திலே
 • தமிழர் பிரளயம்
 • எரிமலை ஆகட்டும்..!
 • பூண்டோடு ஒழிவது நம் எதிரியாகட்டும்
 • புதுக்காலம் பிறப்பது தமிழருக்காகட்டும்
 • புதுமைகள் படைத்தது தமிழினமாகட்டும்
 • இந்தப் பூமிப்பந்தில் புதிதாகப் பிறப்பது தமிழீழமாகட்டும்.
 • @நன்றி:யாழ் இணையம்

@ஆய்தன்:-
ஆண்டப் பரம்பரை - எம்
தமிழினப் பரம்பரை
மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில்
என்ன குறை..?

செவ்வாய், 5 மே, 2009

சூடு சுரணை இல்லாத ஈனப்பயலா தமிழன்


திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

’’இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை... ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப் படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.

பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவைப் பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.

சர்வாதிகாரி, சகோதரயுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான்.... இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்... பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.

நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். பிரபாகரன் நாடு கேட்டது அவருக்காகவா... உனக்கும் எனக்கும்... இந்த ஒட்டுமொத்த தமிழினத்துக்குமல்லவா... இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே... தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே... எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?

தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சத்தீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்? 430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை... அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை... இறையாண்மையுமில்லை.

தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்.... சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க... அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள்.

'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.

கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான்... இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகிவிட்டோமே என்ற ஆற்றாமை என்னைப் பாடாய்படுத்துகிறது...

திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா... பங்களாதேசத்தைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா...?

10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர்... இலட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம்...?

நண்பர்களே... பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.

இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது... ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீசு, ராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து... என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரசு.

அந்தக் காங்கிரசு இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும்... நான் செத்தாவது இந்தக் காங்கிரசை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

@நன்றி நக்கீரன்

@ஆய்தன்:-

சீமானின் உணர்வும் உணர்ச்சியும், சூடும் சுரணையும் இருக்கின்ற தமிழன்தான்... உண்மைத் தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவனாக இருப்பான்...!! இது உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை..!!

குண்டு போட்டுக் கொல்லுறான்யா: காணொளி

@ஆய்தன்:-

தாங்கலேய்யா தாங்கலேய்யா.. ஈழக் கொடுமை

தாங்கலேய்யா..!!

வெள்ளி, 1 மே, 2009

ஈழத்தின் 'அழுகுரல்' - குறும்படம்

@ஆய்தன்:-

ஈழத்தின் அழுகுரலை அறுத்துப் போகும்

ஈனச் சாதியரே - சிங்கள வெறிநாய்களே..!

வீர இனத்தின் வேர்களை வெட்டிப் போடும்

விலங்காண்டிக் கூட்டமே - சிங்கள தறுதலைகளே..!