வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 25 மே, 2009

அதிர்ச்சி அறிவிப்பும்.. அதற்கான மறுப்பும்.. தொடரும் போரும்..

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
  • தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழம்.
    24 வைகாசி, 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம். (விரிவாக)
இந்தப் பேரதிர்ச்சியான செய்தியைப் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரும் மறுத்துள்ளனர். அந்த மறுப்பு அறிக்கைகள் பின்வருமாறு:-
இதற்கிடையில் ஈழத்தில் இன்னமும் போர் தொடர்வதாக புலிகளின் தளபதி அறிவித்துள்ளார்.

@ஆய்தன்:-
???????????????????????????????????????????????.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

18/5/2009 - இல் இருந்து
பிரபாகரன் இருந்தாரா இறந்தாரா ?
இதுவே இன்று உலக அலசல்.....

ஆனால்,
பிரபாகரன் நமது முக்கியம் அல்ல.
பத்து விரலில் ஏதோ ஒரு விரல் ..
அவர் ஒரு செயலுக்கு காரணம் மட்டுமே.
கர்த்தா அல்ல....

கர்த்தா எனப்படுபவன் இறைவன் ..
செயல் பிரபாகரன் உடையது ,
செயலின் முடிவு இறைவனுடையது .
செயல் தோற்றுவிட்டது என்று
யாருக்கும் சொல்ல இங்கு உரிமை இல்லை.
ஒரு செயலின் முடிவு .....
அதத்குரிய பலாபலனை கொண்டு வந்தே தீரும்.

இதனால் சோர்ந்து, துவண்டு , வருந்தி ,
யாரும் ஆழ்ந்த துயரதிட்குள் போக கூடாது ...
குதூகலிக்க வேண்டும் உள்ளம்...

பிரபாகரன் இருந்தால் என்ன இறந்தால் என்ன ...
அவனது ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு தமிழனையும் பீடித்து
ஒவ்வொருவனையும் பிரபாகரனாகவே ஆக்கும் .
அது,
தனி ஈழம் என்றே முழக்கம் இடும் .
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று குரல் கொடுப்பது
அவனாக இருக்க முடியுமே தவிர ,
அது அவரவராக இருக்க முடியாது.
க்ளோனிங் என்பது உலக சத்யமெனில்
ஒவ்வொரு அணுவும் உயிர் பெறும் என்பதும் உலக சத்யம் தானே....

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்.....
பிரபாகரன் இருந்தாலும் ஆயிரம் பலம்.... இறந்தாலும் ஆயிரம் பலம்.

உலகியல் மக்கள் பிரபாகரனை தலைவன் என்கின்றனர்
ஆன்மீக வாதிகளோ ,
அவன் செவ்வேல் முருகனே என்கின்றனர்.
அவன் தேவருள் வைக்கப்படுவான் என்கின்றனர்.

எனவே , உலக தமிழ் மக்களும் இலங்கை தமிழர்களும்
இந்த பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை .....
காந்தியின் ஆன்மீகப் போராட்டமாக ஆக்க வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ........
அந்த உச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

1993 - ல் எரிற்றியாவை எதியோபியாவில் இருந்து விடுவித்ததைப் போன்று...
அல்லது
செர்பியாவிடம் இருந்து கொசோவோவை பிரித்து
ஐநா தமது பாதுகாப்பில் நிர்வகித்தது போன்று .
அல்லது
போஸ்னியா - ஹெர்செகோவினா சுயாட்சி போன்று ...
தமிழீழம் விதைக்கப்பட வேண்டும்..

இவ்விடயத்தில் உலகத் தமிழ் மக்கள் சத்தியமாக செயல் பட வேண்டும்....

காலம் கோலத்தை மாற்றிவிட்டது...
அது நமக்கு சாதகம் ...
உலகம் .....
தமிழரின் உலகளாவிய எழுச்சியைக் கண்டு விட்டது...
உலகெங்கும் ஈழப் படுகொலையை எதிர்த்து எழுந்த அலைகள் ...
என்றுமே பசுமை மிக்கது .....

இது,
இளைப்பாறும் நேரமில்லை...
நன்கு துயிலும் தருணமில்லை...

இதுவே காலம் !
மீண்டும் ஒரு காந்தியம் ....
அடக்கு முறைகளுக்கும் இடையிலேயும் ...
புவியெங்கும் எழுந்திடல் வேண்டும்..
ஒவ்வொரு அரங்கிலும் ஈழர் தம் கோரிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும்..

"ஈழத்தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "
அதனை உலகெங்கும் ஒலிக்கச் செய்திட வேண்டும் .....

ஓம் சக்தி !