வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 13 மே, 2009

ஈழக் கொடுமையைத் தடுக்க ஒரு கையொப்பம் இடுங்கள்


கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம்.

வளம் நிறைந்த தமிழ் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது.

தமிழர் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள்.

கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை.

சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார்.

கற்பழிப்பு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள்.

என்ன கொடுமையிது!!! மனித வரலாறு கண்டிராத மாபெரும் கொடுமையிது!!!

இந்தக் கொலைபாதகத்தை.. கொலைவெறியை.. கொடூரத்தை.. குரூரத்தை.. குருதி வெறியை.. தடுக்க உங்கள் பங்குக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் தயவுசெய்து கீழே உள்ள விண்ணப்பத்தில் கையொப்பம் இடுங்கள்.

நமது தமிழ் உறவுகளுக்கு.. உடன்பிறப்புகளுக்கு.. உடனே உதவுங்கள்!!

Please sign the petition by clicking Link below

@ஆய்தன்:-
ஈழப்போர், ஈழத்தமிழர் போரல்ல..
உண்மையில், உலகத் தமிழர் போர்..!!

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

மின் கையொப்பம் இட்டுவிட்டேன்.. . இதுவரை பல மின் கையொப்பங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் இடப்பட்டுவிட்டது. ஆனால், இந்த சர்வதேச சமூகம் தமிழர்களின் அழுகுரலைக் கேட்பதாய் தோன்றவில்லை:(