வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 15 மே, 2009

ஈழத்தில் இறுதிக் கட்டப் போர்; வரலாறு காணாத மனிதப் பேரழிவு

தற்போது வன்னி தமிழ்நிலத்தில் வரலாறு காணாத இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருக்கிறது.
சிறிலங்கா இராணுவம் கொஞ்சமும் மனித நேயமின்றி இரத்தவெறியுடன்.. கொலைவெறியுடன்.. இறுதிக்கட்டப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் உலகில் இதுவரை எங்குமே நிகழ்ந்திராத மாபெரும் மனிதப் பேரவலம்.. பேரழிப்பு.. இனத் துடைத்தொழிப்பு ஈழத்தில் நிகழக்கூடும்.
கைக்குழந்தைகள் முதற்கொண்டு தாய்மார்கள், முதியோர்கள், நோயாளிகள் என ஒருவரையும் விடாமல் சிறிலங்காவின் கொடூர ஆயுதங்கள் தமிழ் மக்களின் உயிர்களை ஈவு இரக்கமின்றி விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
அந்தக் கொடூரம்.. குரூரம்.. கொலைவெறி.. இரத்த களறியை இணைய ஊடகங்கள் விரிவாக வெளியிட்டு வருகின்றன.
@ஆய்தன்:-
சீ.......!!!!! இத்தனைக் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறதே...!!!! என்ன உலகமடா இது..!??

கருத்துகள் இல்லை: