சிங்களத் தூதுவர் மலேசியத் தமிழர்களை இழிவுபடுத்துவதா?
சிறிலங்கா அரசு நடத்தும் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த 24-5-2009ஆம் நாள் பத்துமலையில் மாபெரும் கண்டனப் பேரணி கடந்த நடத்தப்பட்டது.
அப்பேரணியில் கலந்துகொண்ட மலேசியத் தமிழ் மக்களை மலேசியாவிற்கான சிறிலங்கா தூதுதர் “கோமாளிகள்” என்று வருணித்துள்ளார்.
மலேசியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் டி.டி. இரணசிங்கே மகா ஆணவமாகப் பேசியுள்ள இந்த பேச்சால் மலேசியர்கள் கடும் சினம் அடைந்துள்ளனர். இந்தச் சிங்கள காடையன் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பாக, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
“இலங்கை இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடுரமான அழிப்புப்போரைக் கண்டிக்கும் மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மலேசியாவிற்கான தூதர் டாக்டர் டி.டி ரனசிங்கே மலேசியத்தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர வேண்டும். சிங்கள தூதர் எங்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலை வளாகத்தில் ஒன்றுகூடி இலங்கை இனவெறி அரசின் அராஜகங்களை கண்டித்த மலேசியத்தமிழர்களை கோமாளிகள் என்று அழைப்பதற்கு இந்த சிங்கள காடையர் தூதருக்கு தைரியம் கொடுத்தது யார்? ரனசிங்கேவின் கூற்றானது பத்துமலையில் கூடிய தமிழர்களை மட்டுமின்றி நாடெங்கிலும் இலங்கை இனவெறியர்களை கண்டிக்கும் தமிழர்களை ஏளனம் செய்வதுபோல் உள்ளது.
மலேசியத் தமிழர்கள் பொதுவாகவே தங்களது ஈழத்து சகோதரர்கள் மீது அளவிலா அன்பும், பற்றும் கொண்டுள்ளவர்கள். தங்களது இன சகோதரர்கள் ஈழத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கொலைவெறிப் போரில் சிக்கித் தவிப்பதைக் கண்டு, மனம் வெதும்பி அமைதியான முறையில் நடத்தும் கண்டனக் கூட்டங்களை ஏளனம் செய்வதைப்போல் அமைந்துள்ள மலேசியாவிற்கான இலங்கை தூதரின் பேச்சை நான் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இனிமேல் இதுப்போன்ற முட்டாள் தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன்.
எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் சொல்லென்னா துயரைக் கண்டு மனம் வெதும்பிகிடக்கும் எங்களை, மலேசியாவில் உள்ள சிங்கள காடையர் அரசின் பிரதிநிதிகள் வீணே சீண்டி பார்க்கவேண்டாம். நாங்கள் அமைதி வழியில் நம்பிக்கை கொண்டுள்ளமையால் யாரும் எங்களை வீணே சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணி விடவேண்டாம். இந்நாட்டு தமிழர்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல என்பதைத் தமிழினத்தின் எதிரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
புலிகளை வென்று விட்டோம் என்ற வெற்று மாயையில் உழன்றுக்கொண்டிருக்கும் இந்த சிங்கள காடையர் பிரதிநிதிகளின் பேச்சுகள் எல்லாம், நாங்கள் எங்கள் ஈழத் தமிழ் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பை சிதைத்து விடாது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றுமே எமது ஈழத்தமிழ் உறவுகளை மறந்து விடமாட்டோம். ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று தங்கள் மண்ணில் சுதந்திரத்தோடு வாழ மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். "
இவ்வாறு மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேசியத்தில் தூதுவராகக் குப்பைக்கொட்டும் டி.டி.ரணசிங்கே என்ற இந்தச் சிங்களக் காடையன் வந்த வேலையை மட்டும் பார்த்துக்கொள்வது நல்லது. அதைவிட்டு, மலேசியத் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் சண்டாள வேலையைச் செய்ய வேண்டாம் என மலேசியத் தமிழர்கள் சார்பில் தமிழுயிர் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. உன்னுடைய காடைத்தனத்தை எங்களின் மீது காட்ட வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றோம்.
துப்பாக்கி தூக்கிய ஈழப் போராளிகளையே வென்றுவிட்டோம்.. இந்த மலேசியத் தமிழர்கள் நீங்கள் என்னடா.. சுண்டைக்காய் என்று நினைத்து அந்தச் சிங்களக் காடையன் கொக்கரித்திருப்பதை மலேசியத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மலேசியத் தமிழர்கள் 'கோமாளிகள்' என்ற மகா இழிவான சொல்லை சிங்களத் தூதுவக் காடையன் பேசுகிறான் என்றால், அவன் எந்த அளவுக்கு மலேசியத் தமிழர்களை எடைபோட்டு வைத்திருக்கிறான் என்பது புரிகிறது.
எவன் வந்து ஏசினாலும்.. ஏறி மிதித்தாலும்.. எதிரே நின்று முகத்திலேயே மூத்திரம் அடித்தாலும்.. ஏன் கொத்துக்குண்டை வீசி கொன்றே போட்டாலும் தமிழர்கள் சிலருக்கு சூடு சுரணை.. எதுவுமே வருவது கிடையாது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துதான் அவன் அவ்வாறு பேசியிருக்கிறான்.
இதனைக் கண்டு மலேசியத் தமிழர்களும் அந்தத் தமிழர்களின் தலைவர்களாக இருப்பவர்களும் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் காண தமிழுயிர் ஆவலுடன் காத்திருக்கிறது.
@ஆய்தன்:-
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!
1.மலேசிய இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) இளைஞர் பிரிவின் கண்டனம்
பி.கு: தாம் மலேசியத் தமிழர்களைக் கோமாளிகள் என கூறவில்லை என்று சிறிலங்கா தூதுவர் மறுத்துள்ளார்.
2 கருத்துகள்:
இங்குள்ள மக்களின் உணர்வுகளை மதிக்காத இலங்கை தூதரை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இலங்கை தூதரகத்தையும் உடனடியாக மூடிட வேண்டும்.
தமிழனைத்தாழ்த்துவதென்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல, அதைக்கண்டும், இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் நிலைமையையும் தெரிந்து வைத்துக்கொன்டே "கோமாளிகள்" அடைமொழி நமக்கு தரப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள், நமது ஆளும்கட்சி அரசியல் சிங்கங்கள்? எப்படி இழந்துவிட்ட நமது மானத்தை மீட்டுத்தருகிரார்கள் என்பதை!
கருத்துரையிடுக