மலேசியாவில் தமிழ் ஈழ ஆதரவுப் பேரணியும் வீரவணக்க நிகழ்ச்சியும்
நிகழ்ச்சி 1:- கோலாலும்பூர், பத்துமலையில் மாபெரும் பேரணி
சிங்கள இனவெறி அரசாங்கத்தின் படுகொலைத் தாக்குதலால் மனித இனம் இதுவரையில் கண்டிராத உயிர் இழப்பிற்கும், உடல் உறுப்புகள் இழப்பிற்கும், கற்பிழப்பிற்கும், உடமைகள் இழப்பிற்கும் ஆளாக்கப்பட்டு உணவின்றி, குடிநீரின்றி, வைத்திய உதவிகள் இன்றி புழுவாகத் துடிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் பத்துமலையில் அணித்திரள அழைக்கப்படுகிறார்கள்.
- நாள்:- ஞாயிற்றுக்கிழமை 24.05.09
- நேரம்:-காலை மணி 10.00 - 1.00 வரையில் -(விரிவான செய்தி)
***************************
***************************
நிகழ்ச்சி 2:- பினாங்கு, பட்டர்வெர்த்தில் வீரவணக்கமும் விளக்கமும்
தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம்.
- நாள் : 24-05-2009 (ஞாயிற்றுக்கிழமை)
- இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
- நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல் -(விரிவான செய்தி)
பேச்சாளர்கள்:-
1.பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் இராமசாமி
2.சமூக சேவகர் க.முருகையன்
3.எழுத்தாளர் சை பீர் முகம்மது
(மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128).
@ஆய்தன்:
மலேசியத் தமிழ் நெஞ்சங்களே,
நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நமது அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கு அலையென திரண்டு வாருங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக