வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 29 மே, 2009

தமிழர்களே... தலைவர் இருக்கிறார் கலங்காதீர்..!


‘கலங்காதீர்கள்; தக்க நேரத்தில் பிரபாகரன் வருவார்!’ - பழ.நெடுமாறன்


பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மீண்டும் கூறியுள்ளார்.


பாளையில் நடந்த ஒரு திருமண விழாவில் அவர் பேசியதாவது:-


எனக்குப் பொய் சொல்லி பழக்கமில்லை. அதுவும் ஒரு இனத்துக்கே துரோகம் செய்யும் அளவுக்கு பொய் சொல்லும் பழக்கம் நமது தோழர்களுக்கும்கூட கிடையாது. அதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பொய்கள் மூலம் பதவி சுகங்களில் திளைக்கிறார்கள்.

தோழர்களே - எத்தனையோ துரோகங்களையும், இன மோதல்களையும் தாண்டி வந்ததுதான் தமிழர் வரலாறு.

ஆனால் எதைக் கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனைப் போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். இப்போது அவரைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும்.

வைகோ எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராசீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர் தமிழினத்தின் எதிரிகள்.

கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிப்பட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். இருக்கட்டும்… இப்போது அழிந்தவர்களாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொரில்லா முறையில் தாக்க வருவார்கள்… தலைவர் பிரபாகரன் தலைமையில். இதில் ஒரே சிக்கல்… இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும் அந்த வீரத் தம்பிகள்.

அவர் இறந்து விட்டார் என்பதை உலக தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ஆயுதம் தாங்காத போராளிகளான நாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும்.

இராசபக்சே தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டுவிட்டார். இனி மன்மோகன்சிங், சோனியாவை அவர் மதிக்கமாட்டார். இப்போது சீனாவுடன் கைகுலுக்குகிறது இந்தியா… தமிழனை அழிக்கவே இந்த கூட்டணி. குலுக்கிய கைகளில் உள்ள இரத்தத்தைக் கழுவும் மீண்டும் மீண்டும் துரோகத்தைப் பரிசளிக்கத்தான் போகிறது சீனா. இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது அவர்களின் தலையாய இலக்குகளில் ஒன்று. புலிகளின் ஆதிக்கம் இருந்தவரை அவர்களால் முடியாமல் போனது. இனி சீனா காலூன்ற வசதியாகப் போய்விட்டது. விரைவில் இது இந்திய - இலங்கை கூட்டணிக்கு புரியத்தான் போகிறது.

பிரபாகரனை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தவர்களும் அவரது அருமையைப் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அவரே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்”, என்றார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த வீடியோ பேட்டியிலும், பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்தும், இது பற்றி அடிக்கடி பேசாமல் அமைதி காப்பது இப்போதைக்கு அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

@ஆய்தன்:-
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் கலங்காதே..!!

6 கருத்துகள்:

வெத்து வேட்டு சொன்னது…

பிரபாகரன் மீண்டும் வந்து என்ன புடுங்குவார்?

ஆதவன் சொன்னது…

அன்புள்ள வெத்து வேட்டு,

பிரபாகரன் மீண்டும் வந்து எதுவுமே புடுங்க மாட்டார்; புடுங்கவும் தேவையில்லை.

புடுங்குவதா பிரபாகரன் வேலை?

அவர் எதையாவது புடுங்குவார் என்று எமது மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.

பிரபாகரன் மீண்டும் வந்து தமிழ்க் கொடியை நடுவார்.. நாட்டுவார்.. ஏற்றுவார் என்றுதானே உலகமே காத்திருக்கிறது..!

இதுகூட தெரியாமல் அவர் புடுங்குவதைப் பற்றி பேசுகிறீர்களே?

இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்? விவரமே தெரியாதா உங்களுக்கு? ஐயோ பாவம்!!

பெயரில்லா சொன்னது…

அடே வெத்து வேட்டுக்கு வைக்கிறண்டா வேட்டு.பிரபாகரன் வந்தென்னடா புடுங்கிறது நானே உன்னைப் புடுங்கிப்போடுவேண்டா? நாயே தூத்தேறி.

பெயரில்லா சொன்னது…

பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!

உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்

என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்
என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !
அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்
அப்போதும் நான் நம்பவில்லை
என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று

இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க
என் செவிகளே மறுத்துவிட்டன

உணர்ந்தேன்..... உணர்ந்தேன்
நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...

உணர்ந்தேன்....... உணர்ந்தேன்
இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...
நெஞ்சம் பொறுக்கவில்லை..
அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...

என் உடன் பிறவா புலிகளே..
என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..
நானும் போராடுகிறேன் உங்களுடன்...
கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...

சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....

காத்திரு சிங்களனே...
இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...
வருவார் என் தலைவன்..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...
ஓய மாட்டார் என் தலைவர்...
தமிழர்காக ஈழம் பெறும் வரை..
மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..

-தமிழன்-

விடிவெள்ளி சொன்னது…

சொந்த நாட்டு மக்களையே காட்டுத்தனமாக அழிக்க இலங்கை அரசு முயன்ற வேளை, தன் மக்களைக்காக்க சிங்கமென எழுந்தவர் மாவீரன் பிரபாகரன், அவர் எதைப்புடுங்கினார், எதைப்புடுங்கவில்லை என்பது உமக்கு உண்மையிலேயே தெரியாதா, அப்படியானால் சொல்கிறேன் கேள்!

பிரபாகரன் சொந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து புடுங்கினார்!
உம்போன்ற‌ ஆண‌வ‌க்ககார‌ர்க‌ளின் உயிரைப்போரில் புடுங்கினார்!

எதைப் புடுங்க‌வில்லை,
எந்த‌ சிங்க‌ள‌ப்பெண்ணின் க‌ற்பையும் புடுங்க‌வில்லை!
காட்டிக்கொடுத்து எச்சில் சோற்றால் உட‌ம்பு வ‌ள‌ர்க்கும் கருணாவைப்போல்
உல‌க‌த்த‌மிழ‌‌ர்க‌ளின் மான‌த்தைப் புடுங்க‌வில்லை,

உல‌குக்கே தெரியும் பிர‌பாக‌ர‌னை, உம‌து வாச‌லைத்தாண்டினால் யா‌ருக்குத்தெரியும் உம்மை? நீரெல்லாம் அந்த‌ மாவீர‌னைப்ப‌ற்றி பேசுவ‌து, தமிழுக்கே வெட்க‌க்கேடு!

ஆதவன் சொன்னது…

@தமிழன்,

உங்கள் உரைவீச்சு அருமை. நீங்கள் மிகவும் இளையவராக இருக்க வேண்டும் என கணிக்கிறேன்.

//உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்//

எப்படியும் உங்கள் வயது 30க்குள் தான் இருக்க வேண்டும்.

உங்களைப் போன்ற இளம் உள்ளங்களில் எல்லாம் ஈழ உணர்வையும் தமிழின உணர்ச்சியையும் மிக ஆழமாகப் பதித்த மாபெரும் தலைவர் நம் பிரபாகரன்.

உங்களை ஒத்த கோடானுகோடி உள்ளங்களில் பிரபாகரன் என்னும் தீபம் என்றுமே அணையாமல் வாழும்..! அனைவரையும் தமிழோடும் தமிழ் இனத்தோடும் வாழ வைக்கும்..!

//சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....//

உண்மையான வரிகள் இவை.

தொடர்ந்து வருக..! மறுமொழி தருக..!