தேர்தல் அலையில் அல்லாடும் தமிழ்ப்பள்ளிகள்
**பாயா பெசாரில் புதிய தமிழ்ப்பள்ளி
**அசாத்து தமிழ்ப்பள்ளிக்கு புதிய இடத்தில் நிலம்
**சிப்போட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட அடிக்கல்நாட்டு விழா
**சுங்கை சிப்புட்டில் புதிய தமிழ்ப்பள்ளி
**சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் நிலவரி 1 வெள்ளி மட்டுமே
**கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித்தரப்படும்
இவையெல்லாம் கடந்த சில நாள்களாக நாளிதழ்களின் முகப்புகளை அலங்கரித்த செய்திகள். எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள் நாட்டில் நடைபெறவுள்ள 12ஆவது பொதுத் தேர்தல் சூடுபிடித்துள்ள காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி மகிழ்ச்சியான செய்திகள் ஒவ்வொரு நாளும் வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் எண்ணிப்பார்க்காத அளவுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து பேரளவில் விவாதங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. அதற்கு ஏற்றாற்போல் அரசு தரப்பிலிருந்து எப்போதுமே இல்லாத அளவுக்கு அதிர்ச்சிக்குரிய அறிவிப்புகளும் உறுதிமொழிகளும் வந்த வண்ணமிருக்கின்றன.
தமிழ்ப்பள்ளிகள் மீதும் தமிழ்க்கல்வியின் மீதும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வும் போராட்ட உணர்வும் தொடர வேண்டும். தமிழுக்கும்; தமிழ் இனத்திற்கும்; தமிழ்க் கலை, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளமாகவும் அரணாகவும் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை ஒவ்வொரு தமிழனும் காக்கவேண்டும்.
அதற்கு, தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய வரலாற்று அறிவும், தமிழ்ப்பள்ளிகள் தொடர்புடைய சட்டவரம்புகள் பற்றிய தெளிவும், தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி மீது நமக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய விவரமும், தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி ஆகிய இரண்டின் அவசியம் பற்றிய விளக்கமும் தமிழர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. கீழே உள்ள இணையச் செய்திகளளைத் தமிழுயிர் அன்பர்கள் படித்துத் தெளியவும்.
http://www.malaysiaindru.com/?p=26
http://www.mozhi.net/TamilSchool/TamilSchool2.htm
http://www.mozhi.net/TamilSchoolArpattam/TamilSchool.htm
http://olaichuvadi.blogspot.com/2008/02/blog-post_5324.html
http://olaichuvadi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://vivegamm.blogspot.com/2008/01/blog-post_14.html
- ஆய்தன்: தமிழ் நம் உயிர்! தமிழ்ப்பள்ளி நம் உடல்! உடம்பால் அழியின் உயிரால் அழிவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக