வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 8 மார்ச், 2008

கலக்கப்போவது மக்குமண்ட ரம்பநாதா.!


தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடத்திட்டத்தை அணியப்(தயார்)படுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்று உள்ளது. அதற்குத் தலைமையேற்ற முகமை அதிகாரி தம்முடைய தமிழ் எதிர்ப்புக் கொள்கையை மீண்டும் மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். தமிழுக்கு எதிராகவும் கிரந்தம், சமற்கிருதம், ஆங்கிலம் முதலான சொற்கள் தமிழில் கலப்பதற்கு ஆதரவாகவும் முன்பின் சிந்திக்காமல் உளறியிருக்கிறார்; வந்தவர்களை அறுஅறு என 'இரம்பமாக' அறுத்திருக்கிறார். தமிழ்ப் பாடத்திற்காக பணிசெய்ய அமர்த்தப்பெற்ற உயர் அதிகாரியான அவர் தமிழின் வளர்ச்சிக்கான செயலாக்கங்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டுமே தவிர, தமிழைக் குலைக்கும் கொடுஞ்செயலைப் பற்றி எண்ணக்கூடாது. ஆழ்ந்த மொழி அறிவு, தமிழ் வரலாற்று அறிவு, மொழிபற்று என எதுவுமே இல்லாத மழுங்காண்டியான அந்த அதிகாரியின் உளறல்களை கேட்டு கூட்டத்தில் இருந்த அனைவரும் முகம் சுளித்துள்ளனர். சிலரோ, மிகத் துணிவாகத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து தமிழைத் தற்காத்துப் பேசியுள்ளனர். இப்படி கோணங்கித் தனமாக அந்த அதிகாரி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஓர் அன்பர் தமிழுயிருக்கு விரிவான மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் அந்தப் பாடத்திட்ட அதிகாரியைக் கண்டித்து ஒரு பாடலும் எழுதி அதனைத் தமிழுயிரில் வெளியிட கேட்டிருந்தார். தமிழுணர்வு மிக்க அந்த அன்பரின் செயலைத் தமிழுயிர் பாராட்டுகிறது. இப்படி மற்ற மற்ற தமிழ் அன்பர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், தமிழ்ப் பற்றாளர்களும் தங்கள் கண்முன் நடக்கும் தமிழுக்கு எதிரான கேடுகளையும் அதனைச் செய்கின்ற கேடர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டி 'போட்டுத் தாக்க' வேண்டும். 'கலக்கப் போவது யாரு' என்ற ஒரு திரைப்படப் பாடல் மெட்டில் இந்தப் பாடலைப் பாடிப்பார்க்கலாம். (குறிப்பு: அந்தத் தமிழன்பரின் நலன்கருதியும் அவருடைய வேண்கோளுக்கு இணங்கவும் அவருடைய பெயர் கமுக்கமாக (இரகசியமாக) வைக்கப்படுகிறது)

கலக்கப் போறவன் யாரு.. நீதான்
கெடுக்கப் போறவன் யாரு.. நீதான்
குழம்பிக் கிடப்பவன் யாரு.. நீதான்
கிரந்தப் பைத்தியம் யாரு.. நீதான்
உனக்குத் தானே கொடுக்க வேண்டும்
தேய்ஞ்ச செருப்படி!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!

தமிழுக்கு நீதான் பணிசெய்ய வேண்டும்
தெரிஞ்சிக்கோடா டேய்!
தமிழைக் கெடுத்தால் செருப்படி விழுந்திடும்
புரிஞ்சிக்கோடா டேய்!
கிரந்தத்தைப் புகுத்தித் தமிழைக்
கெடுக்கவா பார்க்கிற...?
வடமொழி கலந்து தமிழை
முடக்கவா பார்க்கிற...?
நீ என்னா பெருசா.. அன்னைத் தமிழென்ன சிறுசா..
ஏண்ட இந்த வேலை.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட! (கலக்கப்)

தமிழச்சி பெத்த பிள்ளையா இருந்தா
தமிழைக் கெடுக்காது!
எவனோ பெத்த பிள்ளையா இருந்தா தமிழுக்கு உதவாது!
வடமொழி செய்த கேடுகள்
ஒன்றல்ல ஆயிரம்..
வடிகட்டி எடுத்த மடையன்கள்
உன்போல் ஆயிரம்..
வரலாறு படிடா.. அறிஞரை மதிடா..
ஏண்ட இந்த வேலை.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட! (கலக்கப்)

  • ஆய்தன்:தமிழ்ச்சுரணை இல்லாத தமிழ் அதிகாரிகளைக் கண்டால் மோதி மிதித்துவிட வேண்டும்! முகத்தில் உமிழ்ந்துவிட வேண்டும்!

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கலக்கப் போறவன் யாரு? பாட்டு ஆகா சிறந்த இடி..! அந்த அதிகாரியின் கொட்டத்தை நானும் அறிவேன். தமிழை அழிப்பதற்கே பிறப்பெடுத்து வந்தவன் போல் நடந்துகொள்வான். அவனை அடக்குவதற்கு ஆளே இல்லை என்று நினைப்பு அவனுக்கு. தமிழுயிர் அவனுடைய திருட்டு மூஞ்சியைக் கிழி கிழி என கிழித்துவிட்டது. புத்தி உள்ளவனாக இருந்தால் இனிமேல் திருந்திக் கொள்ளட்டும்.

அன்புடன்,
தமிழ்மானமுள்ள தமிழ் ஆசிரியன்,
இளையவேல்,
சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

தமிழுயிர் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றது. தமிழுக்கு ஏற்படும் இன்னல்களையும் அந்த இன்னல்களை புரிகின்ற எட்டப்பர்களையும் அடையாளம் காட்டுவதோடு நல்ல மொழி விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்!

அந்தக் கலக்கப் போறவனைக் கலங்கடித்து விட்டது தமிழுயிர். தமிழில் இனிமேல் வேற்றுமொழிகளைக் கலக்காமல் இருக்க வேண்டும் அந்த அதிகாரி.

வாழ்க தமிழ்!
கவின்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா. யார் அந்த ரம்பநாதன்? செய்தியோடு சேர்த்து பாடலையும் படித்துப் பார்க்கும் போது மிகவும் கடுமையாக இருக்கிறது. அப்படியானால், அந்த பாடத்திட்ட அதிகாரியின் செயல் எவ்வளவு கடுமையாக, கொடுமையாக, கேடு நிறைந்ததாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். நல்லது செய்ய அறிவு இருக்கிறதோ இல்லையோ ஆனால், தமிழுக்குக் கெட்டது செய்வதற்கு மட்டும் முட்டாள்தனம் நிறயவே இருக்கிறது சிலருக்கும். ரம்பநாதன் போன்ற மூடர்களை கண்டுபிடித்து நன்றாக கண்டிக்கிறீர்கள். ரம்பநாதன் போன்ற மூடர்கள் இனிமேல் வாய் மூடுவார்களா?

நன்றி வணக்கம்.
இப்படிக்கு,
திருமதி.கோதைநாயகி
கடாரம்.

பெயரில்லா சொன்னது…

யாரவன் ரம்பநாதன்
அவன்மிக வம்புநாதன்?
யாரவன் ரம்பநாதன்
எருமைநிகர் கொம்புநாதன்?
யாரவன் ரம்பநாதான்
மானங்கெட்ட வீம்புநாதன்?
யாரவன் ரம்பநாதன்
தீராத துன்பநாதன்?
யாரவன் ரம்பநாதன்
விருந்தாளி பெத்தமகன்?

தமிழன்பன்,
இனியன்,
இரவூப்பு, பகாங்கு

பெயரில்லா சொன்னது…

பாட்டாலே புத்திசொன்னவர் இளையராஜா; பாட்டாலே நெத்தியடி கொடுத்தவர் இந்தப் பாடலை எழுதிய அன்பர்தான். தன்னுடைய கண்முன்னால் நடந்த அநியாயத்தை வெளிப்படுத்தி சாட்டையடி கொடுத்திருக்கும் அவருக்கும் அதனை வெளியிட்ட தமிழுயிருக்கும் என் நன்றி. அந்த மக்குமண்டைக்கு மானமும் தைரியமும் இருந்தால் துணிந்து வந்து இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சதா காலமும் இதே வேலைதானா இந்த மக்குமண்டைகளுக்கு..? சிந்தன் கூ..ள் இல்லை!

-சித்தன் சிவாஜி

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா! இந்தப் பாடலில் வரும் ரம்பநாதன் யாராக இருப்பான் என்று என்னுடைய சில ஆசிரியர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் வேறுயாருமல்ல.. கறுப்பு பார்ப்பான் இராமநாதன் தான் என்று சொன்னார்கள். அவனைப் பற்றி பலரும் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ் மொழிப் பாடத்திற்கு உயர் அதிகாரியாக உட்கார்ந்துகொண்டு தமிழுக்கே உலை வைப்பவன் இந்த கறுப்பு பார்ப்பான் என்று சொல்லி இருக்கிறார்கள். அவன் எப்படி இருப்பான் என்று பார்க்க வேண்டும். தமிழை அழிக்கவே அவன் அம்மா வயிற்றிலிருந்து பிரந்து வந்துள்ளான் போல தெரிகிறது. அவனை இன்னும் ஏன் அந்த உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறார்கள். உடனே அங்கிருந்து தூக்க வேண்டியது தானே! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் இவன் போன்றவர்களைச் சும்மா விடக் கூடாது.

தமிழால் பிழைக்கும் தமிழன்
வீரமாமணி - தலைநகர்

பெயரில்லா சொன்னது…

வணக்கம். தமிழோடு வாழ்க! நம் நாட்டில் தமிழுக்கு எதிரான சதிவேலைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. ஒரு காலத்தில் தமிழர் அல்லாதவர்கள் தமிழுக்குக் கேடுகள் செய்து வந்தனர். ஆனால், இன்றோ தமிழரே தமிழுக்கு எதிராக செயல்படுவதைப் பார்க்கும்போது மனம் பதபதைக்கிறது. இன்றைய தமிழன் தன்னை இந்தியன் என்றும் இந்து என்றும் உறுதியாக நம்புவதே இதற்கு முகாமையான காரணம் என நினைக்கிறேன். இந்தியன் என்றும் இந்து என்றும் பரப்பப்படும் நம்பிக்கைகளை கொஞ்சமும் ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொள்வதால் வரும் வினைதான் இது. ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய தாய்மொழிதான் அடையாளம் காட்டும். ஆக, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழனாக இருக்க முடியுமே தவிர எப்படி இந்தியனாக முடியும்?

மேலும், இந்து என்பதும் தமிழ் சார்ந்த இந்துவாகவே இருக்க வேண்டும். சமஸ்கிருதம் சார்ந்த இந்துவாக இருக்கக் கூடாது. காரணம், தமிழ் மக்கள் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழின் அடிப்படையில்தான் இந்து மதத்தைப் பார்க்க வேண்டும். இந்து மதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தமிழ் சார்ந்த தேவார, திருவாசக, திருமந்திர முறைப்படி இந்து சமயத்தைப் பின்பற்ற வேண்டும்.

தமிழன் தன்னை இந்தியனாகவும் இந்துவாகவும் நினைப்பதை முதலில் மாற்ற வேண்டும். இந்தியன், இந்து என்பவைத் தமிழனைக் கட்டிப் போடும் அடிமை விலங்குகள். அதனை அறுத்தெறிய வேண்டும். இந்துத்துவா அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும்.

அப்போதுதான், தமிழுக்கு விடுதலையும் வெற்றியும் கிட்டும்.

தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்.

தமிழ்ப்பணியில் உங்களுடன்,
இளஞ்சித்திரன்,
வெள்ளி மாநிலம்.