வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 14 மே, 2009

ஈழச் சிக்கல்:-ஒபாமா முதல் முறையாக கடும் எச்சரிக்கை


மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். (விரிவாகப் படிக்க)
@ஆய்தன்:-
தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கௌவும்.. ஆனால், இறுதியில் தருமமே வெல்லும்..!

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

ஒபாமாவின் குரலுக்கு ஆதரவு தருவோம்.