'கேக்' தின்னும் 'கிரந்த' வெறிவுரைஞன்
>>>தமிழுயிர் அன்பரின் மின்னஞ்சல்:-
வணக்கம், ஐயா.
நான் பயிலும் கல்விக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவர் தமிழ்மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டை மிகவும் வழியுறுத்திக் கொண்டு வருகிறார். மேலும் கிரந்த எழுத்துகளை மாற்றுவதற்கு தமிழ்மொழிக்கு உரிமை இல்லை எனக் கூறுகிறார். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ‘கேக்’ என்ற சொல்லைத் தமிழ்மொழியில் அணிச்சல் என்று கூறக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகிறார். இதுபோன்ற பல ஆங்கில சொற்களைத் தமிழ்படுத்தக் கூடாதென்று வலியுறுத்தி வருகிறார். நன்றி.

>>>தமிழுயிரின் பதிலடி:-
தான் பயிலும் கல்விக்கழகத்தில் தமிழுக்கு எதிராக நிகழ்ந்துள்ள கொடுமையை மிகவும் துணிவோடும் தமிழ்நலம் பேணும் தூய உள்ளத்தோடும் வெளிப்படுத்தியுள்ள அந்தத் தமிழன்பரைத் தமிழுயிர் மனதாரப் பாராட்டுகிறது.
நல்லதமிழ்ச் சொற்களின் ஆக்கத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தமிழ்மொழியில் கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டை மிகவும் வலியுறுத்தி வருகின்ற அந்தக் 'கேக்' தின்னும் 'கிரந்த' வெறிவுரையாளரின் மதிகெட்ட; மானங்கெட்டத் தனத்தை என்னவென்று சொல்லுவது. தமிழன் உருவில் நடமாடும் அந்தக் 'கருப்பு ஆரிய' விரிவுரையாளனிடம் தமிழுயிர் சில கேள்விகள் கேட்க விரும்புகிறது:-
1.'கேக்' என்பதைத் தமிழ்ப்படுத்தத் தேவையில்லை என்று கூறும் அந்த வீனாய்ப்போன வெறிவுரைஞனுக்குத் தமிழில் உருவாகிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கலைச்சொற்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

2.எந்த ஒரு புதிய சொல்லுக்கும் நிகராக நல்லதமிழ்ச் சொற்களைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதை அவர் அறியவில்லையா?
3.கிரந்த எழுத்துகளை மாற்றுவதற்குத் தமிழ்மொழிக்கு உரிமை இல்லை என்பதை அறிந்துள்ள அந்த அறிவாளிக்கு, வேற்றுமொழியான கிரந்தத்தைத் தமிழில் புகுத்த எந்த உரிமையும் இல்லை என தெரியவில்லையா?
4.தமிழ்ச் சொற்களைப் பிறமொழிகளில் ஒலிக்கும்போது தப்பும் தவறுமாக மற்ற மொழிக்காரர்கள் ஒலிப்பதைப் பற்றி எந்த வருத்தமும் கொள்ளாத கிரந்தப் பித்தர்கள், தமிழில் பிறமொழிகள் மாற்றமாக ஒலிக்கும்போது வருத்தப்படுகிறார்களே அது ஏன்?
5.பிறமொழிச் சொற்களைத் தமிழ் மரபோடு ஒலித்தால் அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களை விட இவரைப் போன்ற 'தமிழர்கள்' சிலர் அதிகம் வேதனைப்படுவதும் வக்காளத்து வாங்குவதும் ஏன்?
6.தமிழைத் தாழ்த்திப் பேசத் துணியும் அந்த விரிவுரைஞன் உண்மையிலேயே பிறப்பால் தமிழனா?
தன்னுடைய தாய்மொழியைத் தாழ்த்தி பிற மொழியை உயர்த்தும் ஒருவனுக்கும்; தன்னுடைய தாயைக் கேலவப்படுத்தி பிற பெண்களை உயர்த்திப்பேசும் ஒருவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அணிச்சல் என்பது 'கேக்' என்ற அயற்சொல்லுக்கு நிகரான இனிய தமிழ்ச்சொல். பள்ளிப் பாடநூலில் கூட இச்சொல் இடம்பெற்று உள்ளது. இப்படி, தமிழில் புதிய சொற்களை உருவாக்கி தமிழ்மொழியை வளப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டிய அந்தத் தமிழ் விரிவுரையாளன் வெட்டித்தனமாகத் தமிழைப் பழிப்பதும் தமிழின் வளர்ச்சியைக் கெடுப்பதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழி போடும் பிச்சைப் பணத்தில் பிழைத்துக்கொண்டிருக்கும் அந்த விரிவுரையாளன் மொழிப்பற்றும் மொழிஉணர்வும் இல்லாத 'வெறுமாண்டி' எனத் தெளிவாகத் தெரிகிறது. அவருடைய கருத்துகளை அவரிடம் பயிலும் மாணவர்கள் கேட்கக்கூடாது. நல்லதமிழ் உணர்வுள்ள மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தமிழ் விரிவுரையாளரே தமிழ்மொழியை இழிவுப்படுத்துவது கேவலமான செயலாகும். இப்படியொரு அறிவுகெட்ட விரிவுரையாளரிடம் பயிலும் மாணவர்கள் எப்படி தமிழுக்கு ஆக்கமாகச் செயல்படுவார்கள்?
நம் நாட்டுக் கல்விக் கழகங்களில் இப்படிப்பட்ட மொழிக்கேடர்கள் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருவதைத் தமிழுயிர் நன்கறியும். வேளை வரும் போது அவர்களுடைய முகத்திரையத் தமிழுயிர் கிழித்தெரியும். அதற்கு உதவியாக, கல்விக்கழகங்களில் பயிலும் நல்லதமிழ் உணர்வுள்ள மாணவர்கள் தமிழுயிருக்குச் செய்திகளை வழங்க வேண்டும்.
@ஆய்தன்: "சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்ற பாரதியின் பாட்டை முதலில் எமது நாட்டு ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

9 கருத்துகள்:
வணக்கம்
தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார் அவர்கள் தமிழில் பிறமொழிச்சொற்களை கலந்து பேசுபவர்களை எவ்வளவு கற்றவராயினும் மதியேன் என்கிறார்.
தமிழுக்கு ஆக்கமான பணி செய்ய வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது வருந்தத் தக்க ஒன்றாகும்.
நம் மொழியின் தூய்மையை நாம் பேணாமல் வேறு எவன் வந்து பேணுவது.
அன்புடன்
தமிழ்வாணன்
சிலாங்கூர்
தமிழுக்கும் தமிழருக்கும் ஆங்காங்கு நடக்கும் கேடுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் தமிழுயிரின் பணியினைப் பாராட்டுகின்றேன். தமிழுயிருக்கு மலேசியத் தமிழர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். துறைதோறும் துறைதோறும் தமிழுக்கு நடக்கும் கொடுமைகளை உடனுக்குடன் தமிழுயிருக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.
அன்புடன்
வளர்மதி
கோல லிப்பிசு பகாங்கு.
தமிழுயிர் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழைப் பழித்துப் பேசும் அந்த விரிவுரையாளர் யாரென வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அவர் எந்தக் கல்விக் கழகத்தில் பணியாற்றுகிறார் என்பதை வெளிப்படுத்தி அவருடைய போலியான முகத்திரையக் கிழித்தெரிய வேண்டும். தமிழைத் தமிழாக இருக்கவிடாமல் இவர்போன்ற நச்சுக்கிருமிகள் கெடுத்து வருகின்றனர். தமிழை சிதைக்கப் பார்க்கும் நச்சுக்கிருமிகளைச் சும்மா விடக்கூடாது.
இந்த அவலத்தை வெளிப்படுத்திய சம்பந்தப்பட்ட கல்விக் கழகத்தின் மாணவரின் துணிச்சலை மற்றைய மாணவ மாணவியரும் பின்பற்றி மூலை முடுக்குகளில் நடக்கும் தமிழுக்கு எதிரான செயல்களை உடனே தமிழுயிர் வழி வெளிப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் தமிழ்க் காப்புப் பணிக்கு அவர்களால் உதவ முடியும். தமிழ்ப் பயிர் செழிப்பதற்குப் பணியாற்ற முடியும்.
கேக் தின்னும் அந்த வெறிவுரைஞர் தமது போக்கை மாற்றிக் கொள்ளட்டும். முடியாவிட்டால், நிறுத்திக் கொள்ளட்டும்.
நாட்டில் நல்லதமிழை முன்னெடுக்கும் தமிழுயிருக்கு என் நன்றி.
அன்புடன்,
தமிழ் மானமுள்ள ஆசிரியன்
இளையவேல் - சிரம்பான்
என்னங்கடா இது..! திரும்பத் திரும்ப இந்த தமிழ் வாத்தியார்களும் விரிவுரையாளர்களும் (மன்னிக்கவும்) வெறிவுரையாளர்களும் இதே கோளாறுதான் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழில் ஏன்தான் ஆங்கிலத்தையும் கிரந்தத்தையும் கொண்டு வந்து கலக்கிறார்களோ தெரியவில்லை?
குற்றம் இல்லாமல் கற்றுக்கொடுக்க வேண்டியவர் ஆசிரியர். அதிலும் இவர் விரிவுரையாளர் வேறு. (தமிழ்)அறிவு வேண்டாமா இவருக்கு? இவர்களால் எப்படி நல்ல தமிழ் உணர்வுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்?
ஐயா ஆய்தன் அவர்களே,
கிரந்த எழுத்தைக் கண்டித்து தாங்கள் நிறையவே எழுதி உள்ளீர்கள். எனக்கு இப்போதுதான் முழுத் தெளிவு ஏற்பட்டு உள்ளது. அதனால் இனிமேல் நானும் சிவாஜி என்ற என்னுடைய பெயரில் இருக்கும் 'ஜி' என்ற கிரந்த கண்றாவியை தவிர்த்து எழுதப் போகிறேன். இந்தத் துணிச்சலையும் தெளிவையும் புத்தியையும் புகட்டிய தங்களுக்கு நன்றி.
நான் கிரந்த வெறியன் அல்ல. உண்மை புரியாமல் இவ்வளவு நாள் என் பெயரில் கிரந்த எழுத்தை வைத்திருந்தேன். இனிமேல் அந்தச் சனியன் பிடித்த எழுத்து வேண்டவே வேண்டாம். இனியத் தமிழே எனக்குப் போதும்.
எப்படி என் முடிவு..! கூ...ள்!!
தமிழ் அடிமை,
சித்தன் சிவாஜி என்ற
சித்தன் சிவாசி
வணக்கம்
என்ன சொன்னாலும் நார் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிக்கும் முள்ளமாரிக் கூட்டத்திற்கு சரியான சாட்டையடி.. தமிழுயிருக்குப் பாராட்டுகள்.
தமிழுக்கு துரோகி வெளியில் இல்லை
தமிழினத்திலே தோன்றியிருக்கிறான்
என்பதை அறியும் போது உள்ளம் குமுறுகிறது
இதைத்தான் மலேசியப் பாவலர் இவ்வாறு எழுதியிருக்கிறார்
தாய் புணர்ந்தது ஒரு நாயை
நாய் புணர்ந்தது ஒரு பேயை
தப்பிப் பிறந்தது பன்றி
தமிழன் நிறத்தொடு ஒன்றி
தாய்தமிழ்ப் பணியில்
மானமுள்ள தமிழாசிரியன்
சிவபாலன்
மலாக்கா
தமிழாசிரியர் கூட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய விரிவுரையாளர்களே இவ்வாறு சிந்திப்பதை என்ன சொல்வது ?
இவர்கள் என்ன ஒன்றும் அறியாதவர்களா ?
ஏன் இந்த வேண்டாத வேலை.
ஞால முதன்மொழி தமிழ் என்பதும் தமிழ் வளமையான மொழி என்பதும் இவர்களுக்குப் புரியவில்லையா ?
தூங்குபவனை எழுப்பி விடலாம்
தூங்குவது போல் பாசாங்கு செய்பவனி எழுப்ப முடியாது. "கொதிநீரைத் தான் ஊற்ற வேண்டும்"
அன்புடன்
பயிற்சியாசிரியன்
கடாரம்
அன்பு ஐயா, கேக் தின்னும் வெறிவுரைஞன் போலவே நான் பயிலும் ஆசிரியர் பயிற்றகத்தில் ஒரு குணங்கெட்ட விரிவுரைஞர் உலவுகிறார். தமிழை அழிப்பது ஒன்றே குலத்தொழில் போல மேற்கொண்டுவரும் அந்த குணங்கெட்ட விரிவுரையாளரை பற்றி தங்களுக்கு விளக்கமாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். தமிழை அழிக்கப் பார்க்கும் அந்த வஞ்சகனின் முகத்தை நீங்கள் தான் கிழிக்க வேண்டும் ஐயா. உங்கள் நல்லதமிழ் பணிகள் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
அன்புடன்,
தமிழைக் காக்க விரும்பும்
ஔவை,
IPTAA,Kuala Lipis, Pahang
இந்த நாட்டில் தமிழுக்கு எதிரானவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகிய கல்விமான்கள்தாம் என்றால் பொய்யில்லை. நமது அரசாங்கம் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு தமிழைப் பல வழிகளிலும் வளர்த்தெடுக்கும் அருமையான வாய்ப்பைப் பெற்றிருந்தும், அதனைச் செய்யாமல் தமிழைச் சாகடிக்கப்பார்க்கின்றனர். நான் எல்லாரையும் சொல்லவில்லை. சிலர் குள்ளநரித்தனமாக இந்த சதிநாச வேலையை செய்கின்றனர். இந்த சாக்கடைகளை ஒழிக்க வேண்டும். இந்த சாக்கடைகள் இருப்பதால் தான் தமிழ் நாற்றமடிக்கிறது. இப்படிப்பட்ட சாக்கடைகளை சுத்தப்படுத்தும் தமிழுயிர் இணையப் பக்கம் வாழ்க! வளர்க!
அன்புள்ள,
தமயந்தி,
ஆசிரியர் பயிற்றகம்.
unggal thamizhppani pottrutharkuriyadhu vazha neevir vallarga tamizh
PeterJ
Subang Jaya, Selangor
Webmaster
www.tamilnetmalaysia.com
கருத்துரையிடுக