வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 30 ஏப்ரல், 2009

நியாயத்தைக் கேட்க புலியாக இருக்க வேண்டுமா என்ன?


இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்குச் சட்டம் பாயுமாம்.......!

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனைத் தியாகி என்கிறது..... !!!!!!

எதற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு சீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் ** தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..!

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........!!

அட நாய்களே.....

நியாத்தைக் கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை..
மனிதனாக இருந்தால் போதும்.....!!! (மேலும் படிக்க)

@ஆய்தன்:-
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?

புதன், 29 ஏப்ரல், 2009

பரமேசுவரன் என்னும் தமிழ் மறவனின் வேண்டுகை

ஈழத் தமிழர் விடுதலைக்காகப் பிரிட்டனில் 22ஆவது நாளாக உண்ணாநிலை போராடத்தைத் தொடரும் தமிழ் இளைஞர் பரமேசுவரன் உலகத் தமிழர்க்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் இது.
(படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்)

@ஆய்தன்:-

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்

சகத்தினை அழித்திடக் கவிதை சொன்னாயே பாரதி...

தன் சகத்தினுக்கு விடுதலை வேண்டி

தனியொரு மனிதன் உண்ணாமல் போராடும்

இந்த வீரக் காவியத்தைப் பாட மீண்டும் பிறந்துவா..!

திங்கள், 27 ஏப்ரல், 2009

மிக அவசரம்!!! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்ற உதவுங்கள்

நண்பர்களே,
புலிகளின் ஒருதலைபட்சமான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சிறீலங்கா கடல், தரை, வான் மார்க்கமாக தமிழ்மக்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்படுவார்களென்ற அச்சமூட்டும் செய்தி நம்பகரமான இடங்களிலிருந்து வருகிறது.
நண்பர்களே தயை கூர்ந்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்.
வெள்ளைமாளிகைக்கு உங்கள் கவலையை தெரிவிக்க தொலைபேசுங்கள். White House 001 202 456 1414 நண்பர்களையும் அழைக்க சொல்லுங்கள்.
ஆங்கிலத்தில் இங்கு தந்துள்ள மின்னஞ்சலை ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் நாட்டின் தலைவர்களுக்கும் உடனடியாக முறையிடுங்கள். உரிமையோடு கேட்கிறேன்.
பின்வரும் சுட்டிகளைச் சொடுக்கி மேலும் படிக்கவும்:-
நமது தொப்புள்கொடி உறவைக் காப்பாற்ற உலகத் தமிழர்களே ஒன்றிணையுங்கள்... உடனே செயல்படுங்கள்...!!!

ஈழத்தில் இன்று இரவு கடும் இராணுவத் தாக்குதல்?


இன்று இரவுடன் மீதமுள்ள பகுதிகள் மீது தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இராணுவம் கடும் தாக்குதல் தொடுக்க இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரசாயன ஆயுதங்கள், பல்குழல் எறிகணை, மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவம் தயாராகி வருவதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திட்டமிட்ட தாக்குதலை இலங்கை இராணுவம் தொடுக்குமாயின், ஓர் இரவில் மட்டும் 10,000 தமிழர்கள் கொல்லப்படும் வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது. எனவே புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே உடனடியாக தங்கள் நாட்டில் உள்ள பாரளுமன்றம் முன்பாக கூடி, அல்லது கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூடி இறுதி இன அழிப்புப் போரைத் தடுக்க ஆவன செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது. (விரிவாக)
@நன்றி:அதிர்வு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு


க்கிய நாடுகள் சபை, சீ-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்துவதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: (மேலும் படிக்க)


******* ****** *******


தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சே, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார். (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
ஆடாதடா ஆடாதடா கோத்தபாய..!

சனி, 25 ஏப்ரல், 2009

ஏன் போர் நிற்கவில்லை: கவிஞர் தாமரை அனல் பேச்சு



@ஆய்தன்:-

எழுத்து, இசை, நடிப்பு, நடனம், நாடகம் என்று எந்தக் கலையும் இன மீட்புக்கும் இன எழுச்சிக்கும், மொழி உணர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பயன்படாமல் போகுமானால் அந்தக் கலையும் அதனைப் படைக்கும் படைப்பாளியும் பாடையிலே போகட்டும்..!! அப்போதுதான் தமிழினம் உருப்படும்..!!!

புலியை முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிப் பரம்பரையில் வந்துப்பிறந்த கவிஞர் தாமரை என்ற இந்த வீரத் தமிழச்சியைத் தமிழுயிர் கையெடுத்து வணங்குகிறது.

புதன், 22 ஏப்ரல், 2009

கவிஞர் அறிவுமதியின் ஒப்பாரிக் கவிதை


@ஆய்தன்:-

அழுதழுது புலம்புகிறோம்

ஆறுதலே இல்லையய்யா.. - இரவில்

எழுந்தெழுந்து புலம்புகிறோம்

தேறுதலே இல்லையய்யா..!!

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

இந்திய அரசைக் கண்டித்து மலேசியாவில் பேரணி

ஈழத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்த மண்ணில் இருந்து முற்றாக அழிக்கும் நோக்கத்தோடு இலங்கையில் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அதிநவீன இராணுவத் தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், இராணுவ வல்லுநர்களை வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து மலேசியாவில் இன்று(21-4-2009) நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
@நன்றி: புதினம்
@ஆய்தன்:-
தமிழனை அழிக்கத் துடிக்கும் இந்தியாவை நம்பும்.. தன்னை இந்தியன் என நம்பும்.. இந்தியா தன்னைக் காக்கும் என நம்பும்.. மலேசியத் தமிழர்கள் இனியேனும் கண் திறவுங்கள்..!
இந்திய அடிமை விலங்கொடியுங்கள்..!
நாம் தமிழர் என முழங்குங்கள்..!

திங்கள், 20 ஏப்ரல், 2009

மலேசியாவில் ஈழ ஆதரவு அமைதிப் பேரணி

இலங்கையின் போர்ச்சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளில் பார்த்து, படித்து மனம் கலங்கி வருகின்றோம். மக்கள் செறிந்து வாழும் 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தனது இறுதிக்கட்டத் தாக்குதலை உலக நாடுகளின் கண்டனக் குரல்களை மீறி தொடங்கிவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

தமிழர்களின் குரல்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி, நடந்துகொண்டிருக்கும் இந்த மனிதப் பேரவலத்திற்கு இந்தியாவே பின்னணியில் இருந்து செயற்படுவதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ ஆயுதங்களையும் ஆலோசனையும், இராணுவ வல்லுநர்களையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும் கண்டனத்தைத் தெரிவிக்கும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்:- எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.04.09)

நேரம்:-பிற்பகல் 12:00 மணி முதல்

இடம்:- கோலாலும்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்


அமைதியான முறையில் நடைபெறவிருக்கும் இந்தக் கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் உலக மக்களின் கவனங்களை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் உறவுகளுக்காகப் போராட வேண்டிய மிக அவசியமான காலக்கட்டத்தில் நாமும் இருக்கின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சொந்த இரத்தம் ஈழத்தில் பெருமளவில் சாகிற இந்த வேளையில் தமிழர்கள் என கூறிக்கொள்ளும் நாம் எதையும் செய்யாமல் விட்டால் வரலாற்றுப் பெரும்பழியை நாம் சுமக்க வேண்டி வரும்.

ஒருநாள் அவர்களுக்காக விடுமுறை எடுப்போம். பெருந்திரளாக இந்திய தூதரகம் முன் அணித்திரள்வோம்.

ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் குரல்களைப் பதிவு செய்வோம். அதிரும் கண்டனக் குரல்களால் இந்திய அரசைக் கண்டிப்போம்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத்தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்?

இந்தப் போரை இந்தியாவே பின்னணியில் இருந்து நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்ற வேளையில் இந்தியா அதற்கு சரியான விளக்கம் தராமல் மெளனம் காப்பது ஏன்?

தடைசெய்யப்பட்ட நச்சு வாயுக்குண்டுகளைச் சிறிலங்காவிற்கு வழங்குவது ஏன்?

ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணைப் போவது ஏன்? இந்திய நாட்டு வம்சாவளித் தமிழர்களான நமக்கு இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்க எல்லாவித தகுதியும் இருக்கிறது.

போரின் துன்பத்தினை தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது தவறாகாது.

மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பது தவறாகாது.

ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.

இன்றைய நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல்கள் மிகத் தேவையானதாய் இருக்கின்றன.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புக்கள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

@ஆய்தன்:-

பொங்கும் தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு - (பாரதிதாசன்)

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

எனது மக்களுக்காக எனது போராட்டம் இது

தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேசுவரன். அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 11 ஆவது நாளாக சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வீதியின் ஓரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருக்கும் அவர், தனது போராட்டம் குறித்து புதினத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்:-

"எமது மக்களுக்கு ஏதாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக நான் எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமாக எனக்கு கிடைத்திருக்கிறது." (மேலும் படிக்க)
@ஆய்தன்:-
சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை (அதி:23 குறள்:230)

வியாழன், 16 ஏப்ரல், 2009

புலரும் ஒருநாள் தமிழர் தேசம்


ஆழக்கிணறும்
ஆடுகால் பூவரசும்
பச்சைக் கம்பளமாய்
நீண்டுகிடக்கின்ற நெல்வயலும்
வளங்கொளிக்கும் வனங்களும்-இன்று
இரத்தக்கறை படிந்து
உறைந்து கிடக்கிறது...

பசியோடு வந்தவர்க்கு
பரிமாறி மகிழ்ந்தவர்கள்
பட்டினியோடங்கே
பதுங்குகுழிகளில்
பரிதவிக்கின்றார்..

வீசியடித்த போர்ப்புயலால்
நாதியற்றுச் செத்துமடிகிறான்
தமிழன்..
ஆறஅமரக்கூடத் துளிநிலமின்றி
சொந்தமண்ணிலேயே
ஏதிலியாய் அலைகின்றான்..

செழித்துப் பூத்துச்
சிரித்துமகிழ
மண்ணுலகு வந்துதித்த
சின்னஞ்சிறு அரும்புகள்
சதைத்துண்டங்களாய்
சிதறிமண்ணில் வீழ்கிறது..

நெடுநாள் தவமிருந்து
பெற்றெடுத்த செல்வம் அங்கே
சத்தமின்றிச் சவமாய் கிடக்கையிலே
குண்டுப்புகை வழியே
குழந்தையைத்தேடும் தாயுள்ளம் ஓர்புறம்
உயிர்பிரிந்துவீழ்ந்த தாயிடம்
பசியாறத்துடிக்கும் பிஞ்சுமறுபுறம்
பூப்பெய்திய இளமகளும்
பிரசவித்த தாய்மாரும்
பச்சையுடல் தேறுமுன்னே
பாசிசக் காமுகரால்
கதறக்கதறக் காவுகொள்ளப்படுகின்றார்..

இடைத்தங்கல் முகாமென்று
இருள்வலயத்துள்
இழுத்தழைத்து
விசாரணை எனும் பெயரில்
விடலைகள் எல்லாம்
வதைமுகாம்களில்
இரகசியமாய் புதைக்கப்படுகின்றார்..

வானத்தை துளையிட்டு
வல்லூறுப் பறவையினம்
வட்டமிட்டு எம்மினத்தைத்
திட்டமிட்டு அழிக்கிறதே
தமிழினக் கழனியிலே
கதிர்குலுங்கும் பயிர்நடுவே
களையும் விளைந்ததனால்
வந்ததிந்தப் பேரவலம்..

தமிழன் வரலாறு-ஓர்
முதிர்ந்த பண்பாட்டின் முகவரி
படைகொண்டு களமாடி எதிரிக்கும்
வலியறியச் செய்தவர்கள் வரலாறு..!

வேண்டும் விடுதலை எமக்கு
தமிழன்படும் வேதனை
வெங்கொடுமை நீங்க
அடங்கமறுத்து
எரிமலையாய் வெடித்தது
பனிகூடப்பற்றி எரிந்தது..

கவிந்த இருள்கலையும்
விரைவில் அந்த
இனியவிடுதலை விடியலில்
ஈழத்தமிழன் இன்னல் தீரும்
வையமும் நிமிர்ந்து வாய்பிளக்கும்
தமிழன் பேச்செல்லாம்
கோயில் பெருமணியாய் ஒலிக்கும்..

இளமைச் சுகங்களை
இடறி எறிந்துவிட்டு
தாய்மண்ணைக் காதலிக்கும்
தளிர்கள் இருக்குமட்டும்
தாகம் தீராது
ஈழமண்ணில் ஓடும் குருதியாறு
சரித்திரத்தையே
சலவைசெய்யும் - ஓர்நாள்

- மானியூர் மைந்தன் (navaas06@yahoo.de)

@ஆய்தன்:-
ஈழத்தில் விழும்
ஒவ்வொரு குண்டும்
புலம்பெயர்ந்து வந்து - எங்கள்
இல்லத்தில் வெடிக்கிறது
இதயத்தைப் பிளக்கிறது..!

புதன், 15 ஏப்ரல், 2009

யாரு இந்தத் தலைவரு; அவரு பேரு எந்தா சொல்லிரு


கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து
தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து,
சிங்கள வெறிபிடித்து,
தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து,
பெண்கள் முலையறுத்து,
தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து,
பதவி வெறிபிடித்து,
சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து,
பாதித் தமிழகத்தை,
பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்?

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை - உன்
உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே

தமிழனைக் குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும்
நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

@நன்றி:உண்மைத் தமிழன் & தமிழ் முசுலிம்

@ஆய்தன்:-

யாரு இந்தத் தலைவரு - அவரு
பேரு எந்தா சொல்லிரு..!!?

திங்கள், 13 ஏப்ரல், 2009

48 மணி நேர போர் நிறுத்தம் ஏன்? எதற்கு?


சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக ரீதியாக புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.


சித்திரை(தமிழ்), சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த யுத்த நிறுத்தம் எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் அமுலில் இருக்கும் என மகிந்த ராசபக்சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

48 மணிநேர தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்ட அதேவேளை, சிறிலங்காவின் உள்ளூர் ஊடகங்களுக்கு மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், இதனால் சர்வதேச ரீதியில் புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் அழுத்தங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் போர் நிறுத்தம் வரும் காலப்பகுதியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரித்து செய்திகளை வெளியிடுமாறு அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறனையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே சிறிலங்கா அரசின் இந்த கபடத்தனமான செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கை திட்டத்தை தவிடுபொடியாக்க, சர்வதேச ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது மேற்கொள்வதன் மூலம், சிறிலங்காவுக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் பிரயோகிக்க வழியேற்படும் என்பது நினைவூட்டத்தக்கது.


@நன்றி:தமிழ்த்தேசியம்

@ஆய்தன்:-
எள்ளு எண்ணெய்க்குக் காயும்
எலிப்புழுக்கை எதற்கு காய்கிறது?

சனி, 11 ஏப்ரல், 2009

தமிழன் என்று ஓட்டுக் கேட்டால் செருப்பால் அடி

னசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...!

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் பற்றுக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்..!

ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...!!!


ஒருத்தர் முதல்வர் பதவிக்காக,
ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால்
இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என..

அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை...!

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசிறியாக, தலித் புதிய தமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...!!

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...!!

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழகத் தமிழனை மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழனைக் கூட்டி கொடுப்பார்கள் என்பதால்....

தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்...!!!!!!

@நன்றி: குழலி பக்கங்கள்

@ஆய்தன்:-

ஈழத்தமிழன் மடிவதைக் கண்டும்
கண்மூடி.. வாய்மூடி.. இருக்கும் எந்தத் தமிழனையும்
இனி ஈனத்தமிழன் எனத் தயக்கமின்றிச் சாற்றுவோம்..!!

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

தமிழீழம் மலர்ந்தாலொழிய வேறு தீர்வே இல்லை

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் நீர் கூட அருந்தாமல் கடைசி மூச்சிருக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் பரமேசுவரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.எங்கள் அன்பான தமிழ் மக்களே;
இது தமீழீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.
எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள். தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை.
அனைவரும் எமது நண்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை தொடக்கி வைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அறவழிப் போராட்டத்தையோ அல்ல.
தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப் போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆலவிருச்சமாக அகன்று விரிந்து ஆழ வேரூன்ற வேண்டும்.
அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டு வாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள். கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லறியாலும் வீழ்த்த முடியாது, பல்குழலாலும் மடிக்க முடியாத தூண்களே!
திரண்டு கிளர்ந்து எழுந்து வாருங்கள்.
தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்,
பரமேசுவரன் & சிவா

@ஆய்தன்:-
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (அதி:67 குறள்:669)

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

செருப்படி விழுந்தாலும் தமிழர் சிலர் திருந்தார்..

1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் செகதீசு டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் சார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் சர்னைல் சிங் என்ற சீக்கியர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தனது காலணியைக் கழற்றி சிதம்பரத்தின் மீது வீசினார்.

உடனே அவரை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
  • செருப்படி 1:-
  • செருப்படி 2:-
செய்தியாளர் கூட்டத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட சர்னைல் சிங் கூறுகையில், “நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை” என்றார்.
  • செருப்படி 3:-
செருப்பை வீசிய நிருபருக்கு இந்திய அரசியல் கட்சியான அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 இலட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • இதுதான் இனப்பற்று என்பது..! இதுதான் மொழிப்பற்று என்பது..!
  • ஆனால் தமிழினம்??????????
1.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அணிஅணியாக வன்னியில் கொல்லப்படும் போது தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்???
2.கூட்டணிப் பங்கீடு பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
3.சீட்டுக்கணக்குகளுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
4.தமிழினத்துக்கு காவல்காரனாய் இதுகாறும் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள் யார் தமிழினப் படுகொலைக்குக் காரணமாய் இருக்கிறார்களோ அவர்களோடு கூடி மகிழ்கிறார்கள்.
5.தான் நடத்தும் தொல்லைக்காட்சியில் அனுதினமும் ஈழத்துக்காக ஒப்பாரி வைக்கும் ஒருவர், தமிழினத்தின் நிரந்தர எதிரியுடன் கூட்டணி சம்பந்தம் வைத்துக்கொண்டு விருந்து சாப்பிடுகிறார்.
6.நரம்பு புடைக்க தமிழ், தமிழ் என்று பேசித் திரிந்த புரட்சியின் புயலும் இப்போது காலம் கருதி தமிழனின் உரிமைக் குரலைக் கொஞ்சம் தள்ளிப் போடச் சொல்லியாகிற்று.
7.தமிழ் இளையோர்களோ தங்களின் கையறு நிலை கண்டு தம்மையே கொளுத்திக்கொள்கிறார்கள்.
8.அவர்கள் பிணத்தின் மீதும் அரசியலாளர்கள் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
9.வரலாற்று அறிவுகெட்டத் தமிழர்கள் சிலர் குடியேறிய நாட்டில் இவர்கள் ஏன் தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள் என சலித்துக்கொள்கிறார்கள்.
10.தொலைநோக்குப் பார்வையற்ற குருட்டுத் தமிழர்கள் ஏன் தனிநாடு.. எதற்குத் தனிநாடு.. தனிநாடு தேவையில்லை என்று வரிந்துகட்டி நிற்கிறார்கள்.
இப்படி எதையுமே கண்டுகொள்ளாத ஒரு சுயநல இனமாக தமிழினம் இருந்து கொண்டு உலகம் செவி மடுக்க மறுக்கிறதே, இந்தியா தமது இனத்தானைக் கொல்கிறதே என்று கும்மியடிப்பதால் என்னதான் பயன்?
சிதம்பரத்தின் மீதான செருப்பு வீச்சு சொல்வதெல்லாம் தற்போதும் நம்மைக் கொன்று குவிக்கும் நமது இன எதிரிகளுடன் நாம் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்கிறோம்....!
ஆனால் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்களுக்கான நியாயத்திற்கான போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இனவுணர்வின்றி மரத்துப் போன தமிழர்களுக்கு விழுந்த செருப்படிதான் இந்த நிகழ்வு.!!!!!!!!!
இனியாவது நாம் விழித்துக்கொண்டு, நமது சொந்தங்களுக்கு குரல் கொடுப்போம்

@செய்தி உதவி:- என்வழி & மதிபாலா

@ஆய்தன்:-
சுரணைகெட்ட இனமாநீ தமிழா - புலிபோல்
சீறியெழ வேண்டும்நீ தமிழா..!!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

அயனைப் புறக்கணிக்க தமிழர் அனைவருக்கும் கோரிக்கை

ன் அன்புக்குரிய சூரியாவிற்கு,

மனம் வருந்தி எழுதும் புலம்பெயர் ஈழத்தமிழனின் கடிதம் இது. நீங்கள் நடித்த படம் அனைத்தையுமே தவறாமல் பார்க்கும் இரசிகன் நான். எனது வீட்டில் நான் மட்டும் அல்ல எனது மனைவி பிள்ளைகள் அனைவருமே உங்கள் திரைப்படங்களை தவறாது பார்த்து வருகின்றோம். உங்களது புன்முறுவலும் சாந்தமான கண்களும் எம்மை மிகவும் கவர்ந்த விடையங்மளாகும். உங்களது குடும்பமே ஒரு உன்னதமான கலைக்குடும்பம்.

ஈழத்தமிழனாகிய நான் உங்களது தந்தையின் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். தமிழ்படங்களில் மட்டுமே நடித்து தமிழன் என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்தவர் உங்கள் தந்தையார். எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கின்னது நான் சிறுவனாக இருக்கும் போது எனது தந்தை தாயுடன் உங்கள் அப்பாவின் படங்களை ஒன்றும் விடாமல் பார்த்திருக்கின்றேன், ஏனென்றால் திரு சிவகுமாரின் படம் என்றால் எனது தந்தைக்கு நன்றாகப் பிடிக்கும்

உங்களது தம்பி கார்த்திக் மறத்தமிழன் அமிர் அவர்களின் பருத்திவீரன் படத்தில் நடித்து உண்மையிலே ஒரு தமிழ்மகன் என்பதை நிரூபித்துள்ளதோடு விருதுகளும் பொற்றுள்ளார்.

இவ்வளவு பெருமை மிக்க கலைக்குடும்பத்தை தமிழராகிய நாம் அடைந்ததையிட்டு பெருமிதம் அடைகின்றோம்

என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய சூரியா! இம் முறை உங்கள் ‘அயன்’ திரைப்படத்தைப் பார்கமுடியாமல் போவதையிட்டு நானும் எனது குடும்பத்தவரும் மிகுந்த கவலையடைந்துள்ளோம், காரணம் நீங்கள் நடித்த ‘அயன்’ படத்தை சண் நிறுவனம் தயாரித்ததால் அப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

காங்கிரசு கட்சியுடன் சேரந்து கொண்டு ஈழத்தமிழர்களை வதைசெய்யும் இனவாத சிங்கள அரசிற்குத் துணைபோகும் கலாநிதி மாறனும் அவரது கட்சியும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஈழப்ரோட்டத்தை நியாயப்படுத்தி ஒரு செய்தி கூட தமது தொலைக்காட்சிகளில் வெளியிடவில்லை. தேர்தல் நேரத்தில் தமிழர்களைப் பழிவாங்கும் காங்கிரசுக்காரரை தூக்கிப்பிடித்த வண்ணம் உள்ள சண் நிறுவனத்தின் எந்த படத்தையும் நாம் பார்ப்பதாக இல்லை.

இன்று வரை 70 மில்லியன் தென்னிந்திய தமிழ் மக்களை மதிக்காது நடந்துகொள்ளும் காங்கிரசு அரசு ஈழமக்களின் படுகொலைக்குத் துணைபோகின்றது. அவர்களது வாலைப்பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கு சுயலாபம் தேடுகின்றார்கள். எமது உடன்பிறவாச் சகோதரன் சீமானைச் சிறையில் தள்ளிவிட்டு தாங்கள் அரசியல் லாபம் தேட முனைகின்றனர்.

அனல்பறக்க உண்மைகளை எடுத்துரைக்கும் சீமான் கொளத்தூர் மணி போன்றோர் தேர்தல் காலத்தில் வெளியில் இருந்தால் தமது ஆசனத்துக்கு ஆபத்து என்று அவர்களை சிறையில்தள்ள வைத்த காங்கிரசுக்காரருக்குத் துணைபோகும் கலாநிதி மாறனும் அவரது சண் நிறுவனமும் தமிழர்களுக்குப் பெரும் துரோகம் விளைவிக்கின்றனர். இவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இந்தப் புறக்கணிப்பு.

இதுவரைகாலமும் மத்திய அரசில் இருந்தும் ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசில் ஒரு வார்த்தை கூட பேசாதவர் தான் திரு கலாநிதி மாறன். திமுக நினைத்திருந்தால் ஈழத் தமிழரது பிரச்சனையை என்றோ தீர்த்திருக்கலாம். ஏன் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் இருக்கின்றார்கள் இவர்கள், எல்லாம் தமது ஆசனத்தைப் பாதுகாக்கத் தான்.

இன்று புலம்பெயர் நாடுகளில் கலைஞர் தொலைக்காட்சி, சண் தொலைக்காட்சி எல்லாமே இருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள் யார்? யாருக்காக இத் தொலைக்காட்சிகள் தமது ஒளிபரப்பைச் செய்கின்றன? எல்லாம் ஈழத்தமிழர்களை நம்பித்தான். கவலையை மறக்க களிப்பைக்கொடுக்கும் தொலைக்காட்சிகள் தான் இவை, அதற்காக எம்மைப் புறக்கணிக்கும் இவர்களது தொலைக்காட்சிகளையும் திரைப்படங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்றில்லை. ஈழத்தமிழர்கள் படும் அவலத்தைப் பாராமுகமாக இருக்கும் இவர்களது தயாரிப்புகளை நாம் புறக்கணிப்பதில் தப்பில்லை.

ஆகவே அன்பான அழகான சூரியா அறிவது! உங்கள் மேலும் உங்களது குடும்பத்தின் மேலும் ஈழத் தமிழரது பாசம் என்றுமே குறையாது. இந்த புறக்கணிப்புப் போராட்டம் உங்களுக்கெதிரானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மனவருத்தத்துடன்
கதிரவன்
@நன்றி:சுத்துமாத்துக்கள்
@ஆய்தன்:
உணர்வுள்ள மலேசியத் தமிழர்களும் இந்தப் புறக்கணிப்பைத் தவறாமல் செய்யவேண்டும். உணர்வுகெட்ட மழுங்காண்டித் தமிழர்கள் மட்டும் அயனைப் பார்த்து மகிழட்டும்.

சனி, 4 ஏப்ரல், 2009

என்ன பிழை செய்தோமடி தாயே!



தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!


வெடிவிழுந்து எரிந்த பனை

கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை

என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!

@ஆய்தன்:-
என்ன பிழை செய்திருந்தாலும்
பொறுக்கக் கூடாதா தாயே..!

வியாழன், 2 ஏப்ரல், 2009

வன்னிச்சமரை எண்ணிப்பாரடா தமிழா..!


எண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா...

தமிழா மண்ணில் உன்னை வெல்ல யாருடா...

மரத் தமிழன் நீயடா...

உன்னைப் பிளவு படுத்தும் வீணணை வீழ்த்தடா...

தமிழ் அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா..!


ஆறரைக்கோடி தமிழினமே நீ கிளர்ந்தெழுந்தால்
ஆழ் கடலும் வழி விடுமே அறியவில்லையோ?
எக்கணமும் புகழ் மணக்க இருந்தவரே..
நீவீர் அக்கினியாய் கிளம்பாமல் அடங்கி இருப்பதேனோ?

பச்சிளம் பிஞ்சுகள் சருகாய் சாய்கிறதே
பால் மனம் மாறாப் பிள்ளைகள் பாடைகளில் போகிறதே
கோரத் தாண்டவமாடும் சிங்களன் வெறியாட்டத்தில்
வீர புலிக்குட்டிகள் விழுப்புண் தாங்கி மடிகிறதே!

கொதித்து எழடா தமிழா - உன்
குருதி குடித்தவனை மிதித்து வீழ்த்தடா தமிழா....
செத்து செத்து வாழ்வதை விட - தமிழீழம்
மலர வித்தாகி மடிவோம் வாடா தோழா!

தோள்தருவோம் நம் புலிக்கூட்டம் தினவெடுக்க
வாழ் எடுப்போம் பகைவனின் கதை முடிக்க
நாள் குறிப்போம் தாயக விடியலுக்காக - நம்பிப்
போராடப் புறப்படடா என் தமிழா..!!

இப்படிக்கு,
தமிழகத்திலிருந்து தமிழ்செல்வன்


@ஆய்தன்:-
எண்ணிப் பாரடா தமிழா - தமிழீழம் மட்டுமே
உன்துயர் தீர்க்கும் மறந்திடாதேடா..!