அயனைப் புறக்கணிக்க தமிழர் அனைவருக்கும் கோரிக்கை
என் அன்புக்குரிய சூரியாவிற்கு,
மனம் வருந்தி எழுதும் புலம்பெயர் ஈழத்தமிழனின் கடிதம் இது. நீங்கள் நடித்த படம் அனைத்தையுமே தவறாமல் பார்க்கும் இரசிகன் நான். எனது வீட்டில் நான் மட்டும் அல்ல எனது மனைவி பிள்ளைகள் அனைவருமே உங்கள் திரைப்படங்களை தவறாது பார்த்து வருகின்றோம். உங்களது புன்முறுவலும் சாந்தமான கண்களும் எம்மை மிகவும் கவர்ந்த விடையங்மளாகும். உங்களது குடும்பமே ஒரு உன்னதமான கலைக்குடும்பம்.
ஈழத்தமிழனாகிய நான் உங்களது தந்தையின் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். தமிழ்படங்களில் மட்டுமே நடித்து தமிழன் என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்தவர் உங்கள் தந்தையார். எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கின்னது நான் சிறுவனாக இருக்கும் போது எனது தந்தை தாயுடன் உங்கள் அப்பாவின் படங்களை ஒன்றும் விடாமல் பார்த்திருக்கின்றேன், ஏனென்றால் திரு சிவகுமாரின் படம் என்றால் எனது தந்தைக்கு நன்றாகப் பிடிக்கும்
உங்களது தம்பி கார்த்திக் மறத்தமிழன் அமிர் அவர்களின் பருத்திவீரன் படத்தில் நடித்து உண்மையிலே ஒரு தமிழ்மகன் என்பதை நிரூபித்துள்ளதோடு விருதுகளும் பொற்றுள்ளார்.

இவ்வளவு பெருமை மிக்க கலைக்குடும்பத்தை தமிழராகிய நாம் அடைந்ததையிட்டு பெருமிதம் அடைகின்றோம்
என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய சூரியா! இம் முறை உங்கள் ‘அயன்’ திரைப்படத்தைப் பார்கமுடியாமல் போவதையிட்டு நானும் எனது குடும்பத்தவரும் மிகுந்த கவலையடைந்துள்ளோம், காரணம் நீங்கள் நடித்த ‘அயன்’ படத்தை சண் நிறுவனம் தயாரித்ததால் அப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
காங்கிரசு கட்சியுடன் சேரந்து கொண்டு ஈழத்தமிழர்களை வதைசெய்யும் இனவாத சிங்கள அரசிற்குத் துணைபோகும் கலாநிதி மாறனும் அவரது கட்சியும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஈழப்ரோட்டத்தை நியாயப்படுத்தி ஒரு செய்தி கூட தமது தொலைக்காட்சிகளில் வெளியிடவில்லை. தேர்தல் நேரத்தில் தமிழர்களைப் பழிவாங்கும் காங்கிரசுக்காரரை தூக்கிப்பிடித்த வண்ணம் உள்ள சண் நிறுவனத்தின் எந்த படத்தையும் நாம் பார்ப்பதாக இல்லை.
இன்று வரை 70 மில்லியன் தென்னிந்திய தமிழ் மக்களை மதிக்காது நடந்துகொள்ளும் காங்கிரசு அரசு ஈழமக்களின் படுகொலைக்குத் துணைபோகின்றது. அவர்களது வாலைப்பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கு சுயலாபம் தேடுகின்றார்கள். எமது உடன்பிறவாச் சகோதரன் சீமானைச் சிறையில் தள்ளிவிட்டு தாங்கள் அரசியல் லாபம் தேட முனைகின்றனர்.
அனல்பறக்க உண்மைகளை எடுத்துரைக்கும் சீமான் கொளத்தூர் மணி போன்றோர் தேர்தல் காலத்தில் வெளியில் இருந்தால் தமது ஆசனத்துக்கு ஆபத்து என்று அவர்களை சிறையில்தள்ள வைத்த காங்கிரசுக்காரருக்குத் துணைபோகும் கலாநிதி மாறனும் அவரது சண் நிறுவனமும் தமிழர்களுக்குப் பெரும் துரோகம் விளைவிக்கின்றனர். இவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இந்தப் புறக்கணிப்பு.
இதுவரைகாலமும் மத்திய அரசில் இருந்தும் ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசில் ஒரு வார்த்தை கூட பேசாதவர் தான் திரு கலாநிதி மாறன். திமுக நினைத்திருந்தால் ஈழத் தமிழரது பிரச்சனையை என்றோ தீர்த்திருக்கலாம். ஏன் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் இருக்கின்றார்கள் இவர்கள், எல்லாம் தமது ஆசனத்தைப் பாதுகாக்கத் தான்.
இன்று புலம்பெயர் நாடுகளில் கலைஞர் தொலைக்காட்சி, சண் தொலைக்காட்சி எல்லாமே இருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள் யார்? யாருக்காக இத் தொலைக்காட்சிகள் தமது ஒளிபரப்பைச் செய்கின்றன? எல்லாம் ஈழத்தமிழர்களை நம்பித்தான். கவலையை மறக்க களிப்பைக்கொடுக்கும் தொலைக்காட்சிகள் தான் இவை, அதற்காக எம்மைப் புறக்கணிக்கும் இவர்களது தொலைக்காட்சிகளையும் திரைப்படங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்றில்லை. ஈழத்தமிழர்கள் படும் அவலத்தைப் பாராமுகமாக இருக்கும் இவர்களது தயாரிப்புகளை நாம் புறக்கணிப்பதில் தப்பில்லை.
ஆகவே அன்பான அழகான சூரியா அறிவது! உங்கள் மேலும் உங்களது குடும்பத்தின் மேலும் ஈழத் தமிழரது பாசம் என்றுமே குறையாது. இந்த புறக்கணிப்புப் போராட்டம் உங்களுக்கெதிரானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மனவருத்தத்துடன்
கதிரவன்

@நன்றி:சுத்துமாத்துக்கள்
@ஆய்தன்:
உணர்வுள்ள மலேசியத் தமிழர்களும் இந்தப் புறக்கணிப்பைத் தவறாமல் செய்யவேண்டும். உணர்வுகெட்ட மழுங்காண்டித் தமிழர்கள் மட்டும் அயனைப் பார்த்து மகிழட்டும்.
4 கருத்துகள்:
ulagil elathil ulavarkal matum tamilarkal alla.mudalil ela tamilerakalay averkal natukaka porrada sollungal.matravergalku pragu advice pannalam.
அபத்தமாக இருக்கு
இதில் உடன்பாடு இல்லை
சன் குழுமம் தயாரிக்கவில்லை விநியோகம் மட்டும் அதுவும் இந்தியாவில் மட்டும் செய்கின்றது. தயாரிப்பு ஏவிஎம், புலம் பெயர் நாடுகளில் விநியோகம் ஐங்கரன். திரைப்படத் துறையினர் ஈழத்தமிழருக்கு வழங்கிய ஆதரவை மறந்துவிட்டீர்களா? சன் டீவி ஸ்ரீ லங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அவர்கள் நேரடியாக உண்ணாவிரதத்தை ஒளிபரப்பியதுதான்.
@பெயரில்லா அன்பரே,
தமிழ் உறவுகளை.. தமிழர்களை.. உலக எல்லைகளைக் கடந்து நேசிக்கப் பழகுவதில் தவறில்லையே..!
//mudalil ela tamilerakalay averkal natukaka porrada sollungal.//
உயிரையே ஆயுதமாக ஏந்தி அவர்கள் போராடுகின்ற செய்திகளைத் தாங்கள் அறியவில்லையோ!
போர்களத்தின் நடுவில் நின்றுகொண்டு தனக்கு மட்டுமின்றி, உலகத் தமிழனுக்காகவும் சேர்த்து போராடும் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைபடுத்துவது தமிழர்களுக்கு அழகல்ல.. அறிவுடைமையும் அல்ல!!
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வுகொண்ட மரபில் வந்தவர்கள் தமிழர்கள்.
ஆனால், இன்றையத் தமிழர்கள் பக்கத்து வீட்டுத் தமிழனையே எதிரிபோல பார்க்கின்ற நிலைக்குக் கீழிறங்கி வந்துவிட்டனர்.
காலத்தின் கோலம் இது..
இன உணர்வு; மொழி உணர்வு கெட்டுப்போனதன் வெளிப்பாடு இது!
*****
@விக்கினேசுவரன் அவர்களே,
//இதில் உடன்பாடு இல்லை//
இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில், அது தங்கள் உரிமை.
ஆனால் ஒன்று. இப்படியெல்லாம்கூட எதிரிக்கு எதிராகப் போராட முடியும்; புறக்கணிப்பு செய்ய முடியும் என்ற ஒரு சிந்தனைக்கு இதுவொரு வித்து.
கருத்துரையிடுக