48 மணி நேர போர் நிறுத்தம் ஏன்? எதற்கு?
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக ரீதியாக புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.
சித்திரை(தமிழ்), சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த யுத்த நிறுத்தம் எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் அமுலில் இருக்கும் என மகிந்த ராசபக்சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
48 மணிநேர தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்ட அதேவேளை, சிறிலங்காவின் உள்ளூர் ஊடகங்களுக்கு மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், இதனால் சர்வதேச ரீதியில் புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் அழுத்தங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போர் நிறுத்தம் வரும் காலப்பகுதியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரித்து செய்திகளை வெளியிடுமாறு அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறனையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே சிறிலங்கா அரசின் இந்த கபடத்தனமான செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கை திட்டத்தை தவிடுபொடியாக்க, சர்வதேச ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது மேற்கொள்வதன் மூலம், சிறிலங்காவுக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் பிரயோகிக்க வழியேற்படும் என்பது நினைவூட்டத்தக்கது.
@நன்றி:தமிழ்த்தேசியம்
@ஆய்தன்:-
எள்ளு எண்ணெய்க்குக் காயும்
எலிப்புழுக்கை எதற்கு காய்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக