வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 4 ஏப்ரல், 2009

என்ன பிழை செய்தோமடி தாயே!



தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!


வெடிவிழுந்து எரிந்த பனை

கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை

என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!

விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை

என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே!

@ஆய்தன்:-
என்ன பிழை செய்திருந்தாலும்
பொறுக்கக் கூடாதா தாயே..!

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
17.05.2009 மாலை மணி 5...
உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!

ttpian சொன்னது…

கதை எழுதுகிற ஆசாமியாலும்,நடனக்காரியாலும்,தமிழர்கலுக்கு ஆபத்து!