வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

செருப்படி விழுந்தாலும் தமிழர் சிலர் திருந்தார்..

1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் செகதீசு டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் சார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் சர்னைல் சிங் என்ற சீக்கியர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தனது காலணியைக் கழற்றி சிதம்பரத்தின் மீது வீசினார்.

உடனே அவரை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
  • செருப்படி 1:-
  • செருப்படி 2:-
செய்தியாளர் கூட்டத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்ட சர்னைல் சிங் கூறுகையில், “நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். டைட்லரை விடுவித்தது சீக்கியர்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. இது ஒரு எரியும் பிரச்சனை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை” என்றார்.
  • செருப்படி 3:-
செருப்பை வீசிய நிருபருக்கு இந்திய அரசியல் கட்சியான அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 இலட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • இதுதான் இனப்பற்று என்பது..! இதுதான் மொழிப்பற்று என்பது..!
  • ஆனால் தமிழினம்??????????
1.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அணிஅணியாக வன்னியில் கொல்லப்படும் போது தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்???
2.கூட்டணிப் பங்கீடு பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
3.சீட்டுக்கணக்குகளுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
4.தமிழினத்துக்கு காவல்காரனாய் இதுகாறும் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள் யார் தமிழினப் படுகொலைக்குக் காரணமாய் இருக்கிறார்களோ அவர்களோடு கூடி மகிழ்கிறார்கள்.
5.தான் நடத்தும் தொல்லைக்காட்சியில் அனுதினமும் ஈழத்துக்காக ஒப்பாரி வைக்கும் ஒருவர், தமிழினத்தின் நிரந்தர எதிரியுடன் கூட்டணி சம்பந்தம் வைத்துக்கொண்டு விருந்து சாப்பிடுகிறார்.
6.நரம்பு புடைக்க தமிழ், தமிழ் என்று பேசித் திரிந்த புரட்சியின் புயலும் இப்போது காலம் கருதி தமிழனின் உரிமைக் குரலைக் கொஞ்சம் தள்ளிப் போடச் சொல்லியாகிற்று.
7.தமிழ் இளையோர்களோ தங்களின் கையறு நிலை கண்டு தம்மையே கொளுத்திக்கொள்கிறார்கள்.
8.அவர்கள் பிணத்தின் மீதும் அரசியலாளர்கள் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
9.வரலாற்று அறிவுகெட்டத் தமிழர்கள் சிலர் குடியேறிய நாட்டில் இவர்கள் ஏன் தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள் என சலித்துக்கொள்கிறார்கள்.
10.தொலைநோக்குப் பார்வையற்ற குருட்டுத் தமிழர்கள் ஏன் தனிநாடு.. எதற்குத் தனிநாடு.. தனிநாடு தேவையில்லை என்று வரிந்துகட்டி நிற்கிறார்கள்.
இப்படி எதையுமே கண்டுகொள்ளாத ஒரு சுயநல இனமாக தமிழினம் இருந்து கொண்டு உலகம் செவி மடுக்க மறுக்கிறதே, இந்தியா தமது இனத்தானைக் கொல்கிறதே என்று கும்மியடிப்பதால் என்னதான் பயன்?
சிதம்பரத்தின் மீதான செருப்பு வீச்சு சொல்வதெல்லாம் தற்போதும் நம்மைக் கொன்று குவிக்கும் நமது இன எதிரிகளுடன் நாம் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்கிறோம்....!
ஆனால் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்களுக்கான நியாயத்திற்கான போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இனவுணர்வின்றி மரத்துப் போன தமிழர்களுக்கு விழுந்த செருப்படிதான் இந்த நிகழ்வு.!!!!!!!!!
இனியாவது நாம் விழித்துக்கொண்டு, நமது சொந்தங்களுக்கு குரல் கொடுப்போம்

@செய்தி உதவி:- என்வழி & மதிபாலா

@ஆய்தன்:-
சுரணைகெட்ட இனமாநீ தமிழா - புலிபோல்
சீறியெழ வேண்டும்நீ தமிழா..!!

கருத்துகள் இல்லை: