வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

தமிழீழம் மலர்ந்தாலொழிய வேறு தீர்வே இல்லை

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் நீர் கூட அருந்தாமல் கடைசி மூச்சிருக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் பரமேசுவரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை.எங்கள் அன்பான தமிழ் மக்களே;
இது தமீழீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.
எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள். தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை.
அனைவரும் எமது நண்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை தொடக்கி வைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அறவழிப் போராட்டத்தையோ அல்ல.
தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப் போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆலவிருச்சமாக அகன்று விரிந்து ஆழ வேரூன்ற வேண்டும்.
அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டு வாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள். கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லறியாலும் வீழ்த்த முடியாது, பல்குழலாலும் மடிக்க முடியாத தூண்களே!
திரண்டு கிளர்ந்து எழுந்து வாருங்கள்.
தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்,
பரமேசுவரன் & சிவா

@ஆய்தன்:-
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (அதி:67 குறள்:669)

கருத்துகள் இல்லை: