வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 23 மே, 2009

"(ஈழ) போர்க் குற்றவாளிகளை ஆதரிக்க வேண்டாம்" மலேசிய அரசுக்குக் கோரிக்கை



சிறிலங்கா அரசாங்கம் அதன் உள்நாட்டு விவகாரங்களில் ஐநா உறுப்பினர்கள் தலையிடக்கூடாது எனக் கோரும் தீர்மானம் ஒன்றை ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மலேசிய அரசாங்கம் அத்தீர்மானத்திற்கு வழங்கியுள்ள ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்தியன் காங்கிரசு தலைவர் ச. சாமிவேலு மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


சிறிலங்கா அரசாங்கம் தாக்கல் செய்துள்ள இத்தீர்மானம் வரும் திங்கள்கிழமை (மே 25) ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் விவாதிக்கப்படும்.


“மலேசியாவில் வாழும் 1.8 மில்லியன் இந்தியர்களில் 1.4 மில்லியன் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.


“சிறிலங்கா போர்க் குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கு” போர்க் குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினார். (விரிவாக)
@நன்றி:மலேசியாஇன்று
@ஆய்தன்:-
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//நல்ல மனம் வாழ்க//

யார் அந்த நல்ல மனம் படைத்தவர்?