வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 5 பிப்ரவரி, 2009

உலகமெங்கும் ஒரே உணர்வு.. ஈழ விடுதலை உணர்வு!

இலங்கையில் தற்போது நடந்துவரும் சிங்களவரின் கொலைப்பாதகப் போர் உலக நாடுகள் - அரசியல் தலைவர்கள் - சமயப் பெரியவர்கள் - மனிதநேயப் பணியாளர்கள் - ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக, உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் - தமிழுறவுகள் உள்ளங்களையும் உணர்ச்சிகளையும் மிக மிக ஆழமாகவே பாதித்து உள்ளது.

இலங்கையில் நடக்கும் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும்; வரலாறு காணாத மனிதப் பேரவலத்தை கண்டித்தும் - உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் பேரணிகள் நடந்துவருகின்றன.

இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்குப் பல்வேறு நாடுகளில் வாழும் உலகத் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கண்டன மறியலையும் - அமைதிப் போராட்டத்ததயும் - கவன ஈர்ப்பு போராட்டத்தையும் - மனித சங்கிலி ஊர்வலத்தையும் - இன்னும் பிற நடவடிக்கைகளையும் பாரிய அளவில் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு, உலகமெங்கும் முன்னெடுக்கப்படும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களைத் தொகுத்தெடுத்து இந்தப் பதிவை இடுகின்றேன். இதில் எமது கவனக்குறைவினால் நான் இணைக்கத் தவறிய செய்திகள் இருப்பின், அருள்கூர்ந்து பொருத்தருள்வதோடு உடன் சுட்டிக்காட்ட அன்போடு வேண்டுகிறேன்.

1.இலண்டனில் வரலாறு காணாத கண்டனப் பேரணி

2.ஐ.நா முன்னிலையில் ஆர்ப்பரித்த தமிழர்கள்
















19.சென்னையில் மாணவர்கள் சாலை மறியல்

20.நியுசிலாந்தில் தமிழர் கண்டனப் பேரணி

21.இந்திய அரசைக் கண்டித்து 6.2.2009இல் மலேசியாவில் பேரணி

@ஆய்தன்:-
கெடல் எங்கே தமிழர் நலம் - அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க..! -புரட்சிக்கவி பாரதிதாசன்

2 கருத்துகள்:

A N A N T H E N சொன்னது…

தொகுப்பு சேகரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி போற்றத்தக்கது.

நாளை தலை நகர்லயா? சேதம் இன்றி நடக்க வேண்டுவோம்

பெயரில்லா சொன்னது…

அம்மா........ அம்மா........
மகன் தாயை அழைக்கும் குரல்..
ம்கனே.... மகனே
ஒரு தாய் மகனை அழைக்கிறாள்.....
என்னை அழைக்க இங்கு யாரும் இல்லையோ......
ஈழத் தமிழர்களின் குரல்....
நீல நிற ஆற்றை கண்டுள்ளேன்....
சிவப்பு நிற ஆற்றை ஈழத்தில் கண்டேன்...
தாகத்தை தீர்க்க அந்நீரை அருந்தினேன்..
என் இரத்ததை நானே குடிப்பதா....
மடிகிறான் என் சகோதரன் அங்கே...
அறிந்தேன் உண்மையை...
என் தாயே (இந்தியா) அதற்கு உதவுகிறாள் என்று...
இது கொடுமையிலும் கொடுமையடா....
இதற்கு விடிவு என்ன தோழர்களே?
ஒவ்வொரு மனிதனும் இறப்பதா?
ஒவ்வொரு மனிதனும் கருத்து கூறுவதா?
ஒவ்வொரு மனிதனும் போராடுவதா?
அங்கே ஒவ்வொரு வினாடியும் என் உறவு மடிகிறது? இன்னும் தாமதம் ஏன்?
சிறிலங்கா அரசே? ரோம்ப சிரிக்காதே? உன் அழிவு என் கையில்........

- தமிழன் -