தமிழோடு வாழும் எண்ணம் உதயமாகட்டும்..! தமிழராய் வாழும் உள்ளம் உதயமாகட்டும்..! உரிமைகள் கேட்கும் உணர்வு உதயமாகட்டும்..! விடுதலை வழங்கும் தீபஒளி உதயமாகட்டும்..!
2 கருத்துகள்:
பெயரில்லா
சொன்னது…
மலேசிய முதல் வலைப்பதிவாம் தமிழுயிரைக் கண்டு பெருமிதமாக உள்ளது. தமிழ் மரபை நெறியோடு காக்கப் புறப்பட்ட புதுத்தமிழர் நீங்கள். திரு ஆய்தன், தோழர் நற்குணன், இன்னும் பலரும் தமிழுக்கு ஓர் அரும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள். துணைவருவது எங்கள் கடன்.
(அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்க 5-6 வருடங்களுக்கு முன்பு திட்ட்மிட்டுத் தொடங்கிய போது எழுதிய கவிதையை இன்று பொறுத்தமாக இருக்கும் என்றெண்ணி இணைத்துள்ளேன். அப்போது பூக்களம் இக்கவிதையைத் தமது இதழில் "விடியல்" என்னும் தலைப்பில் வெளியிட்டது.நன்றி.)
உங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள். மின்னஞ்சல்:- tamiluyir.my@gmail.com
2 கருத்துகள்:
மலேசிய முதல் வலைப்பதிவாம் தமிழுயிரைக் கண்டு பெருமிதமாக உள்ளது. தமிழ் மரபை நெறியோடு காக்கப் புறப்பட்ட புதுத்தமிழர் நீங்கள். திரு ஆய்தன், தோழர் நற்குணன், இன்னும் பலரும் தமிழுக்கு ஓர் அரும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள். துணைவருவது எங்கள் கடன்.
(அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்க 5-6 வருடங்களுக்கு முன்பு திட்ட்மிட்டுத் தொடங்கிய போது எழுதிய கவிதையை இன்று பொறுத்தமாக இருக்கும் என்றெண்ணி இணைத்துள்ளேன். அப்போது பூக்களம் இக்கவிதையைத் தமது இதழில் "விடியல்" என்னும் தலைப்பில் வெளியிட்டது.நன்றி.)
விடியல்
ஆங்கிலத்தால் விஞ்ஞானம் அடைந்திடலாம் என்றெண்ணி
அரசுவேலை நடக்குதிங்கே தெரியுமா?
ஆங்கிலத்தைப் பள்ளியிலே அடுக்கடுக்காய்ப் புகுத்துவதால்
அன்னைமொழிக் கென்னாகும் புரியுமா?
விஞ்ஞான விடியலுக்கு மெல்லமெல்லத் தாய்த்தமிழை
விட்டுவிட்டுப் பார்த்திருக்க முடியுமா?
அஞ்ஞானம் விஞ்ஞானம் அத்தனையும்
தாண்டியதே
அன்னைமொழி தானொன்று தெரியுமா!
அறிவியலுக்கு கேற்றபடி அருந்தமிழைப் பக்குவமாய்
ஆக்குவதே விடியலுக்கு விடையாம்
அறிவியலை, க்ணிதத்தை அப்படியே பிறமொழிக்குக்
கொடுத்துவிட்டு நிற்பதுமடக் கொடையாம்!
சரியாக முடிவெடுக்கத் தவறிவிட்டால் வருமழிவைத்
தடுப்பதற்குத் தலைவர்களே முடியுமா?
அறிவுலகம் கண்டுஅதைச் சரிபடுத்த முந்வந்தால்
அவர்களையும் தடுத்துவிட்டால் விடியுமா!
பள்ளியிலே தமிழின்றேல் படிப்படியாய்த் துறைதோறும்
துறைதோறும் தமிழின்றிப் போகுமே!
வெள்ளிப்பணச் சீனரைப்போல் கொள்கையிலே நில்லாக்கால்
விடியலிங்குத் தமிழருக்குத் தூரமே!
"எசு" வென்றும் "எல்" லென்றும் இடையளவுக் கேற்றபடி
உடுக்கின்றோம் ஆடைகளைச் சரியாய்
"எசு" சாரே எனத்தானே ஏவலுக்கு நம்தலைமை
இருக்கிறது மொழிநலத்தில் பொதுவாய்!
ஒன்றுபட்டச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு தான்என்னும்
ஒருவரிங்கே எடுப்பதுதான் முடிவா?
தொன்றுதொட்டே இப்படித்தான் தொடருகிறோம் நம்சரிதை
தொடுவானில் வெள்ளியெனும் விடிவா?
வேற்றுமொழிக் கிசைந்துவிட்டு மேடையிலே மட்டும்தமிழ்
மீட்டெடுப்புக் கொள்கையுரைச் சேவையா?
தோற்றவுடன் கோட்டையினை எழுப்புகிறப் படைத்தலைவன்
சொல்லுங்கள் நமக்கிங்கே தேவையா?
கவிதை அருமை..
கருத்துரையிடுக