தமிழே தெலுங்கப்பா? தமிழ்ப்பள்ளியில் தெலுங்காப்பா?
கடந்த 7.8.2008இல், மலேசியத் தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் அட்சயக்குமார் "தமிழ்ப்பள்ளிகளில் தெலுங்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்பதாக ஓர் அறிக்கையை தமிழ் நாளிதழ்களில் விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மறுநாள் மலேசியத் திராவிட இயக்கத்தின் தேசியத் தலைவர் மானமிகு இரே.சு.முத்தையா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளில் தமிழே பாடமாக இருக்க வேண்டுமே ஒழிய தெலுங்குக்கு அங்கே இடம் கொடுக்கக்கூடாது என கூறியிருந்தார். பிறகு, 10.8.2008இல், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவனேசன் தெலுங்கு சங்கத்தின் அறிக்கையை வரவேற்றும் இரே.சு.முத்தையாவைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார்.
இந்தச் சிக்கல் தொடர்பில் 'தமிழுயிர்' 20க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றது. 'தமிழுயிரின்' நிலைப்பாட்டை அறிய ஆர்வத்துடன் மின்னஞ்சல் விடுத்த தமிழுயிர் அன்பர்களை நன்றியோடு வணங்கி இந்த இடுகை வெளியிடப்பெறுகிறது. இந்தச் சின்ன செய்தி நச்சென்று இருக்குமென 'தமிழுயிர்' நம்புகிறது.
அப்பாவுக்கு அப்பா
இதுதான் தெலுங்கப்பா!
@ஆய்தன்:-
மதிப்புமிகு அட்சய குமாரப்பா!
மாண்புமிகு சிவ நேசனப்பா!
எங்கள் தமிழே தெலுங்கப்பா!!!
எதற்குத் தமிழ்ப்பள்ளியில் தெலுங்கப்பா???
6 கருத்துகள்:
இனவாதத்தை உருவாக்க தான். பிறகு மலயாளிகள் பாடம் வேண்டும் என்பார்கள்.. எல்லாம் போய் கடைசியில் தமிங்கிலிஸ்சில் கூட ஒரு பாடம் கேட்டாலும் கேட்பார்கள்...
தமிழ்ப்பள்ளிகளில் தெலுங்கு மொழியை ஒரு பாடமாக வைக்கக் கோருவது சரியானதாகப் படவில்லை. சீனர் குமுகாயத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்த போதிலும் மாண்டரின் மொழியை கல்வி மொழியாக ஏற்றுள்ளனர். அதுபோல, இந்தியர்களில் ஒரு பிரிவினராக உள்ள தெலுங்கு அன்பர்கள் தமிழையே கல்வி மொழியாக ஏற்க வேண்டும்.
//மதிப்புமிகு அட்சய குமாரப்பா!
மாண்புமிகு சிவ நேசனப்பா!
எங்கள் தமிழே தெலுங்கப்பா!!!
எதற்குத் தமிழ்ப்பள்ளியில் தெலுங்கப்பா???// நறுக்கென்ற இந்த நான்கு வரிகள் நன்று!
தெலுங்கர்கள் தங்கள் தாய் மொழியைக் கற்க வேண்டும் எனக் கோருவது முறையே. அவர்களின் தாய்மொழி பற்று பாராட்டிற்குரியது. ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் எனும் வாதம் சரிபடவில்லை. வேண்டுமென்றால் தெலுங்கர்கள் கணிசமானத் தொகையில் வசிக்கும் இடங்களில் தெலுங்குப் பள்ளிகளைத் தொடங்கி, அங்கு தெலுங்கு மொழியைத் தாராளமாகக் கற்பிக்கலாம். தமிழ்ப் பள்ளி என்றும் தமிழ்ப் பள்ளிதான், அது இந்தியப் பள்ளியல்ல.. நான் வசிக்கும் இடத்தில் சீக்கியர்கள், சீக்கியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துகின்றனர். இவர்களின் அடிசுவட்டை தெலுங்கர்களும் மலையாளிகளும் பின்பற்றி அவரவர் மொழியை தாராளமாகக் கற்பிக்கலாம்.
மலேசியத்தின் முன்னணி வலைப்பதிவர்களான விக்கேஷ்வரன், சுப.நற்குணன், சதிசுகுமார் ஆகிய மூவரின் மறுமொழிக்கும் எமது நன்றி. இந்தச் சிக்கலை உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல் அறிவுசார்ந்த நிலையில் அணுகுவதே அனைவருக்கும் நல்லது.
தமிழர் என்ற கூட்டுக்குள் தெலுங்கு மக்கள் வரமுடியாது. ஆனால், இந்தியர் என்ற வட்டத்துக்குள் அவர்கள் வந்துவிட்ட பிறகு, பெரும்பான்மைத் தமிழரின் பலத்தைக் குறைக்கும் வகையில் தெலுங்கர்கள் செயல்படுவது மக்களாட்சி முறையில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.
மேலும், காலப்போக்கில் தமிழ்ப்பள்ளி என்ற தனி அடையாளம் மறைந்து போகும். ஐயா, சதிசு குறிப்பிடுவது போல தெலுங்கர்கள் தனிப் பள்ளியோ அல்லது தனியார் பள்ளியோ வைத்துக்கொள்வதே பலவகையிலும் நன்மையாக இருக்கும்.
eaaaa
தெலுங்கு சங்க தலைவரே....அரசியல் ஆதாயத்திற்காக சொல்லபட்ட இனிப்பு பூசப்பட்ட வார்த்தை என்று நாங்கள் அனைவரும் அறிவோம்.தலைவர் பதவியை தற்காக்க என்னமா பேச்சு.....அக்காலத்தில் ஆரம்பிக்கபட்ட தெலுங்கு பள்ளியை,
தொலைத்த பின்பு தமிழ்பள்ளியும் தொலைக்கலாம் என்ற எண்ணமா?
கருத்துரையிடுக