வாக்கெடுப்பு(4) முடிவு
- தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றனர்.
1.ஆமாம் :- 23%
2.இல்லை:- 73%
3.தெரியவில்லை :- 4%
@ஆய்தன்:-
கூலிக்கு மாறடிக்கும் தமிழ்க் கல்வியாளர் கூட்டமே பெரிதாக பெரிதாக இருக்கிற வேளையில், தமிழ் வளர்ச்சியாவது..? தமிழ் வாழ்வாவது..? நான் வாழ்ந்தால் போதும்.. என் பொண்டாட்டி பிள்ளைகள் வாழ்ந்தால் போதும்.. என்று எண்ணிகின்ற தமிழ்க் கல்வியாளர்களே அதிகம். வயிற்றுக்கு மட்டும் பிழைக்கும் சோற்றுப் பிண்டங்கள் இவர்கள்!! தமிழ்ச் சோறு தின்னும்கூட தமிழுக்காக ஒரு சிறிய ஆக்கத்தையும் செய்யாத இந்தத் தண்டச் சோற்றுப் பிண்டங்கள் என்றுதான் திருந்துவார்களோ? நானறியேன் பராபரமே...!
3 கருத்துகள்:
என்ன இருந்தாலும் நமது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை இப்படித் திட்டக்கூடாது. -சங்கர்
சங்கர்,
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைத் திட்டுவது எமது நோக்கமல்ல. எமது தமிழ் மாணாக்கரிடையே இளம் வயதிலேயே தமிழறிவையும் தமிழுணர்வையும் விதைக்க வேண்டிய பொறுப்புமிக்க ஆசிரியர்கள், அந்த பொறுப்பினை முறைப்படி செய்யாமல் விடுவதில்தான் எமக்கும் எம்மைப் போன்று தமிழ்நலம் நாடும் அன்பர்களுக்கும் இருக்கின்ற மனக்குறை. மற்றபடி, தமிழுணர்ச்சி மிகுந்த நல்லாசிரியர்கள் பலர் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படியான தமிழ்ச் சுரணைமிக்க தமிழாசிரியர் கூட்டம் பெருக வேண்டும் என்பதே எமது அவா.
தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றனர்...
இந்த கருத்து முற்றிலும் உண்மை..தமிழ் படித்தவர்கள் மட்டும் தான் இன்றும் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை காட்டுகிறார்கள்
தமிழ் கல்வியாளர்கள் இன்றும் கூட தமிழ் பள்ளிகளையும் வாழ வைத்து கொண்டு இருகிறார்கள்.
ஆய்தன் அவர்களே ஒரு சின்ன வேண்டுகோள்.... எந்த காரணத்திற்காகவும் தமிழ் பள்ளி படித்தவர்களை பழிக்காதீர்கள்....
தமிழ் பள்ளி படித்தவர்கள் தங்கள் உரிமையை சரியாக பயன் படுத்தி இருகிறார்கள்.
மலேசிய இந்தியர்கள் தமிழ் பள்ளியில் சென்று தமிழ் கல்வி கறப்பதும் நமது உரிமைகளில் ஒன்று. அதை விடுத்து உரிமை பறித்து விட்டார்கள் என்று எதற்காக கொடி பிடிக்க வேண்டும்....
சிவாகணபதி,
Seremban, Malaysia
கருத்துரையிடுக