வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 16 ஜூன், 2009

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது; தமிழரின் தாகம் தீரப் போகிறது!

இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும்.

எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை (16.6.2009) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த நிபுணர் குழுவில் மலேசியாவின் நிகராளியாக பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் பி.இராமசாமி அவர்களும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்கள் 9 முகாமையான விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. (விரிவான செய்தி)

@ஆய்தன்:-
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப்
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்..!

கருத்துகள் இல்லை: