வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 3 ஜூன், 2009

பரபரப்புச் செய்தி:- பிரபாகரன் மகன்களில் 2 சார்லசு ஆண்டனிகளா?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்லசு ஆண்டனி மரணச் செய்தியில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள்.

பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்லசு ஆண்டனிகள் இருக்கிறார்களாம்!

இதுவரை ஈழத்தில் நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன.

கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”.

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லசு ஆண்டனியும் அந்த அமைப்பின் முக்கிய 17 தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என்ற செய்திதான் அது.

சார்லசு ஆண்டனி பிணமாகக் காட்சியளிக்கும் வீடியோ படங்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் பரபரக்க வைத்தன.

இது சாத்தியமான சம்பவம்தானா? (விரிவாக)

@நன்றி:-தமிழ்வின்

2 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பத்திரிக்கைகள் தாம் வியாபார நோக்குக்கு இம்மாதிரியான செய்திகளை போட்டு அட்டகாசம் செய்கிறதென்றால், இணைய ஊடகங்களும் அதே மாதிரி செய்வது வருத்தமான ஒன்றாகும்.

ஆதவன் சொன்னது…

@விக்கினேசுவரன்,

உங்கள் கருத்து உண்மை.

இந்தக் கருத்த சிங்கள வெறிபிடித்த இணைய ஊடகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

கூடவே, சிங்கள அடிவருடிகள் - பார்ப்பன பித்தர்கள் - தமிழினப் பகைவர்கள் நடத்தும் ஊடகங்களுக்கும் மிகப் பொருந்தும்.

இதனை போக்கத்தப் போக்கிரிகளும் தமிழனுக்கு எதிரான செய்திகளை என்னாமாய் தொகுத்து - திரித்து - சோடித்து வெளியிடுகிறார்கள்..!

அண்ட புளுகுக்கும் ஆகாசப் புளுகுக்கும் இவர்களை விட்டால் ஆளே இல்லை..!!