வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 14 ஜூன், 2009

இலங்கையுடனான வணிகத்தைப் புறக்கணிக்க மலேசியாவிலிருந்து ஒரு கோரிக்கை

லங்கை அரசாங்கம் தனது வழிமுறைகளை சரிசெய்து, போரினால் சீரழிந்துள்ள பகுதியில் மனுக்குல நெருக்கடிக்கு தீர்வு காணும்வரை, அந்நாட்டுடனான வாணிகத்தை புறக்கணிக்கும்படி மலேசிய இந்தியர் வர்த்தகச் சங்கம் (மிபா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பி சிவக்குமார், இதனைச் சாதிக்கும்பொருட்டு, இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல் தொடுப்பதற்கு, இந்நாட்டில் உள்ள அனைத்து இந்திய வர்த்தக அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“பேராசைக்கும் வாணிக வாய்ப்புகளுக்கும் மேலாக மனுக்குலத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்”, என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அங்கு நிகழ்ந்த கொடுஞ்செயல்களை நாம் பார்க்க வேண்டும், நமது குடிமையுணர்வு எங்கே? என்றவர் வினவினார்.

உலகாய புறக்கணிப்பு அமல்செய்யப்படும் வேளையில், இந்தியா அதற்கு முன்னோடியாகச் செயல்பட வேண்டும்.” (விரிவாக)

@ஆய்தன்:-
மனிதநேயம் பேணும் மலேசியாவின் மிபாவைத் 'தமிழுயிர்' வணங்குகிறது.
எரிகிற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்பதுபோல, ஈழப் பிணங்களின் மீது பிரியாணியை வைத்துத் தின்பதற்குப் பெரும் வணிகர்களும் நிறுவனங்களும் அணியமாக இருப்பதாக ஒரு செய்தி படித்த நினைவு. அதுவும் இந்தியாவிலிருந்து..!! மனிதம் மரித்த மண்ணாக மாறிவிட்டதா புண்ணிய பூமியான இந்தியா.......?????

கருத்துகள் இல்லை: