வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 5 ஜூன், 2009

சிறிலங்கா மீது ஐ.நா விசாரணை கூடாது: இந்தியா மீண்டும் எதிர்ப்பு



லங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் நாள் தொடங்கி எதிர்வரும் 19 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா தொடர்பாக கடந்த 25, 26 ஆம் நாட்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை இந்திய தூதுவர் கோபிநாதன் ஆச்சம்குலங்காரே எதிர்த்ததுடன் அவர் அங்கு தனது கருத்தையும் முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தை நவநீதம்பிள்ளை வரவேற்றிருக்கிறாரே தவிர அன்றைய நாள் சிறிலங்காவுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் வரவேற்கவில்லை. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு சபைக்கு உகந்தது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற அமர்வில் செக் குடியரசு, பிரான்சு, பிரித்தானியா, சப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளும் இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை என்று இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றிவிடும் முயற்சிகளிலேயே இந்த கூட்டத்தொடரில் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளே சிறிலங்கா தொடர்பான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த தொடங்கியுள்ள நிலையில் இந்தியா தொடர்ந்தும் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் வரவேற்று உரையாற்றியிருந்தன.
@ஆய்தன்:-
இந்தியா.. இந்தியன்.. என்பதெல்லாம் போலி! மாயை! ஏமாற்று வேலை! என்பதும் - இந்தியாவும்.. இந்தியனும்தான் தமிழுக்கும் தமிழருக்கும் முதல் எதிரி.. பகையாளி.. பச்சை துரோகி!
இந்தியாவை நம்பி; இந்தியன் என்று நம்பி, முட்டாளாய்.. மடையனாய்.. அடிமையாய் இருந்தது போதும்!
இனி, தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா..!

3 கருத்துகள்:

கோவி.மதிவரன் சொன்னது…

உலகத் தமிழர்கள் இனி ஒருபோதும் தங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்தக் கூடாது. உலகத் தமிழரைக் கொன்றோழித்த இந்தியனும் இந்தும் தான் தமிழனுக்கு முதல் எதிரி

Tamilvanan சொன்னது…

தமி்ழனாக இருப்போம் இனி தமி்ழனாக வாழ்வோம்.

விடிவெள்ளி சொன்னது…

பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் அழிப்புக்கு துணை நின்ற இந்தியா உலக வரலாற்றில் அழியாத களங்கத்தை சம்பாதித்துக்கொன்டது, இந்தப்பாவம் வீண்போகாது, இப்பொழுதே பல மேற்கத்திய நாடுகள் அதன்மீது எரிச்சலில் உள்ளன‌ அதை மேலும் வளர்ப்பதாய் அதன் தொடர் செயல்கள் அமைந்து வருகின்றன! இந்தியா வாங்கப்போகும் மரண அடியை உலகமே கூடிய விரைவில் கைகொட்டி ரசிக்கப்போகின்றது, அன்றுதான் அநியாயமாய் அழிக்கப்பட்ட எமது ஈழ சகோதர சகோதரிகளின் ஆத்மாக்கள் சாந்தி அடையப்போகின்றன!