வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 15 ஜனவரி, 2009

ஈழத்தமிழருக்குக் கை(எழுத்து) கொடுங்கள்


மாபெரும் கையெழுத்து வேட்டையில் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்': ஒன்றுதிரண்டு ஆதவளிக்குமாறு உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
[செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2009, 06:35 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]


அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி இல்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.

தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்

*தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்

*இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி

தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.

"உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்." என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார்.

"காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கேட்டுக்கொள்கின்றனர்.

கையெழுத்திடும் இணைப்பு:

http://www.tamilsforobama.com/sign/usersign.html

கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் இல்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்!

இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் -

இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.

இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

நன்றி:-

http://www.tamilsforobama.com/sign/usersign.html

@ஆய்தன்:-

இப்பதிவிடும் நேரம் வரை மலேசியாவிலிருந்து கையொப்பம் இட்டவர்கள் 994 பேர்கள் அதாவது 1.28% மட்டுமே! அதேவேளையில், கனடா முதலிடத்தில் 17936(22.02%) பேர், இங்கிலாந்து 2ஆம் இடம் 12055(15.47%), இந்தியா 3ஆம் இடம் 11221(14.4%) என கையெழுத்திட்டுள்ளனர். மலேசியா 13ஆவது இடத்தில் உள்ளது. நம்மைவிட குறைவான தமிழ்மக்கள் வாழும் சிங்கப்பூர் 12ஆவது இடத்தில் உள்ளது. மலேசியத் தமிழர்களே, நமது இன வேர்களை - நமது தொப்புள்கொடி உறவுகளை - நமது தமிழ் உடன்பிறப்புகளைக் காப்பதற்கு இந்த உதவியையாவது உடனே செய்யுங்கள். தமிழினம் நம் கண் முன்னாலேயே அழிவதை உடனே தடுப்பதற்குக் கை(எழுத்து) கொடுங்கள்.

6 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

என்னுடைய கையெழுத்தையும் இட்டுவிட்டேன்..

ஆதவன் சொன்னது…

இந்தப் பின்னூட்டம் எழுதும் நேரம் வரை, உலகம் முழுவதிலுமிருந்து கையொப்பம் இட்டவர்கள் எண்ணிக்கை:-92376

முதலிடம்: கனடா 21764 பேர்
2ஆம் இடம்:இங்கிலந்து 14304 பேர்
3ஆம் இடம்:இந்தியா 12998 பேர்
4ஆம் இடம்:இலங்கை 5684 பேர்

மலேசியா 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கையொப்பமிட்டவர்கள் எண்ணிக்கை:1426(1.54%)

மலேசியத் தமிழர்களுக்கு இந்தச் செய்தியைப் பரப்பி கையெழுத்து இடச்சொல்லி இணைய; வலைப்பதிவு தொடர்புடைய அன்பர்கள் ஊக்கப்படுத்துங்கள்.

ஆதவன் சொன்னது…

இந்தப் பின்னூட்டம் எழுதும் நேரம் வரை கையெழுத்துப் போட்டவர்கள் விவரம்:-

உலகம் முழுவதிலிருந்து 210 நாடுகளைச் சேர்ந்தோர் கையொப்பம் இட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கையொப்ப எண்ணிக்கை 109839

கனடா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. கையெழுத்திட்டோர் 24863(22.64%).

2ஆம் இடம்:இங்கிலாந்து 17402 பேர்
3ஆம் இடம்:இந்தியா 14884 பேர்
4ஆம் இடம்:இலங்கை 8576 பேர்
5ஆம் இடம்:செருமானியம் 7098 பேர்

மலேசியம் 1782 கையெழுத்துடன் 12ஆம் இடத்தில் உள்ளது.

மலேசியத் தமிழர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவையும் அன்பையும் ஈழத்தமிழருக்காகப் பதிவு செய்யவும்.

ஆதவன் சொன்னது…

இந்தப் பின்னூட்டம் இடும்வரை உள்ள நிலவரம்.

Total Signatures : 139863
Country Number of Signatures Percentage
1 Canada 30893 22.09%
2 United Kingdom 21951 15.69%
3 India 21103 15.09%
4 Sri Lanka 11410 8.16%
5 Germany 8763 6.27%
6 France 8502 6.08%
7 Switzerland 6010 4.3%
8 U.S Of America 4723 3.38%
9 Australia 4270 3.05%
10 Denmark 3409 2.44%
11 Norway 3091 2.21%
12 Malaysia 2806 2.01%

ஆதவன் சொன்னது…

தற்போதைய நிலவரம்:-

Total Signatures : 147702
Country Number of Signatures Percentage
1 Canada 33168 22.46%
2 India 23104 15.64%
3 United Kingdom 22691 15.36%
4 Sri Lanka 11834 8.01%
5 France 9085 6.15%
6 Germany 9069 6.14%
7 Switzerland 6271 4.25%
8 U S America 4877 3.3%
9 Australia 4446 3.01%
10 Denmark 3507 2.37%
11 Norway 3145 2.13%
12 Malaysia 3071 2.08%

ஆதவன் சொன்னது…

Total Signatures : 158345
Country Number of Signatures Percentage
1 Canada 35810 22.62%
2 India 26266 16.59%
3 United Kingdom 23994 15.15%
4 Sri Lanka 12154 7.68%
5 Germany 9776 6.17%
6 France 9645 6.09%
7 Switzerland 6573 4.15%
8 US America 5196 3.28%
9 Australia 4636 2.93%
10 Denmark 3579 2.26%
11 Malaysia 3413 2.16%
12 Norway 3210 2.03%