மாண்புமிகு முதல்வருக்கு ஒரு கடிதம்...
இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது.
தமிழன் யார்? தமிழனின் பழமை / பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை.
அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.
ஆனால், “ இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது” என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய “ஏமாற்றம்” என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி.
இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை.
இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்?
தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்குக் கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன?
ஈழத்தமிழன் என் சகோதரன்! அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது. இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்...
“ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல.
இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை.
திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்”
இறுதியாக ஒன்றே ஒன்று,
“நீங்கள் தமிழர்களின் முதல்வர்! இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.”
“நீங்கள் தமிழர்களின் முதல்வர்! இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.”
- நன்றி:-மகிழ்நன்
தமிழாய்ந்த தமிழன் தமிழ்நாட்டின் தலைவராக இருந்தும்; தமிழன் ஆதரவின்றி அல்லல்படுவது சரியா? இது முறையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக