வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 9 ஜனவரி, 2009

தமிழ் நாள்காட்டி; மலேசியத்தில் சாதனை

  • தமிழ்க்கூறு நல்லுலகின் முதல் தனித்தமிழ் நாள்காட்டி.
  • மக்கள் தொலைக்காட்சியின் பாராட்டைப் பெற்ற நாள்காட்டி.
  • தமிழுக்குப் பெருமை சேர்க்கும் உலகின் ஒரே நாள்காட்டி.
  • மலேசியத்தில் உருவாக்கப்பட்ட உலகம் வியக்கும் நாள்காட்டி.
  • தமிழரின் வானியல் அறிவை மீட்டெடுக்கும் புரட்சி நாள்காட்டி.
  • மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் உருவாக்கிய சாதனை நாள்காட்டி

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட தமிழ் நாள்காட்டி 2009 எமது மலேசியத் திருநாட்டில் இப்போது மூன்றாவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகில் இதுவொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தமிழ் நாள்காட்டி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், வரும் தைத்திங்கள் முதல் நாளாகிய (ஆங்கிலம் 14.1.2009) திருவள்ளுவர் ஆண்டு 2040 தமிழ்ப்புத்தாண்டு நாளை முதலாகக் கொண்டு இந்த நாள்காட்டி தொடங்குகிறது.

இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழிலும் தமிழ் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இராசி, நட்சத்திரம், திதி ஆகியன தனித்தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் சோதிடக் குறிப்புகளும் உள்ளன. 30க்கும் மேற்பட்ட தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்களின் சிறப்பு நாட்களும், குரு பூசைகளும் உருவப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது ஆங்கில நாள்காட்டியையும் உள்ளடக்கி உள்ளது.

வள்ளுவரையும் வள்ளலாரையும் முகப்புப் படமாகக் கொண்டு முழு வண்ணத்தில் மிகத்தரமாக வெளிவந்துள்ள இந்த நாள்காட்டியின் விலை ஐந்து வெள்ளி மட்டுமே. (விரிவான செய்தி)

@ஆய்தன்:-

ஆண்டு; தமிழர் ஆண்டு... திரு
வள்ளுவர் பெயரைப் பூண்டு
யாண்டும் பரவும் ஆண்டு... இன்(று)
எழுந்த துணர்வு மூண்டு! -(தரங்கைப் பன்னீர்செல்வம்)

3 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல முயற்சி, தமிழுக்கு சிறப்பு !பாராட்டுகள்.

A N A N T H E N சொன்னது…

ஆய்தன் எனக்கு இது புது செய்தி, தெரிஞ்சிக்காம இருந்துட்டேன்.
மலேசியாவில் கிடைக்கப் பெறுவதாக சொல்லி இருக்கிங்க, எங்கே விற்பனை ஆகுதுன்னு தெரிஞ்சிக்க ஆசைப் படுறேன்... வடக்கு மாநிலங்களில் கிடைக்கிறதா என்று சொல்ல முடியுமா?

Tamil Usi சொன்னது…

நண்பருக்கு.... என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..... உங்கள் முயற்சிகள் அனைத்தும் ஈடேற என் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.