வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 23 ஜனவரி, 2009

குகன் இறந்தது கொடுமையிலும் கொடுமை!


பூச்சோங்கைச் சேர்ந்த 22வயது இளைஞர் குகன், ஆடம்பர மகிழுந்து(கார்) திருட்டு தொடர்பில் சனவரி 15-இல் கைது செய்யப்பட்டார். சுபாங் செயா தைபான் காவல் நிலையத்தில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குகன் 20-1-2009இல் மயங்கி விழுந்து இறந்து போனார்.

அவருடைய நுரையீரலில் தண்ணீர் இருந்ததால் குகன் இறந்ததாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், குகனின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பதால், அவருடைய இறப்பில் சூதும் மருமமும் உள்ளது என அவருடைய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குகனின் இறப்பு நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது; தமிழ் மக்கள் உள்பட அனைத்து மலேசியர்களின் உள்ளங்களும் எரிமலையாய் குமுறுகிறது.

குகனின் மரணம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசு படைத் தலைவர் மூசா அசான் கூறியுள்ளார். இது ஒரு கொலை என்று சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் வகைப்படுத்தியுள்ளார்.

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

ஐயத்தின் பேரில் புடிச்சிக்கிட்டு போறான்
ஐயகோ உயிரெடுத்துப் பிணமாக்கித் தாரான்
கேட்டாக்கா அதிகாரம் பண்ணுறான்
நேக்காத்தான் அறிக்கைய நீட்டுறான்

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

காவல்துறை எதுக்கு இருக்கு?
நீதித்துறை ஏண்டா இருக்கு?
தப்பு இருந்தா வழக்குப் போடு
தவறு இருந்தா தூக்குப் போடு
இதையெல்லாம் விட்டு புட்டு

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

இளம்வயது இரத்த மடா
இந்த நாட்டோட செல்வமடா
எண்ணிப்பார்க்க மூள வேணும்
இதயத்தில் கொஞ்சம் ஈரம் வேணும்
இதையெல்லாம் மறந்து புட்டு

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

அங்கே பாரு குலஉயிர எடுக்கிறான்
இங்கே பாரு தலமயிர புடுங்குறான்
கூப்பாடு நீ போட்டுகிட்டு இருக்கியே
குடும்பதில் நீ குள்ளநரியா வாழுறியே
இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டோம்

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

இதையெல்லா தட்டிக் கேட்டா
இல்லாக்காட்டி வழக்குப் போட்டா
எங்க முதுகில் குதிரயேறுவ வந்து
வேண்டாம்பா... நமக்கேன் வம்பு...!!!

@ஆய்தன்:-
மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே – இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே..!

கருத்துகள் இல்லை: