வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 1 ஜனவரி, 2009

2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை அதிகம் நேசிக்கும் அடிமைகளுக்கும்

தமிழைத் தூக்கியெறிந்துவிட்டு ஆங்கிலத்திற்கு வெண்சாமரம் வீசும் அடிவருடிகளுக்கும்

தமிழில் பேசுவதைத் தாழ்வாக நினைத்து ஆங்கிலத்தில் பேசவே விருப்பப்படும் பேதைகளுக்கும்

தமிழ்ப் பண்பாட்டுக்கு வேட்டு வைத்துவிட்டு ஆங்கிலப் பண்பாட்டைக் கட்டியழும் கேடர்களுக்கும்

தமிழ்க்கல்வி வேண்டாமென்று உதறித்தள்ளிவிட்டு ஆங்கிலத்தின் காலை நக்கிப் பிழைக்கும் கயவர்களுக்கும்

தமிழின் பெயரால் பிழைத்துக் கொண்டே ஆங்கிலத்தை வாழவைக்கத் துடிக்கும் துரோகிகளுக்கும்

தமிழுக்குச் சாவுமணி அடித்துவிட்டு ஆங்கிலத்தை நீரூற்றி வளர்க்க அரும்பாடுபடும் அன்னாடங்காட்சிகளுக்கும்

தமிழைத் தமிழாக இருக்கவிடாமல் தமிழில் ஆங்கிலத்தைக் கலந்திட நினைக்கும் கபோதிகளுக்கும்

தமிழனாக வாழாமல் ஆங்கிலேயனாக வாழ்ந்துகொண்டிருக்கும் தண்டங்களுக்கும்

தமிழோடு வாழாமல் ஆங்கிலத்தோடு குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும் முண்டங்களுக்கும்

"2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்"

1 கருத்து:

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் சொன்னது…

அப்படிப்போடு அரிவாள...!
சூடான தொடக்கம்..
சீனப்புத்தாண்டுக்கு,இசுலாமிய புத்தாண்டுக்கு நமக்கு நாமே வாழ்த்துச் சொல்லிக்கொள்வோமா?
இது மட்டும் ஏன்...?
நம்மாட்களை சும்மா சொல்லக்கூடாது..
இப்போதெல்லாம் Happy Thaipusam கூட சொல்கிறோமே!
நல்ல பதிவு..