ஓகக்(யோகா) கலைக்குத் தடை
இதற்குத் தடை..!
உடலை ஓம்பி
உள்ளொளி பெருக்கி
உயிரை வளர்க்கும்
உயரியக் கலையாம்
ஓகக் கலைக்குத் தடையாம்..!
இதற்கு விடை..?
உடலைக் குலுக்கி
உணர்ச்சியைப் பெருக்கி
உள்ளத்தைக் கெடுக்கும்
உலுத்தக் கலையாம்
குலுக்கல் ஆட்டத்திற்கு என்ன விடையாம்?
இதையெல்லாம் கேள்வி கேட்டால்...
இனவாதம் என்பார்கள்!
எகிறிப் பாய்வார்கள்!
ஏனிந்த பொல்லாப்பு.. நமகேனப்பா வம்பு..!
பின்குறிப்பு:- வரும் 29-11-2008இல், இந்தோனேசியாவின் கவர்ச்சிப் புயல் இனுல் டாராதிசுதா என்ற குலுக்கல் ஆட்டக்காரியின் 'டங்டுட்' எனப்படும் இடுப்பாட்டும் குத்தாட்ட நிகழ்ச்சி இதே நாட்டில் புக்கிட் சாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.
@ஆய்தன்:-
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது
2 கருத்துகள்:
வாருங்கள் மக்களே 'இடுப்பு டான்ஸை' இனிமையாய் கண்டு களிப்போம்... யோகாவை விட சிறந்த பயிற்சி அதுவல்லவா?
//வரும் 29-11-2008இல், இந்தோனேசியாவின் கவர்ச்சிப் புயல் இனுல் டாராதிசுதா என்ற குலுக்கல் ஆட்டக்காரியின் 'டங்டுட்' எனப்படும் இடுப்பாட்டும் குத்தாட்ட நிகழ்ச்சி இதே நாட்டில் புக்கிட் சாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.//
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குக் கோலாலம்பூர் மாநகர மன்றம் இறுதி நேரத்தில் இசைவை(அனுமதி) மீட்டுக்கொண்டது.
கருத்துரையிடுக