வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 11 நவம்பர், 2008

இலங்கைக்கு எதிராகக் கண்டனப் பேரணிஇலங்கை அரசு அந்நாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி வரும் போரால் இலட்சக் கணக்காக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து போரை நிறுத்தக் கோரும் பேரணி இலங்கை தூதரகத்தின் முன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.2008) நடபெறவிருக்கிறது.


இலங்கை அரசாங்கப் படையினரின் குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலால் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். உணவு, குடிநீர், இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல் படுகின்றனர்.


இலங்கை இனவாத அரசால் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டிய நமது கடமையாகும்.

>> மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி:- மலேசியா இன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு..!
தமிழருக்காக ஒன்றுபடு..!
தமிழின விடுதலைக்காக ஒன்றுபடு..!

கருத்துகள் இல்லை: