வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 7 பிப்ரவரி, 2009

கொலைவெறி சிறிலங்கா - கபடதாரி இந்தியா: மலேசியாவில் கண்டனப் பேரணி


அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவத்தைக் கண்டித்து..

தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் செயல்படும் சிறிலங்காவுக்குத் துணைபோகும் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து..

மலேசியாவில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. 6.2.2009இல் கோலாலும்பூரில் உள்ள இந்தியத் தூதரத்தின் முன்னிலையில் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பி.இராமசாமி தலைமையில் ஏறக்குறைய 2000 தமிழர்கள் ஒன்றுகூடி மறுப்பு அறிக்கையை இந்தியத் தூதுவரிடம் வழங்கினர்.

இந்தக் கண்டனப் பேரணி பற்றிய விரிவான செய்திகளையும் படக்காட்சிகளையும் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்.

1.மலேசியாஇன்று

2.திருத்தமிழ்

3.புதினம்




@ஆய்தன்:-

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே..! -பெருஞ்சித்திரனார்

2 கருத்துகள்:

Rajaraman சொன்னது…

\\கொலைவெறி சிறிலங்கா - கபடதாரி இந்தியா: மலேசியாவில் கண்டனப் பேரணி//

ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன் என்ற உணர்வில் உங்களைப்போன்ற கோடாலி காம்புகளுக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

போன இடத்தில் அனைத்தையும் மூடிக்கொண்டு ஒழுங்கா பிழைப்பை பாருங்கப்பு. அதைவிட்டு.

ஆதவன் சொன்னது…

@இராசாராமன்

//ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன் என்ற உணர்வில் உங்களைப்போன்ற கோடாலி காம்புகளுக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.//

உங்கள் தேசபற்றை மதிக்கிறேன். அந்தத் தேசப்பற்று அப்பழுக்கற்றது எனவும் நம்புகிறேன்.

அதற்காக எமது மொழிப்பற்றையும், இனப்பற்றையும், தொப்புள்கொடி உறவுப் பற்றையும் பார்த்து நீங்கள் கண்டனம் தெரிவிப்பது சரிதானா?

//போன இடத்தில் அனைத்தையும் மூடிக்கொண்டு ஒழுங்கா பிழைப்பை பாருங்கப்பு.//

மூடிக்கொண்டிருப்பதற்கு நான் உயிரற்ற பிணமாக இருக்கவேண்டும்!!

அல்லது உயிருள்ள நடைப்பிணமாக.. சதைப்பிண்டமாக இருக்க வேண்டும்..!

அல்லது முற்றும் துறந்துவிட்ட மாமுனிவராக இருக்க வேண்டும்..!

இதில் எதுவும் தேராவிட்டால் மண்ணாகவாவது இருக்க வேண்டும்..!

இப்போதைக்கு நான் உணர்வும்.. அறிவும்.. குமுகாய நோக்கும்.. மாந்த நேயமும்.. போராட்ட குணமும்.. பிறந்த மொழியினத்தின் மீது பற்றும் கொண்ட சராசரி மனிதன்..!