வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 2 டிசம்பர், 2008

தாய்மொழிப் பள்ளியை மூடுங்கடா..!

மலேசியத்தில் தமிழ் - சீனப் பள்ளிகள் செயல்படுவதற்கு அரசியலமைப்பின்படி முழு உரிமை உள்ளது. இருப்பினும், டத்தோ முக்ரிசு மகாதீர் "தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும்" என்று 1-12-2008இல் பேசியுள்ளார். அதனைக் கண்டித்து..


அப்பன் மவனே
அப்பன் மவனே
அறிவிருக்கா உனக்கு?
வரலாற்றுத்
தெளிவிருக்கா உனக்கு?

தமிழ்ப்பள்ளியை மூடு
சீனப்பள்ளியை மூடு
கூப்பாடு போடலாமா?
மலிவான
விளம்பரத்தைத் தேடலாமா?

ஒற்றுமை வேண்டும்
ஒற்றுமை வேண்டும்
தொடக்கப் பள்ளியிலா?
இல்லையந்த
இடைநிலைப் பள்ளியிலா?

குட்டிப்போட்ட பூனையாய்
குட்டிப்போட்ட பூனையாய்
தொடக்கப்பள்ளியைச் சுற்றலாமா?
மூவினத்தின்
இடைநிலைப்பள்ளியை மறக்கலாமா?

*நீ வெற்றிபெற
நீ வெற்றிபெற
எங்களை அழிக்கலாமா?
உனக்கிந்த
ஈனப்புத்தி வரலாமா?

நாங்கள் பேசினால்
நாங்கள் பேசினால்
எல்லாமே இனவாதமா?
நீங்கள்
பேசினால் தேசியவாதமா?

இப்படிக் கண்டித்தால்
இப்படிக் கண்டித்தால்
எங்களை மிரட்டுவீர்கள்..!
இல்லாவிட்டால்
ஐ.எசு.ஏவைக் காட்டுவீர்கள்..!

ஏனிந்த பொல்லாப்பு.. நமக்கேனப்பா வம்பு..!

*(அம்னோ இளைஞர் பகுதி தலைவர் போட்டியில்)

கீழே உள்ள சுட்டிகளைத் தட்டி மலேசியாஇன்று செய்திகளைப் படிக்கவும்.

1.தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்

2.தமிழ்ப்பள்ளிகள்: அப்பனைப் போல பிள்ளை

@ஆய்தன்:-
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.." என்று இந்நேரம் முக்ரிசின் தந்தை பாடிக்கொண்டிருப்பார்.

3 கருத்துகள்:

K.Sehgar சொன்னது…

தமிழ் பள்ளி அழிந்தால் .................இந்த நாட்டில் நாம் அழிந்தோம்.நம் மொழி அழியும். எதிர்காலத்தில் நமது பெயர் பொருட்காட்சியகத்தில் கூட இருக்காது.மலாக்கா பரமேஸ்வராவுக்கு ஏற்பட்ட கதி நமக்கு பாடமாக அமைய வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

மென்மையான, மற்றும் சுயநலவாத தலைவர்கள் (கவனிக்க, கோழைகள் என்று சொல்லவில்லை) இருக்கும் வரை நம்மை இவர்கள் இப்படிதான் அடிமட்ட கூலிகளாக நினைப்பார்கள். எல்லா உரிமைகளையும் இழந்தாகிவிட்டது, இருப்பது வெறும் மொழி மட்டுமே. :(

நம் தலைவர்களின் வீரமெல்லாம் நம்மிடம் மட்டும்தான். இப்ப ஏன் யாரும் வாயை திறக்கவில்லை!!!


- சித்திரப்பாவை, ப்ரிதானியா.

பெயரில்லா சொன்னது…

தாய்மொழிப் பள்ளிகளை மூடிவிடலாம் என்ற கருத்து மலேசிய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்றாகும். மற்ற இனத்தவர்கள் பேசுகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் அரசியல் சாசனத்தைக் கையில் தூக்கிவைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் பாரிசான் அரசாங்கம் முக்ரிசின் இந்த பல்லை மீறிய பேச்சையும் அப்படியே பார்க்க வேண்டும். மூவினத்திற்கும் நீதியாக நடப்பதாக ஆட்டம் காட்டும் பாரிசான் தலைவர்கள் முக்ரிசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, அம்னோ உயர்மட்ட தலைவர்கள் இதனைக் கண்டிக்க வேண்டும்.

மலாய்க்காரர் உரிமையைத் தொட்டு பேசினால் மட்டும் இனவாதம் பேசவேண்டாம் என்று எச்சரிக்கும் காவல்துறை, மலாய்க்காரர் அல்லாதாரின் உரிமையைப்பற்றி பேசியிருக்கும் முக்ரிசுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

ஆளும் அரசாங்கம் போடும் இரட்டை நாடகம் மக்களுக்குப் புரியாமல் இல்லை. இதற்கெல்லாம் மக்கள் கண்டிப்பாக நல்ல கூலி கொடுக்க வேண்டும்.