வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 22 செப்டம்பர், 2008

நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்

ஒருகாலத்தில் தமிழ் இனத்தின் உயர்வுக்கு மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பாடுபட்டன. ஆனால், இன்றோ நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டுவதுதான் நாளிதழ்களின் வேலையாக இருக்கின்றது. நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டிக் குப்பைத்தனமானச் செய்திகளைப் போடுகிற தமிழ் நாளிதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் தலைநகரில் நடந்த (21.9.2008) பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையில் மிகக் கடுமையாகச் சாடினார்.

மானங்கெட்டத்தனமாக, தமிழனின் நாடி நரம்புகளை அழித்திட தமிழ்ச் செய்தித்தாள்கள் துணைபோகலாமா? தமிழன் உறங்கியது போதும். அவனை இன்னும் சினிமா மோகத்தில் ஆழ்த்த வேண்டாம். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலக்கியம் என்பது தமிழ்ச் சினிமாதான். கூத்துக் கும்மாளமும், நடிகையின் தொடையும் தொப்புளும் தான் இவர்களின் மூலதனம். அரைகுறை ஆடையுடன் நடிகையின் படங்களை அரைப் பக்கத்திற்குப் போடுவதுதான் இவர்களது வேலை.

இதையெல்லாம் வெளியிட்டால்தான் மலேசியத் தமிழர்கள் படிப்பார்கள்; நாளிதழ் ஓடும் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த இனம் மிக வேகமாகச் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாதா?

நடிகையின் படங்களைப் போடுவதற்கு அவள் என்ன செய்து கிழித்துவிட்டாள்? என்று நாம் கேள்வி கேட்க வேண்டும். அந்தக் கேவலமான படங்களைப் போடும் உங்கள் நாளிதழை வாங்க்கும் நாங்கள் என்ன மரமண்டைகளா? மாங்காய் மண்டைகளா? என்று கேட்க விரும்புகிறேன்.

நாளிதழ் நடத்துவோர் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் தானே? உங்கள் பிள்ளைகளும் மனைவியும் தாயும் பெண்கள் தானே? பெண்கள் தாய்மைக்குச் சமமானவர்கள் இல்லையா? அந்தப் பெண்ணையே கேவலப்படுத்திக் காட்டும் வேலையைத் தமிழ் நாளிதழ்கள் செய்யலாமா?

நாளிதழ் ஒருபக்கம் இருக்க தொலைக்காட்சியில் நடிகைகளின் குத்தாட்டத்தையும் கட்டிப்பிடித்து ஆடுகின்ற கொடுமையான காட்சிகளையும் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா?

காசு கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம். தொலைக்காட்சி பார்க்கிறோம். இந்த மானங்கெட்டத் தனங்களைப் பார்க்கத்தானா? மானமுள்ள மனிதர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள்.

இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக தறிகெட்டுப் போய் ஆடுவதற்கு ஒரு தொலைக்காட்சியில் அறுபதாயிரம் வெள்ளியை அள்ளிப் பரிசாகக் கொடுக்கிறார்கள். கூத்தையும் கும்மாளத்தையும் காட்டியே இந்த இனத்தை கெட்டுக் குட்டிச்சுவராக்கப் பார்க்கிறார்கள்.

நம்முடைய மொழி – இன – சமய உணர்வைப் பாதுகாப்பது நமது கடமையாகும். தமிழின உயர்வுக்குரிய வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் ஊடகத் தோழர்கள் நாடிப் படிக்க வேண்டும். இந்த இனத்தை நல்லபடியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பும் பணியும் செய்தியாளர்களுக்கு உண்டு என இரா.திருமாவளவன் பலத்த கரவொலிகளுக்கு இடையில் பேசினார்.

@ஆய்தன்:-
சொந்த உடம்பை விற்கும் வேசி கேவலமானவள்...!
அடுத்தவள் உடம்பை விற்கும் நாளிதழ்கள்காரர்கள் வேசியை விட மகா கேவலமானவர்கள்!!!

13 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

இன்று ஒரு நாளிதழில் தலையங்கம் படித்தேன்.

"நடிகர் வடிவேலு வீட்டில் தாக்குதல்! விசயகாந்தின் ஆட்களாக இருக்குமா..?"

நாட்டிற்கு மிக முக்கியமான செய்தி இது? இச்செயலை யார் செய்திருப்பார்கள் என்று தமிழர்கள் அனைவரும் காலையிலேயே மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் போலும்..

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நம் நாட்டு தமிழ் நாளிதழ்கள் ஒரு பக்கம் தமிழை வளர்ப்பதாக, தமிழைத் தூக்கி நிறுத்துவதாக, தமிழுக்கு அரணாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

அனால், மறுபக்கம் தமிழுக்கும் தமிழருக்கும் மாபாதகம் செய்யும் கேடுகளைத் (தெரிந்தே) செய்கிறார்கள்.

இவர்களுக்கு ஏன் இந்த இரட்டை வேடம். இந்தப் பத்திரிகை போலிகளை வாங்கி விட்டிருக்கும் திரு.இரா.திருமாவளவன் அவர்களின் துணிவைத் தமிழ் பற்றாளர் அனைவரும் பாராட்டுவர்.

தமிழ் நாட்டு நாளிதழ்களைப் பின்பற்றி இங்கேயும் நமது நேச, ஓச, நண்ப இதழ்களும் இதே கருமாந்திரத்தைச் செய்கின்றன.

ஒரு தலைமுறையை, ஒரு சமுதாயத்தை தவறான வழிக்கு இட்டுச் செல்கிறோமே என்ற கவலையோ, மனசாட்சியோ கொஞ்சமும் இல்லாமல் இப்படி கேவலங்களையும் குப்பைகளையும் வெளியிடும் நாளிதழ்களுக்கு இந்தச் செய்தி நல்ல சாட்டையடி.

இப்படி பண்பாட்டுச் சீரழிவு ஒரு பக்கம் நடக்கிறது. இன்னொரு பக்கம் பொது மக்களுக்கு புரிய வேண்டும் என்ற நொண்டிச் சாக்கைச் சொல்லி கலப்பு மொழியைப் பயன்படுத்தி மொழிச் சீரழிவு நடத்தப்படுகிறது.

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் துணிச்சல் திருமாவளவன் போல்.. தமிழுயிர் ஆய்தன் போல்.. இன்னும் பல தமிழ்ப் பற்றாளர்களுக்கும் உணர்வாளர்களுக்கும் வர வேண்டும்.

மக்கள் பொங்கி எழுந்தால் தான் இந்த 'மதிநுட்ப' பத்திரிகையாளர்கள் திருந்துவார்கள்.

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பத்திரிக்கைகள் தாய்தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர உடலைக் காட்டி ஆளை மயக்குற ரை குறை நடிகைகளின் படம் எதற்கு. மலேசியத் தமிழ்க்காக்கும் திருமாவளவனின் பேச்சில் உண்மை இருக்கிறது. உடம்மை விற்று பிழைப்பு நடத்தும் வேசிக்கும் கொப்பூளையும் உடலையும் காட்டும் தமிழ் நாளிதழுக்கும் என்ன வேறுபாடு. மானமுள்ளவர்களா இவர்கள் ?

தமிழுணர்வுடன்

கோவி.சந்திரன்
செலாமா பேரா

பெயரில்லா சொன்னது…

இன்றைய தமிழ்நாளிதழ்கள் என்ன மக்களுக்குப் பயனான செய்திகளையா தாங்கி மலருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமா இந்த கூத்து. ஒவ்வொரு நாளும் இதே பல்லவிதான். பத்திரிக்கை படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இவற்றைப் பார்க்கின்ற மானவர்கள் ஏன் கெட்டு சீரழிய மாட்டார்கள். தமிழ் வளர்க்க வேண்டிய நாளிதழில் ஆங்கில மொழியின் வடமொழியும் எதற்கு ? உடலைக் காட்டி விபச்சாரம் செய்யும் நடிகைகளின் படம் எதற்கு ? சூடும் சொரணையும் உள்ளவர்கள் இதற்குத் துணை போவானா ? இவர்களுக்கெல்லாம் எதைப் பற்றியும் கவலை இல்லை. தன்னலம் ஒன்றே பெரிது என வாழும் மக்கு மாங்காய்கள்.... இவன் என்றைக்கும் திருந்தமாட்டான்.

தமிழ்ப்பணியில்

கலைமுகிலன்
தைப்பிங்கு பேரா

பெயரில்லா சொன்னது…

நமது தமிழ்ப் பத்திரிகைகளின் மதிகெட்ட தனத்துக்கு மரண அடி கொடுத்திருக்கும் திருமாவளவன் அவர்களையும் தமிழுயிரையும் முதலில் பாராட்டுகிறேன். ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையைத் திறந்தாலே கடைசிப் பக்கத்தில் எவளாவது ஒரு நடிகையின் அருவருப்பான படம் பெரிதாக இருக்கும்.

இந்தப் பத்திரிகைக்காரர்களுக்கு ஆசையாக இருந்தால் அந்தப் படங்களை அவர்கள் வீட்டில் ஒட்டி வைத்து பிள்ளைக் குட்டிகளோடு இரசிக்க வேண்டியது தானே! அதை ஏன் பத்திரிகையில் போட்டு எங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கெடுக்கிறார்கள்?

சில காலங்களுக்கு முன்பெல்லாம் முகப்பிலேயே நடிகை படத்தைப் போட்டார்கள். இப்போது அப்படி இல்லை என்பது நல்ல மாறுதல்தான். ஆயினும் உள்ளே போட்டு அநியாயம் செய்கிறார்களே.

ஆபாசமும் அருவருப்பும் தலைவிரித்தாடுவதால் குடும்பத்தோடு தொலைக்காட்சியும் திரைப்படமும் நாடகமும் பார்க்க முடியாமல் போய்விட்ட இந்த காலத்தில், குடும்பத்தோடு நாளிதழிலும் படிக்க முடிவதில்லை. அதிலும் ஆபாசம் அருவருப்புதான்.

ஞாயிறு அன்று மூன்று நாளிதழும் வாங்கலாமே என்று பார்த்தால் ஒவ்வொன்றிலும் இதே மாதிரியான தொடைப் படங்களும் தொப்புள் படங்களும் இருப்பதைப் பார்த்தாலே நமது குலையெல்லாம் நடுங்குகிறது.

வீட்டில் உள்ள குழந்தைகள், வயது வந்த பெண் பிள்ளைகளை எண்ணி மூன்று நாளிதழ் வாங்காமல் ஒன்று மட்டும் போதும் என்று வாங்கிவரும் என் போன்றவர்கள் நாட்டில் நிறைய இருக்கலாம். இதுவெல்லாம் நமது பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தெரியுமா?

பக்கம் பக்கமாக கருத்து எழுதிகிறார்கள்! வாசகர் கேள்விக்கு வண்டி வண்டியாக பதில் எழுதுகிறார்கள்! பெரிய அறிவு ஞானிகள் போல் சமுதாயத்திற்க்குப் புத்தி சொல்கிறார்கள்! ஆனால், இவர்களே புத்திகெட்டு அலைகிறார்கள்! பணத்துக்காக அறிவையே அடமானம் வைக்கிறார்கள்! கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்!

இவர்கள் தமிழ் மொழி, இன, சமய, சமுதாய நலன் கருதி உடனே திருந்த வேண்டும். எதிர்கால சமுதாயம் சவலைப்பிள்ளையாக ஆகிவிடாமல் இருக்க இவர்கள் சரியாக செயல்பட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

What has been said by ira.thirumavalan is 100% correct. Our tamil newspapers have to change their mindset. They must think of our culture and younger generations future. Dear tamil newspapers, please stop all these nonsencens.

karthik.G
klang, selangor

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இப்படி ஒரு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் கேள்வி கேட்ட பின்பும் இவர்கள் திருந்துவார்கள் என நினைக்கின்றீரா? எருமை மாட்டின் மீது மழை பெய்தாலும் சுரனைக் கெட்டு நிற்குமாம்.

Sathis Kumar சொன்னது…

சந்திரன், கலைமுகிலன், இளையவேல் போன்றோர் கருத்துகளை இனிய தமிழில் அருமையாக அறியப்படுத்துகிறீர்களே, ஏன் நீங்கள் மூவரும் தமிழ் வலைப்பூ ஒன்றினைத் தொடங்கக் கூடாது?

பெயரில்லா சொன்னது…

திருமாவளவனுக்கு கிள்ளான் வாசகர் வட்டத் தலைவர் பாலகோபாலன் நம்பியார் சரியான பதில் தாக்குதல் கொடுத்துள்ளார். திருமாவளவன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

பெயரில்லா சொன்னது…

மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள்களின் கபட நாடகத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள இரா.திருமாவளவன் அவர்களுக்கும் தமிழுயிருக்கும் முதலில் நன்றி தெரிவிக்கிறேன்.

திருமாவளவன் அவர்கள் பேசிய செய்தியை முதல்நாளில் மிகவும் பெரிதுபடுத்தி மக்கள் ஓசை போட்டது எதற்காக என்று மறுநாள் பாலகோபாலன் நம்பியாரின் அறிக்கையை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் படித்த போதுதான் புரிந்தது.

திருமாவளவனின் வீர முழக்கத்தை நேரடியாக எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத மக்கள் ஓசை பாலகோபாலன் என்ற ஒரு 'செருப்பை' எடுத்து முதல் நாள் (23.9.08) அடித்தது; பிறகு பினாங்கு மதியழகன் என்ற 'பருப்பை' தூக்கி இரண்டாம் நாள் (24.9.08) அடித்தது.

மக்கள் ஓசைக்காரர்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் திருமாவளவனை நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், பத்திரிகையில் பெயர் வருவதற்காக ஆளாய் பறக்கும் நம்பியார், மதியழகன் போன்ற விளப்பர விரும்பிகளை ஏவி விட்டு கோழத்தனமாக மக்கள் ஓசை செயல்பட்டுள்ளது.

மக்கள் ஓசை ஆசிரியருக்கு'சிந்திக்கம் வேளை' இன்னும் கிடைக்கவில்லை போலும். அதனால்தான், யார் யாரையோ தூண்டிவிட்டு எழுதச் சொல்லி முதல் பக்கத்தில் போடுகிறார்கள்.

திருமாவளவனின் சொன்ன கருத்துக்கள் யாவும் உண்மையானவை. தாங்கள் நடிகை தொடையைப் போடவில்லை, தொப்புளைக் காட்டவில்லை; மொழியின பண்பாட்டைச் சீரழிக்கவில்லை என்று எந்த பத்திரிகையும் நெஞ்சை உயர்த்தி மறுக்க முடியாதவை.

அதனால்தான் கோழைத்தனமான மிகவும் கீழ்த்தரமான வேலையைச் செய்கிறார்கள். மக்கள் ஓசையின் நரித்தனம் விரைவில் மக்களுக்குத் தெரியவரும்!!

-இளஞ்சித்திரன்
வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

தொடையையும் போடும்
தொப்புளையும் காட்டும்
நம்மத் தமிழ் ஊடகம் - விட்டால்
அவுத்து போட்டு ஆடிடும்!

தமிழையும் அழிக்கும்
தமிழரைக் கெடுக்கும்
நம்மத் தமிழ் ஊடகம் - காசுக்காக
கட்டி யவளை வித்திடும்!

எழுத்துப் பிழை செய்திடும்
பிற மொழியைக் கலந்திடும்
நம்மத் தமிழ் ஊடகம் - விட்டால்
மரபு வேரைப் பிடுங்கிடும்!

குப்பைகளை வெளியிடும்
குழப்பங்களைச் செய்திடும்
நம்மத் தமிழ் ஊடகம் - விட்டால்
குமுகா யத்தை அழித்திடும்!

-அன்பன் இனியன்
இரவூப்பு, பகாங்கு

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா.என் பெயர் சு.கனகராஜன். நான் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 5ஆம் படிவம் படிக்கிறேன். நான் முதல் முறையாகத் தமிழுயிருக்கு எழுதுகிறேன். என்னுடைய கட்டுரையில் குறைகள் இருந்தால என்னை மன்னிக்கவும். நமது தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் சினிமா நடிகைகளின் அசிங்கமான படங்கள் மாணவர்களுக்கு மிகவும் பாதகாமாக அமைந்துள்ளது என்பது என் கருத்து. எடுத்துக்காட்டாக என்னுடன் பயிலும் சில மாணவர்கள் பத்திரிகை வார மாத இதழ்களில் வெளியிடப்படும் நடிகைகள் அரைகுறை உடையுடன் இருக்கும் படங்களை வெட்டி சேகரித்து வைத்துள்ளனர். அதற்காக தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துள்ளனர். அதில் அந்த நடிகைகளுடைய அசிங்கமான படங்களை ஒட்டி பெயர் எழுதி வைத்துள்ளனர். பள்ளிக்கும் அந்த புத்தகத்தை எடுத்துவந்து மற்ற நண்பர்களுக்கு காட்டுவார்கள். இதனால், மாணவர்கள் கெட்டுச் சீரளிந்து போகிறார்கள் என உறுதியாகக் கூறுகிறேன். சில மாணவிகளும் இதேபோல் செய்கின்றனர். இதனால் நமது தமிழ் பண்பாடு நாசமாக்க்கப்படுகிறது. இந்த மாதிரியான படங்களை போடுங்கள் என்று பத்திரிகைகளை யார்தான் தூண்டுகிறார்கள்? ஏன் இப்படிப்பட்ட படங்களைப் போடுகிறார்கள். இதுதவிர, வீட்டில் பெற்றொருடன் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்குத் தொலைக்காட்சியிலும் பல அருவருப்பான காட்சிகள் நிறைய போடுகிறார்கள். குறிப்பாக வானலில், சன் டிவி போன்றவற்றில் இப்படிப்பட்ட அசிங்கமான காட்சிகள் அதிகமாக இடம்பெருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். சில மானவர்கள் சில வார இதழ்களை விடாமல் வாராவாரம் வாங்குகிறார்கள். அதில் உள்ள நல்ல கருத்துகளை படிப்பதற்கு அல்ல. அதில் வெளியிடப்படும் நடிகைகளின் அசிங்கமான படங்களைப் பார்த்து ரசிப்பதற்கு. என்னைப் போன்ற பல மாணவர்கள் நாடு முழுவதிலும் தமிழ்த் தேர்வும் தமிழ் இலக்கியத் தேர்வும் எழுதுகிறோம். அது சம்பந்தமாக ஞாயிற்றுக் கிழமை செய்திகள் போட்டால் பயனாக இருக்கும். அதோடு நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. வேற்று மொழி சொற்களையும் சில நாளிதழ்கள் அதிகமாக போடுகின்றன. குறிப்பாக மக்கள் ஓசை இந்த தமிழுக்கு துரோகச் செயலைச் செய்கிறது. மலேசிய நண்பன் நாளிதழில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் நிறைய வெளியிடுகிறார்கள். ஆனால் தமிழ் நேசனும் மக்கள் ஓசையும் அப்படியல்ல. அரசியல் செய்திக்கும், அடிதடி வெட்டுக்குத்து கொலை கற்பழிப்பு போன்ற செய்திக்குதான் முதலிடம் கொடுகிறார்கள். இதனை எல்லாம் மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ள தமிழ்நெறி தலைவர் இரா.திர்மாவளவன் அவர்களுக்கு இவ்வெளையில் நன்றி கூற விரும்புகிறேன். இவரைப் போன்று இன்னும் பலரும் குரல் கொடுத்தால் தமிழ்ப் பத்திரிகைகளிம் தரத்தை நிலைநாட்ட முடியும். நமது மக்களையும் இளஞர்களையும் இளம் பெண்களையும் தீய வழிகளுக்குச் செல்வதிலிருந்து காப்பாற்ற முடியும்.

-சு.கனகராஜன்
5ஆM படிவ மாணவன்
பெட்டாலிங் ஜெயா.
25.09.2009

Govind சொன்னது…

MUTHALIL PUTHIYA THAMIL THIRAI PADANGALAI IRAKKUMATHI SEIVATHAI NIRUTHA VENDHUM.

ITHANAAL NAM SAMUTHATHUKKU NADANTHA, NADAKKIRA KODUMAI KONJAM NANJAM ALLA.

THAMIL THIRAI NADIGAIGAL INTHA ALAVUKKU KEEL THANAMAGA VESITHANAM KAATTUVAR ENDRU ENNA MUDIYA VILLAI.

THAMIL THIRAI PADA THAYAARIPPU SAMBANTHA PATTOR, THAM PILLAIGALAI-KURIPPAAGA PENN PILLAIGALAI ENGE ADAITHU VAITHU, ITHAGAIYA "NAASA-VESHA_NEESA" VELAIYIL IRANGGU GINDRANAR?

MAANAM KETTA MAANGGAI MADAYARGAL!

PANAM VENDHUM ENDRAAL, THAM PILLAIGALAI VITKA VENDIYATHU THAANE? NIRAIYA KAASU KIDAIKUME?

NAM PILLAIGAI KEDUPATHATKU, IVANGALUKKU EVAN URIMAI KODUTHATHU?

INTHA MAANAM KETTA SAMUTHAAYAM TAANE?

"KAVARIMAAN" KATHAIYELLAAM POI, IPPO VERUM "ARIPEDUTHA" MAANGALAAGA AAGI VITTOMAA NAMMIL PALAR?

AIYAHO? ENNA KODUMAI ITHU!!