வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 1 செப்டம்பர், 2008

தமிழினத் தலைவரே.. தமிழரைக் காப்பீரா?

சின்னச் சிறு பிஞ்சு
இவள் செய்த பாவம் என்ன?
அவள் கண்களைப் பாருங்கள்..உங்களைப் பார்த்துத் தான் கேட்கிறாள்
நாதியற்ற ஒரு தமிழனுக்குப் பிறந்ததைத் தவிர
இவள் செய்த பாவம் என்ன?


இரத்தமும் சதையுமாக
இந்திய அரசு கொடுத்த பணத்தில்
கொத்திக் குதறிய
சிறிலங்காவின் எறிகணைகள்...!உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த
இந்த வெள்ளைத் தோல் அம்மணிக்கு இருக்கும்,
மனிதாபிமானம் உங்களுக்கு ஏன் இல்லாது போனது?மல்லாந்து கிடக்கும் இவள்
வளர்ந்து உங்களைப் பற்றி
எப்படிக் கவிதை புனைவாள்?
ஈழத் தமிழர் சரித்திரம்

உங்களை எங்கனம்
பதிந்து கொள்ளும்?

நீங்கள் உலகத் தமிழ்த் தலைவரா?
பெரியார் அண்ணா வழி வந்த திராவிடத் தலைவனா?
தமிழ் கூறும் நல் உலகில் உங்கள் யோக்கியதை என்ன?
இன்னும் எத்தனை காலம் தான் மவுனமாக இருப்பீர்கள்?
கறுப்புக் கண்ணாடிகள்
உங்கள் கண்களை மறைத்தனவோ
இல்லை உங்கள் வஞ்சனமோ
தமிழன் என்னும் உறவும் வேண்டாம்
திராவிடன் என்னும் அடையாளமும் வேண்டாம்
மனிதம் என்னும் ஒரு துளி ஈரமும்
உங்கள் நெஞ்சை இளக வைக்கவில்லையா?
நீங்கள் நினைத்தால் உங்கள் ஒரு சொல்லால்
இதனை நிறுத்தலாம்,
சொல்வீர்களா....?

**நன்றி:- தாய் நாடு


@ஆய்தன்:-
நெஞ்சு பொறுக்குதில்லையே...!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஈழத்து இளம் பிஞ்சுகளை நசுக்கும் சிறிலங்கா அரசு ஒழிக! ஒழிக!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

உள்ளத்தை; உணர்வை; உயிரை உறையவைக்கிற படங்கள்..!

ஈழத்துத் தமிழனுக்காக உரிமையோடு உலகத் தமிழர் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்..!

தமிழரின் தாய்மண் தாகத்திற்குத்
தமிழீழத் தாயகம் ஒன்றே தீர்வு..!

அரியாங்குப்பத்தார் சொன்னது…

தனக்கும் தன் வாரிசுகளுக்கும் தற்போது சேர்ந்துள்ள பல்லாயிரக்கோடி கணக்கான சொத்துக்களை பாதுகாப்பதும், அவற்றை மேன்மேலும் பெருக்கச்செய்வதும்தான் தமிழினத்தலைவர் என்று நாம் நம்பி ஏமாந்த கருணாநிதியின் தற்போதைய தலையாயப்பணி.

பெயரில்லா சொன்னது…

veera tamilar thalaivan defintetly will come to save the race.what a descendent of a barbar can do.literary knowledge of tamil not sufficient to become the world tamil leader.