வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 13 செப்டம்பர், 2008

நாகரிகத் தமிழச்சிக்கு வெட்கமில்லை!

செய்தி வழங்கியவர்:- இளவேனில்

ஐயா, அண்மையில் நம் அரசாங்க விளம்பரம் ஒன்றில் கண்ணுற்ற ஒரு காட்சி எனக்கு எரிச்சலூட்டியது. ருக்குன் நெகாரா, மலேசியரின் வாழ்க்கை முறை எனும் விளம்பர படத்தில் மூன்று இன பெண்கள் காட்சி தருகிறார்கள். அவர்களில் இருவர் தத்தம் கலாசார உடை அணிந்திருக்க, மற்ற ஒரு பெண்ணோ கொப்பூழ் தெரிய கையில்லா ஆடை ஒன்றை அணிந்து இருக்கிறாள். நெற்றியில் திலகம் இல்லை. இவள் யார்? மலேசியாவின் மூவினத்தில் ..தமிழினமும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அது மாறிவிட்டதோ? தயை கூர்ந்து விளக்குங்கள்.


@ஆய்தன்:-

இளவேனில், தாங்கள் படத்தோடு விடுத்த செய்திக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். நம்முடைய தமிழினத்தில் நடக்கின்ற ஆனால், பலரும் கண்டும் காணாமலும் இருக்கின்ற ஒரு செய்தியை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இனநலம் பண்பாட்டு நலம் கண்முன்னே சீரழிவதைக் கண்டு பொங்கி எழுந்துள்ள உங்கள் தமிழ் மனம் வாழ்க!

தமிழினத்தின் பெருமைகளையும் பண்பாட்டையும் காக்கவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழ்ப் பெண்களிடம் இருக்கிறது. பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரையில் மரபுவழிச் சார்ந்த தமிழ்க் கலை, பண்பாடு, உடை, உணவு முதலான பலவற்றை இன்றைய நாள்வரையில் அரணாக நின்று காத்து வருபவர்கள் தமிழ்ப் பெண்களே.. தமிழச்சிகளே என்றால் மிகையாகாது.

அதனால் தான், "மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்" என்றும், "பெண்ணின் பெருந்தக்க யாவுள?" அதாவது "பெண்ணைவிட பெருமைமிக்கது ஏது?" என்று தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் தமிழ்ப் பெண்களைப் புகழ்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

"அச்சம், மடம், நாணம்.. பயிர்ப்பு" என்று பெண்ணினத்திற்கே தனிப் பண்பாட்டை உருவாக்கி போற்றி வளர்த்த இனம் நமது தமிழினம். இப்படிப்ப ஒரு சிறப்புமிக்க பண்பாட்டுக்கு உரிய தமிழ்ப் பெண்கள்.. தமிழச்சிகள் (சிலர்) இன்று எப்படி மானங்கெட்டு மதிகெட்டு இருக்கிறார் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல ஆதாரம். சொந்த இன மரபை.. இன பண்பாட்டை மறந்து இன்றையத் தமிழச்சிகள் தறுதலைகளாய் அலைகிறார்கள் என்பதற்கு இந்தச் படம் நல்ல சான்று. மொத்தத்தில், நாகரிக பித்துப்பிடித்த தற்காலத் தமிழச்சிகளுக்கு வெட்கம்.. மானம்.. சூடு சுரணை.. எல்லாமே குறைந்துவிட்டது.

இன்றையத் தமிழ்ப் பெண்களுக்கு.. தமிழச்சிகளுக்கு (அவர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் மோர்டன் இந்தியன் கேர்ல்ஸ் - modern indian girls) தெரிந்த பண்பாடு என்ன தெரியுமா?

அரைகுறை ஆடையில் அலைவதே அச்சம்!
மார்ப்பைக் காட்டித் திரிவதே மடம்!
நடிகைகள் போல நாறிப் போவதே நாணம்!
பளபள உடம்பைப் படமாகக் காட்டுவதே பயிர்ப்பு!

இந்த மானங்கெட்டச் சிறுக்கிகளைச் சொல்லி என்ன பயன்! இவர்களைப் பெற்று இப்படியெல்லாம் மானங்கெட்டத் தனமாக வளர்த்தெடுத்தார்களே ஆத்தாவும் அப்பனும்.. அவர்களை அடிக்கவேண்டும்! எதிலே அடிக்கலாம்.. நீங்களே முடிவு செய்யுங்கள்!!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்தக் காலத் தமிழ்ப் பெண்களுக்கு நல்ல சூடு கொடுத்துள்ளீர்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். நான் வரவேற்கிறேன். நவின நாகரீக மோகத்திலும் சினிமா தாக்கத்திலும் இன்னும் பணத்திமிரிலும் கலை பண்பாடு எல்லவற்றையும் காற்றில் பறக்க விடுகின்றனர். அதற்கு நம் நாட்டு அஸ்ட்ரோ போன்ற தகவல் ஊடகங்களும் துணை போகின்றன.

அண்மையில், எல்லாமே நம்ம பாட்டுதான் என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் பெண் கலைஞர்களில் தொடையையும் பின்பக்கத்தையும் திரும்ப திரும்ப காட்டியது மிகவும் அறுவறுப்பாக இருந்தது. அந்த கலைஞர்களும் இப்படி அசிங்கமாகக் காட்டுவதை விரும்பித்தான் அப்படி செய்கிறார்கள். வேண்டுமென்றே அரகுறை ஆடை அணிகிறார்கள். கேட்டால் உரிமையாம் விருப்பமாம். மண்ணாங்கட்டி!