வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 13 டிசம்பர், 2008

காசி ஆனந்தன் நறுக்குகள் - 2

"தமிழைத் தொடுவதும் என் உயிரைத் தொடுவதும் ஒன்றே" எனக் கூறியவர் தமிழ்த் தேசியப் பாவலர் காசி ஆனந்தன்.

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த் தாயகம் – இவற்றின் வாழ்வும் வளமும்தான் இவருடைய ஆளுமையின் ஆதாரம் என்பதில் ஐயமில்லை.



1.மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுகிறது...

கொம்பை
மறந்த
மாடு.


2.அறுவடை

திரைப்படச்
சுவரொட்டியைத்

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.


3.புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்!


4.விளம்பரம்

விளம்பரம்.

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை...

தொலைக்காட்சியில்!


5. மந்தை

மேடை

"தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ"
என்றேன்.

கை
தட்டினான்!


6.கண்ணோட்டம்

செருப்பைப்
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!


@ஆய்தன்:-

நகரப்பெண்

ஒப்பனைப் பெட்டி
கைப்பேசி
மஞ்சள் பத்திரிகை
ஆணுறை

தோளில்
மாட்டிய
கைப்பையில்..!

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

//நகரப்பெண்

ஒப்பனைப் பெட்டி
கைப்பேசி
மஞ்சள் பத்திரிகை
ஆணுறை

தோளில்
மாட்டிய
கைப்பையில்..! //

நகரப்பெண்கள் பொதுவாகவே இப்படி பட்டவர்கள் என்ற தோற்றம் கொடுத்து விட்டதுபோல் தெரிகிறதே..?

ஆதவன் சொன்னது…

@சதீசு குமார்,

//நகரப்பெண்

ஒப்பனைப் பெட்டி
கைப்பேசி
மஞ்சள் பத்திரிகை
ஆணுறை

தோளில்
மாட்டிய
கைப்பையில்..! //

'மிளகாய் தின்ன‌' நகரப்பெண்கள் அல்லது நாகரிகப் பெண்களுக்குச் நாக்கில் உறைக்கட்டுமே..!

தன் முன்னேற்றத்திற்காகவும் தன் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் அல்லும் பகலும் அரும்பாடு படும் நகரப்பெண்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. நல்லறிவும் போர்க்குணமும் செயல்திறமும் மிக்க அவர்களுக்கு எமது வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

ஆனால், நகர மோகமும் ‍ நாகரிக மோகமும் கொண்டு எமது தமிழ்ப்பெண்கள் கெட்டுச் சீரழிவதைக் காணப் பொறுக்காமல் எழுதப்பட்ட வரிகள் அவை.

நகர ‍ நாகரிக வாழ்க்கையில் இப்படி தறிகெட்டு வாழ்வதெல்லாம் தவிர்க்க இயலாதது என்று பல இளம்பெண்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய நாகரிகப் பெண்கள் மிக மிக இழிவாகவும் கேவலகமாகவும் தங்களைத் தாங்களே நடத்திக்கொள்கிறார்கள்..!

ஊடகங்களும் அவர்களின் ஏமாளித்தனத்தையும் நாகரிக மோகத்தையும் பணப்பித்தையும் பயன்படுத்திகொண்டு பெண்களைப் பாழாய்ப் படுத்துகிறார்கள்.

இது போதாவென்று.. தமிழகத் திரைப்படங்கள் வேறு. அந்த கண்ணறவிகளைச் சொன்னால் சொல்லி மாளாது... விட்டுவிடுவோம்.