வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 19 டிசம்பர், 2008

ஓட்டம் 100 வகை:- வாங்க பார்க்கலாம்!

  • நாட்டின் முன்னணித் தமிழ்... மன்னிக்கவும் இந்திய தொலைக்காட்சி வண்ணவில் பெரும் பாடுபட்டு நடத்தும் மகா சிறப்பான இறுதிப் போட்டி நிகழ்ச்சி..

எங்கே:- சொகூரில்
எப்போது:- வரும் சனிக்கிழமை 20-12-2008
எத்தனை மணிக்கு:- எட்டு மணி முதல் விடிய விடிய கும்மாளம்

உங்கள் நெஞ்சங்களில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கும் உள்ளூர் ஓட்டக்காரன்களும் ஓட்டக்காரிகளும் கும்பல் கும்பலாக வந்து ஓடுவார்கள்..!

நிறைய பணம் செலவுபண்ணி தம்மா துண்டு துணியில் உடைகளைப் போட்டுக்கொண்டு கவர்ச்சியாக குதித்து குதித்து ஓட்டம் போடுவார்கள்..!

மேலும்.. இடுப்பில் தூக்கிவைத்து ஓடுவது..
முதுகில் உப்புமூட்டை தூக்கி ஓடுவது..
அதிலும் குறிப்பாக பெண்கள் மாணாவாரியாக காலைத்தூக்கி ஓடுவது போன்ற ஓட்டங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன..!

இத்தனைக்கும் ஒரே நிகழ்ச்சி



அதுமட்டுமல்ல இரசிகர்களே..

உங்கள் மனங்களில் எச்சில் தடவி ஒட்டிக்கொண்டிருக்கும் உங்கள் உயிருக்கும் உயிரான அறிவிப்பாளர்கள்.. முத்தமிழுக்கு ஒப்பான முத்தான மூன்று அறிவிப்பாளர்கள்.. அவர்களைக் நேரடியாகக் கண்டு அவர்களோடு கும்மாளமும்.. இடையிடையே குத்தாட்டாமும் போட நல்லதோர் வாய்ப்பு..!

கேட்க.. கேட்க தெவிட்டாத அறிவிப்புகளும்.., சிரிக்கச் சிரிக்க சலிக்காத நகைச்சுவைகளும்.. கடிகளும்.. வெடிகளும்.. நிறைய உள்ளன..!

கூடவே.. இரசிகர்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து வைத்திருக்கும் 'மப்பு'லுவின் கொப்புறுவும் நிறைய உண்டு..!

இடையிடையில், மண்ணின் மைந்தர்களின்
கால்பகுதி தமிழும் முக்கால் பகுதி ஆங்கிலமும் கலந்த கலக்கல் இசையும்
உங்கள் செவிகளில் தேனாகப் பாயும்..!

இப்படி வரலாற்றுச் சிறப்புகுரிய ஒரே ஒற்றை நிகழ்ச்சி..


இதுவெல்லாம் போதாது என்று..
உங்களுக்காகவே ஒரு சிறப்பு விருந்தினர் வருகிறார்.
மலேசியாவில் திறமையுள்ள நடுவர்கள் யாருமே இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாபெரும் திரைப்பட நடிகர்.. உங்களுக்காகவே வருகிறார்..!

இதையெல்லாம் தவற விடலாமா?

வாழ்க்கையில் இப்படிப்பட்ட கும்மாளமும் கூத்தடிப்பும் எவ்வளவு முக்கியம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே..!

உங்களுக்காவே..
உங்கள் மகிழ்ச்சிக்காகவே..
உங்கள் எதிர்கால முன்னேற்றத்தைக் கருதி..
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
"ஓட்டம் 100 வகை"

இறுதிப் போட்டிக்கு மறவாமல்.. தவறாமல் வாருங்கள்..!

உங்கள் குடும்பம் குட்டிகள்.. அக்கா தங்கை தம்பி எல்லாரையும் அழைத்து வாருங்கள்..! குடும்பத்தோடு.. கூட்டமாக சேர்ந்து... குத்தாட்டம் போடுவோம்..!

வர முடியாத இரசிகர்களே...
கவலையை விடுங்கள்! கண்ணீரைத் துடையுங்கள்!
உங்களுக்காகவே வண்ணவில் தொலக்காட்சியில்
நேரலையில் நிகழ்ச்சியைக் காட்டுவோம்..!

திடலில் நடக்கும் ஓட்டங்களையும்.. அறிவிப்பாளர்களின் கொட்டங்களையும்.. நிகழ்ச்சியைப் பார்க்கவரும் இரசிகர்களின் கொண்டாட்டங்களையும் மிக நெருக்கமாக.. எல்லாவற்றையும் பெரிசு பெரிசாகத் தொலைக்காட்சித் திரையில் காட்டுவோம்..!

நேரடியாக வர மறவாதீர்கள்..
தொலைக்காட்சியில் காண மறவாதீர்கள்..
ஆகா.. சிறந்த போட்டி நிகழ்ச்சி..


@ஆய்தன்:-
ஓடாதடா ஓடாதடா மனிதா – ரொம்ப
ஓட்டம் போட்டா ஓடஞ்சிடுவ மனிதா..!


9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பணம் ஒன்றே குறிக்கோள்; வருவாயைப் பெருக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

`ஈட்டம் 100 வகை' என்றாலும் பொருந்தும்.

Sathis Kumar சொன்னது…

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சொல்லி குற்றமில்லை, நம்ப சனங்களுக்கு எங்க போச்சி மூளை..?!

பெயரில்லா சொன்னது…

எவ்வளவு முக்கியமான நிகழ்வு ஓட்டம் 100 வகை. மானங்கெட்ட தமிழர்கள் திருந்தமாட்டான்.


குபேரன்
ஜொகூர்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:))

Thiruu00 சொன்னது…

100 வகையாகவே இருந்தால் பரவாயில்லை. மக்களின் பேராதரவு கண்டு 1000 வகையாக மாறாமல் இருந்தால் சரிதான். அதிலும் அறிவிப்பாளர்களின் தமிழைக் கேட்க கொடுத்து வைக்கணும். இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் புலம்ப வேண்டுமோ?

இதுதான் புதுமையாமே...சொல்லிக் கொள்றாங்க...."அப்படியா"னு கேட்டா...நீ இன்னும் 1948லியே இருக்கியானு கேட்குறாங்க.

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம்ணு சொல்லித்தான் ஆஸ்ட்ரோவுக்கும் ராகாவுக்கும் தடா போட்டு விட்டேன்.

பரவாயில்லைங்க..நான் இரண்டொரு தலைமுறை பிந்தங்கியே..இருந்திடுரேனே...

சிவகுமார் சுப்புராமன் சொன்னது…

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும், ஆனால் இங்கு நிலைமை எப்படி உள்ளது. வருடா வருடம் நிகழ்ச்சி நடந்துகொண்டுதான் உள்ளது, நாம் குறைகூறிக்கொண்டுதான் இருக்கிறோம்...
இனியும் குறைகூறிக்கொண்டே இருப்போம்...

நிகழ்ச்சிதாரர்கள் வசூலை அள்ளிக் குவிக்கிறார்கள், ஆனால் முதல்பரிசு பெற்றவர்களுக்கான பரிசுகள் கிடைக்க பாவம் ஆறுமாதங்கள் அலைந்துதான் ஏதோ கொஞ்சம் கிடைத்ததாம், ஸ்ரீமூடாவில் கேள்விப்பட்டேன்.

பெயரில்லா சொன்னது…

ஆ! ஆ...!!
பிரமாதம்!
சிவப்பு இந்தியரும் சரவாக் மண்ணின் மைந்தர்களும் பங்கேற்ற அருமையான நிகழ்ச்சி!!!

அட அடா!! என்ன ஆட்டம்! என்ன குலுக்கல்!!!

நிகழ்ச்சி படைப்பாளர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

அடுத்த நிகழ்ச்சியில "நாய் மாதிரி"
ஒன்னுமே போடாம வந்து அசத்தினாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லீங்க! அவ்ளோ அருமையிங்க!

A N A N T H E N சொன்னது…

ஓட்டம் 100 வகை.... LOLm

ஆதவன் சொன்னது…

@அ.நம்பி
@சதீசு குமார்
@குபேரன்
@விக்கினேசு
@திருமூர்த்தி
@சிவக்குமார்
@நகு
@ஆனந்தன்

அனைவரும் 'ஓட்டம் 100 வகை' பற்றி சொன்ன மறுமொழிகளுக்கு நன்றி.

முக்கிய அறிவிப்பு:-

ஓட்டம் 100 வகை தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டில் மீண்டும் நடத்தப்படும். அதுவரை இரசிகர்கள் காத்திருக்குமாறு வண்ணவில் தொலைக்காட்சி நிலையத்தார் அறிவித்துள்ளனர்.