வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 16 மார்ச், 2008

வண்டவாளம்..! (2)


என் பெயர்:- இராஜசோனகிரி

தொழில்:- தமிழ் வானொலி நிலையத் தலைவர்

கொள்கை:- தமிழ் வானொலியில் தமிழ் இருக்கக்கூடாது

விரும்பிச் செய்வது:-
நன்றாகத் தமிழ்ப் பேசும் அறிவிப்பாளர்களை நோட்டம் இடுவது

பிடித்தப் பழக்கம்:-
புதிய அறிவிப்பாளர்களைக் கொச்சை வார்த்தையில் திட்டுவது

அதிரடியாகச் செய்வது:-
நல்லதமிழ் பேசும் அறிவிப்பாளர்களுக்கு ஆப்பு வைப்பது

இதுவரை செய்த பெரிய சாதனை:-
சுழியம் என்பதைத் தடைசெய்து பூஜ்ஜியத்தை நிலைப்படுத்தியது

பூஜ்ஜியத்தை நிலைப்படுத்திய காரணம்:-
நானும் பூஜ்ஜியமாக இருப்பதால்

பிடித்த ஒருவர்:-
எனக்கு நன்றாக கூஜா தூக்கும் என்னுடைய துணை அதிகாரி சாந்தமான அம்மையார்.

எதிர்கால ஆசை:- அகில மலேசிய பூஜ்ஜிய சங்கம் தொடங்குவது.


  • ஆய்தன்:- தமிழ் வானொலியில் தமிழுக்குத் தடையாக இருக்கும் தமிழ் அதிகாரிகள் செத்தொழியும் நாளே தமிழர்க்கு நன்நாளாகும்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வண்டவாளம் என்ற இந்த பகுதி மிகவும் நகைச்சுவையாக உள்ளது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல பாடமும் கூட. இந்தப் பகுதியில் இன்னும் யார் யாருடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது. போட்டுத் தாக்கு கேளிச் சித்திரமும் தொடர வேண்டும். சில உணர்ச்சிமயமான சிக்கல்களுக்கு நடுவில் இப்படி நகைச்சுவை கலந்த கருத்துகள் சுவையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. தொடர்க ஐயா. கூ..ள்..!

-சித்தன் சிவாஜி

பெயரில்லா சொன்னது…

தமிழ் வானொலியில் தமிழ்பேச
தடை விதிக்கும் மண்டு
அவன் மண்டைக் குள்ளே
இருப்பது களி மண்ணு!

தமிழ்ச் சோறு தின்னுபுட்டு
கொளுத்துப் போகிறான்
தமிழைக் கெடுக்கும் பாவிப்பயல்
உதை வாங்கப் போகிறான்!

தமிழை வளர்க்க மனமின்றி
வாழ்க்கை நடத்துறியே - மண்டு
உனக்கு சூடு சொரணை
இருக்குதான்னு தெரியலையே!

தமிழன்பன்,
இனியன்,
இரவூப்பு, பகாங்கு

பெயரில்லா சொன்னது…

வணக்கம். தமிழோடு வாழ்க!மலேசியத் தமிழ் வானொலியான மின்னல் பண்பலையின் தரம் நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்து போவதற்கு அதனுடைய தலைமைத்துவமே காரணம் என்றால் மிகையில்லை. ஒரு காலத்தில் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடாற்றிய இந்த வானொலி இன்று தமிழை அழித்தொழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. நன்றாகத் தமிழ்ப்பேசி நிகழ்ச்சிகளை வழிநடத்திய திறமையான அறிவிப்பாளர்களை முடக்கிப் போட்டுவிட்டது இந்த வானொலி. கொழுத்த யானை தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல வானொலி தலைவர் செயல்பட்டு வருகின்றார்.

மொழி, இன உணர்வற்ற ஒரு தனி மனிதனின் செயலால் 200 ஆண்டுகள் பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க மலேசியத் தமிழினத்தின் அடையாளங்கள் அழிந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. மொழியின் மீது நம்பிக்கையற்ற தனியாள் ஒருவரின் தன்மூப்பான செயலால் எதிர்காலத் தலைமுறைக்கு நல்லதமிழ் போய்ச்சேராமல் தடைவிதிக்கப்படுகிறது.

தமிழை வாழவைக்க வேண்டிய வானொலி தலைவர் தமிழை அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. அதனை நக்கலாக கண்டித்திருக்கும் ஐயா ஆய்தன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

தமிழ்ப்பணியில் உங்களுடன்,
இளஞ்சித்திரன்,
வெள்ளி மாநிலம்.

பெயரில்லா சொன்னது…

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக மின்னல் எப்.எம் வானொலி இப்போது ராகா வானொலியைப் பார்த்து தன்னுடைய தனி அடையாளத்தை இழந்து வருகிறது. மின்னலுக்கு என்று தனியான - தரமான நேயர்கள் கூட்டம் எப்போதுமே உண்டு என்பது அதன் தலைவருக்குத் தெரியாமல் போய்விட்டதா? மின்னலின் தீவிர நேயர்கள் படித்தவர்கள்; பண்பாளர்கள்; நல்லன விரும்பிகள்; தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சுழியத்தை வானொலியிலிருந்து நீக்கிவிட்ட ஆணவம் அவருக்கு இருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் வாயிலும் தமிழ் மாணவர் எழுத்திலும் சுழியம் மிக இயல்பாகப் புழங்கி வருவதை அவர் அறிவாரா?

மலேசியத் தமிழ்க்கல்வியாளர்கள் சுழியத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது என்பதை வானொலித் தலைவர் உணரவேண்டும்.

புதிய ஆக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எதிர்மறை சிந்தனையாளர்கள் (Negatif Minded) கூட்டத்தாரில் இவரும் ஒருவராகிவிட்டார். மொழியின்மீது இவர்களைப் போன்றோர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.


அன்புடன்,
தமிழ்மானமுள்ள தமிழ் ஆசிரியன்,
இளையவேல்,
சிரம்பான்.