வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

போட்டுத் தாக்கு 2


நன்றி: மலேசிய நண்பன் செய்தி (10.2.2008)

  • ஆய்தன் : தமிழ் இலக்கண வழிகாட்டிச் சிப்பத்தில் கிரந்த எழுத்துகளைக் கொண்ட சமற்கிருத பெயர்களை வலிந்து திணித்துள்ள ஆரிய அடிவருடி ஆசிரியர்களே... உங்களுடைய வடமொழி வக்கிரப் புத்தியைத் தமிழ் மாணவர்களிடையே பரப்ப வேண்டாம். உங்களுடைய பெண்டாட்டி பிள்ளைகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உண்ணும் அரிசியைக் கலப்படம் செய்யவும்.. உடுத்தும் ஆடையை அழுக்குச் செய்யவும்.. கட்டிய மனைவியைக் கலங்கம் செய்யவும் சம்மதமா உங்களுக்கு!!!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம். தமிழுயிர் செய்திகளில் ஓரளவு தொய்வு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். அசதிக்குச் சுடர் தரும் தமிழ் தமிழுயிருக்கும் ஆக்கத்தைத் தரட்டும்.

நெகிரி மாநில தமிழ் இலக்கணச் சிப்பம் பற்றிய செய்தியை நாளிதழில் கண்டேன். தமிழை நீசமொழி என்று கடந்த ஆண்டுவாக்கில் பேசிய அதே தமிழ்ப்பகைவர் கூட்டத்தார் தான் இந்த நயவஞ்சகப் பணியைச் செய்துள்ளனர் என்று அறிய வந்தது. தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சோத்துப்பிண்டங்களுக்கு சுட்டுப் போட்டாலும் நல்ல புத்தி வராது போலும். போட்டுத் தாக்கு 2இல் கூறியுள்ளது போல இவர்கள் தமிழனுக்குப் பிறந்த தமிழர்களா என்ற சந்தேகம் வருகிறது. ஒருவேளை இவர்கள் தமிழர் அல்லாதவர்களாக இருந்தால் தயவுசெய்து தமிழாசிரியர் என்ற முகமூடி அணிந்து தமிழுக்குக் கெடுதல் செய்ய வேண்டாம். உங்கள் தாய்மொழியை வளர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் எங்கள் தமிழில் கைவைக்க வேண்டாம்; தமிழைச் சிதைக்க வேண்டாம். தமிழ் உங்களுக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் சோறு போட்டிருக்கிறது என்ற நன்றி உணர்ச்சி கொஞ்சமாவது வேண்டாமா உங்களுக்கு? நன்றிகெட்டவர்களா நீங்கள்? பெற்றதாயின் மடியில் கைவைக்கும் கேடுகெட்ட பிறப்பினரா நீங்கள்? உங்கள் மொழியைக் காக்க வேண்டுமானால் அந்த மொழி இருக்கும் இந்தியாவுக்கும் ஆந்திராவுக்கும் கேரளாவுக்கும் கருநாடகத்திற்கும் ஓடிவிடுங்கள். செத்துப்போன பிணமாகிய கிரந்தம், சமஸ்கிரும் ஆகிய மொழிகளை எழுப்பி வீட்டுக்குள் குடிவைத்துக் கொள்ள விரும்பும் நீங்கள் மதியுள்ள மனிதர்களா? பிணந்தின்னிக் கழுகுகளாக திரியும் நெகிரி செம்பிலான் ஆசிரியர்களுக்கு ஆய்தன் கொடுத்திருக்கும் சூடு நல்லா உறைக்கின்ற சூடுதான். நல்ல புத்தி சொல்லியும் கேட்காத மூடர்களுக்கும் முட்டாள்களுக்கும் இப்படிப்பட்ட அடி கண்டிப்பாக தேவைதான். இதுபோன்ற தமிழ் அழிப்பு வேலைகள் இனியும் நாட்டில் நடக்காமல் இருக்க தமிழ்ப்பற்றாளர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

தமிழுயிர் தொய்வில்லாமல் தமது தமிழ்ப்பணியைத் தொடர வேண்டுகிறேன்; விடைபெறுகின்றேன்.

தமிழ்ப்பணியில் உங்களுடன்,
இளஞ்சித்திரன்,
வெள்ளி மாநிலம்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் தமிழ்நலம் சூழ்க

தமிழுயிரின் தமிழ்க்காப்புப் பணிக்கு தலைவணங்குகின்றேன்.

நெகிரி மாநிலத்தில் தமிழால் பிழைப்பு நடத்தி வாழ்கின்ற 'கிரந்த ஆசிரியர்களின்' தன்மூப்பான செயலைக் கண்டு வருந்துகின்றோம். செம்மொழி தகுதி பெற்றிருக்கும் தமிழுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற கொடுமைகளுக்கு தமிழ் அன்னை தகுந்த பாடம் புகட்டுவாள் என்பது உறுதி. "வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் எதிர் வரக்கானில் காறி நீ உமிழ்வாய் என்று பாரதிதாசன் சொன்னது நினைவுக்கு வருகின்றது. வடமொழியினை முன்னிருத்தும் இவர்கள் எதற்கு தமிழாசிரியராக பணியாற்றுகின்றனர்? கிரந்த மொழியாசிரியாக பணியாற்ற வேண்டியதுதானே. தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டு தாய்மொழியாம் தமிழைச் சிதைக்க எண்ணம் கொண்டிருக்கின்ற தமிழின துரோகிகளை மலேசியத் தமிழர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தமிழில் வடமொழிச்சொற்களை வலிந்து திணிக்கும் இவர்களின் பிறப்பின் மீதே ஐயம் தோன்றுகிறது. "மொழி இனத்தின் உயிர்" என்பதை மறந்து செயல்பட்டிருக்கும் இவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. மலேசியத் தமிழன்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டுமாய் விழைகின்றோம்.
"அவனவன் வாயாலன்றி பிறனெவன் பேசவல்லான்"
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே"

ஆகவே, நெகிரி மாநிலத்தில் வெளியிட்டுள்ள இலக்கணச் சிப்பத்தை உடனே மீட்டுக் கொள்ளுமாறு விழைகின்றோம். இல்லையேல் தமிழன்னையின் பழிச்சொல்லுக்கு ஆளாகுவீர்கள் என்பது திண்ணம்.

தமிழ்க்காப்புப் பணியில்,
தொல்லூரன்
வெள்ளி மாநிலம்