வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 14 அக்டோபர், 2008

தப்பிப் பிறந்த தமிழ்வாத்தியும்! பெரியவாத்தியும்!

கணிதம் அறிவியல் பாடங்களைத் தமிழில் கற்பிப்பது பற்றிய சூடான செய்திகள் 'தமிழுயிரில்' தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தொடர்ந்து பல புகார்களைத் தமிழுயிருக்கு எழுதி வருகின்றனர். தமிழால் பிழைத்துக் கொண்டு அந்தத் தமிழுக்கே இரண்டகம் செய்யும் நன்றிகெட்ட ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் கண்டிப்பதும், தேவைப்பட்டால் தண்டிப்பதும் தமிழ் மானமுள்ள ஒவ்வொருவரின் கடப்பாடாகும். அந்தக் கடப்பாட்டினை உணர்ந்து மேலும் இரண்டு செய்திகளைத் தமிழுயிர் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.


*மின்மடல் 1:- விடுத்தவர், நக்கீரன் – சொகூர் பாரு.


ஐயா, என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியர் பத்து ஆண்டுகள் அனுபவமுள்ளவர். அவர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 10% சிறப்பூதியம் (அலவன்சு) கிடைக்கிறது. இதனால் பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயன் அடைகின்றனர். இப்போது அந்தப் பாடங்களை மீண்டும் தமிழுக்கு மாற்றிவிட்டால் அந்த 10% சிறப்பூதியம் இல்லாமல் போய்விடும். இதனால் ஆசிரியர்களுக்குப் பண நெருக்கடி ஏற்படும் என்கிறார். அவருக்கு நாங்கள் கூறும் காரணங்கள் எடுபடவில்லை. நீங்கள்தான் நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் ஐயா.

*மின்மடல் 2:- விடுத்தவர், மா.கலை – இரவாங்கு, சிலாங்கூர்.


அன்புள்ள ஆய்தன் அவர்கட்கு, எங்கள் தலைமையாசிரியர் அண்மையில் வெளியிட்ட ஒரு கூற்று. அதாவது, நடந்து முடிந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுத்தாள்கள் மற்ற தேர்வுத் தாள்களை விட சற்று தடிப்பாக இருந்தன. அதனைப் பற்றிக் கருத்துரைத்தார் அவர். அதாவது, "ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏன் தேர்வுத் தாள்களைக் கொடுத்தார்கள். அதனால் பாருங்கள் தேர்வுத் தாள் எவ்வளவு தடிமனாக இருக்கிறது. இப்படி இரண்டு மொழிகளில் கொடுக்கச் சொல்லி இவர்களிடம் (மலேசியத் தேர்வுக் கழகம்) யார் கேட்டது? மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதால், தாளும் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் போதாதா? தமிழில் வேறு எதற்குப் போடுகிறார்கள். இப்படி தடிப்பான புத்தகத்தைப் பார்த்தவுடன் மாணவர்கள் மனநிலை பாதித்து விடுவார்கள். பிறகு எப்படி தேர்வைச் சிறப்பாக எழுதுவார்கள்? ஆக, தேர்வுத் தாளில் தமிழும் இடம்பெற்றது தேவையற்றது என அவர் பேசினார். இதனைப் பற்றி கருத்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

@ஆய்தன்:-

நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றோடும் தமிழின உணர்வோடும் பணியாற்றி வருகின்றனர். தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ் மாணவர் வளர்ச்சியைக் கருதி அல்லும் பகலும் அயராமல் பாடாற்றிவரும் ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும், அதிகாரிகளும் பற்பலர் உள்ளனர். 'நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை' என்ற ஔவையின் கூற்றுக்கு ஏற்ப, இத்தகைய நல்லுள்ளங்கள் சில இருப்பதால்தான் தமிழ்ப்பள்ளிகள் இன்றும் நாட்டில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

அதே வேளையில், மேலே சொல்லப்பட்டது போன்ற தமிழ் வாத்திகளும் பெரிய வாத்திகளும் நிறைய பேர் தமிழ்ப் பள்ளிகளில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்; கூலிக்கு மாறடித்துக் கொண்டிருக்கின்றனர்; சோத்துக்கும் சுகத்துக்கும் தமிழ்ப்பள்ளிகளை நத்திப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பத்து விழுக்காடு (10%) சிறப்பூதியப் பணத்திற்காகப் பத்தாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தாய்மொழியை அடகுவைக்கப் பார்க்கும் அந்தத் தமிழ் வத்திக்கு அறிவு, மானம், ஈனம் என்று எதாவது ஒன்று இருக்கிறதா? இப்படிப்பட்ட தன்னலப் பேர்வழிகளும் பணப் பேய்களும் தமிழ்ப்பள்ளியில் குடித்தனம் நடத்திக்கொண்டிருப்பது வெட்கக் கேடு!

நாளைக்கே அந்தப் 10% சிறப்பூதியத்தை இந்த அரசாங்கம் நிறுத்திவிட்டால் இந்தத் தன்மானமில்லாத் தமிழ்வாத்தி என்ன செய்வார்? தெருவில் போய் பிச்சையா எடுப்பார்? 10% சிறப்பூதியம் முக்கியமா அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக உலக உருண்டையில் பல போராட்டத்திற்கு இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழ் முக்கியமா?

10% சிறப்பூதியத்திற்காக தாய்மொழியை அடமானம் வைப்பதற்கு அந்தத் தமிழ் வாத்திக்கு மனம் வருகிறது என்றால், இன்னும் 20% கொடுத்தால் கட்டிய மனைவியையும் 50% கொடுத்தால் பெற்ற மகளையும் விற்றே விற்று விடுவார்! இப்படிப்பட்ட பண வாத்(து)திகளைத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து விரட்டி அடிக்கவேண்டும்.

அடுத்து, அந்தப் பெரிய வாத்திக்கு வருவோம். கணிதம் அறிவியல் பாடங்களில் ஆறு ஆண்டுகளாகத் தொலைந்து போன தமிழ் இப்போது தேர்வுத் தாளில் மீண்டும் தலைக்காட்டுவது கண்டு பூரித்து போயிருக்கும் தமிழர்களில் இப்படியும் ஒரு பெரியவாத்தியா? அந்தப் பெரியவாத்திக்கு ஏன் இப்படியொரு சிறியபுத்தி!

மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ள அந்தப் பெரியவாத்திக்குத் தமிழின் மீது அக்கறை இல்லாமல் போனது ஏனோ? மாணவர் மனநிலையை நினைத்து வருந்தும் அந்தப் பெரியவாத்தி தமிழின் அழிவை நினைத்து வருந்தாமல் போனது ஏனோ? பெரும்பாலான பின்தங்கிய மாணவர்கள் தேர்வுத்தாளைத் தமிழில் படித்து மகிழ்ச்சியோடு விடையளித்திருப்பார்களே என்று அந்த மரமண்டைப் பெரியவாத்திக்குத் தெரியாமல் போனது ஏனோ?

தொலைந்து போகவிருந்த தமிழை அரசாங்கமே மீண்டும் கொண்டு வந்திருக்க, 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல' அரசாங்கக் கொள்கையை மதிக்காத, அந்தப் பெரியவாத்தியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்!


தொடர்பான செய்திகள்:-

1) கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?

2) தமிழுக்கு அதிகாரியா? தமிழுக்குச் சதிகாரியா?

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இவனெல்லாம் ஒரு மனிதனா?
தன் மகளைத் தானே புணரும் தருதலை. சோற்றோடு மலம் தின்னும் இவன், அறிவை அடகு வைத்து விட்டுத்தான் பள்ளிக்கே வருவானா? அந்த பெரிய வாத்தி எந்த மனோவியல் படித்து இப்படி பிதற்றுகிறான்..? ஒரு எஸ் பி எம் மாணவன் கூட அவ்வளவு பயிற்சியும் பாடமும் செய்திருக்க மாட்டான். அந்த அளவுக்கு கடந்த பத்தாண்டுகளாக ( அதற்கு மேலும் கூட ) நம் யூ பி எஸ் ஆர் மாணவர்கள் வாட்டி எடுக்கப்படுகிறார்கள். இந்தத் தடிமனான கேள்வித் தாளைக் கண்டு பயப்பட அவர்கள் கோழையல்ல. ஆமாம் இதையெல்லாம் ஏன் இந்தப் புறம்போக்குகள் மலாய் ஆங்கில இதழ்களில் தெரிவிப்பதில்லை; அறிக்கை விடுவதில்லை. அப்பாவித் தமிழனை ஏன் குழப்புகிறார்கள்?

தமிழ் வெறியன்,
தனேந்திரன்,
தாமான் கினாரி,
கூலிம்.

ஆதவன் சொன்னது…

தனேந்திரன்,

சிறுமை கண்டு பொங்கியுள்ள தங்கள் தமிழ் உள்ளம் வாழ்க! தமிழின் மீது கை வைப்பது என்பது குளவிக் கூட்டில் கைவைப்பதைப் போன்றது என்பதைத் தமிழ்ப் பகைவர்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும்.

முதல் முறையாக மறுமொழி எழுதியுள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடந்து எழுதவும்.

தங்கள் மறுமொழியில் இருந்த 'சில' சொற்களை நீக்கியுள்ளேன். எவ்வளவு கடுமையான சொற்களையும் பயன்படுத்துங்கள்.. 'கொச்சையான' சொற்களைத் தவிர!!

பெயரில்லா சொன்னது…

ஆசிரியர்களை வாத்தி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். மாறுபட்ட கருத்து கொண்டிருக்கிறார் என்பதனால் இவ்வளவு கடுமை வேண்டாமே..

அறிவியல் கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் திட்டம் கொண்டு வந்த சமயம் தமிழ் பற்றாளர்கள் பத்திரிக்கைகளில் கண்டன அறிக்கை விடுவதோடும் அரசாங்கத்திடம் மனு கொடுத்ததோடும் நிறுத்திக் கொண்டார்கள்.

தமிழ் வெறியனின் கருத்தை நாகரீகமாக வெளியிட்டிருக்கலாம். 'தன் மகளை தானே புணரும் தருதலை' போன்ற சொற்களை ஆய்தன் நீக்கியிருக்க வேண்டும்..!

@மதியழகன் (தமிழாசிரியன்)
குவாலா குபு பாரு

பெயரில்லா சொன்னது…

நடத்தையில் கேடு உள்ளவனை நல்ல சொல் கொண்டு திட்ட வேண்டுமா? மானத்தை விலை பேசும் மட்ட மடையனை யாரும் தற்காக்க வேண்டாம்.
மாற்றுக் கருத்தா அது? மடத்தனம் அன்றோ? காந்தியம் செத்து நாளாகி விட்டது. தொட்டால் எரித்திடும் என்பதால் தான் மின்சாரத்தின் மீது பயம். அது தமிழ் மீதும் இருக்க வேண்டும்.
தன் மொழியைக் காக்கத் தவறியதோடு தரங்குறத்தும் பார்ப்பவனை இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்க போகின்றோம்? இப்படி மன்னிக்கும் மனப்போக்கு தமிழர்க்கு இனியும் வேண்டாம்.
நம் வீட்டுப் பெண்ணைக் கைப்பிடித்து இழுப்பவனை உட்கார வைத்து பேசும் அளவுக்கு நிலைக்கு மானங்கெட்டு விட்டோமா?

தனேந்திரன்,
தாமான் கினாரி,
கூலிம்.

ஆதவன் சொன்னது…

மதியழகன்,

தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுக!

அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரை மட்டுமே 'வாத்தி' என்று குறித்துள்ளேனே தவிர எல்லா ஆசிரியரையும் அல்ல.

தமிழ்ப்பற்று மிகுந்த நல்லாசிரியர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ளேன். கவனிக்கவும்!

மாறுபட்ட கருத்துடையவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவது முறையல்ல என்பதை ஒப்புகிறேன். ஆனால், அவ்வாறு சொல்லப்படும் மாற்றுக் கருத்துகள் மொழியின நலனுக்கு வேட்டு வைப்பதாக இருந்தால் எப்படி ஏற்பது? மாற்றுக் கருத்துகளும் ஆக்கத்திற்கு வழிகாட்டுவதாக அல்லவா இருக்க வேண்டும்.

//தமிழ் வெறியனின் கருத்தை நாகரீகமாக வெளியிட்டிருக்கலாம். 'தன் மகளை தானே புணரும் தருதலை' போன்ற சொற்களை ஆய்தன் நீக்கியிருக்க வேண்டும்..!//

அந்தச் சொற்களை நீக்கி இருக்கலாம்தான். ஆனால், என்ன செய்வது மதியழகன்? நயமாக, நாசுக்காக, நாகரிகமாக, பண்பாகச் சொன்னால் சில மரமண்டைகளுக்கு ஏறுவதே இல்லை!

தன் மீதும், தான் சார்ந்தவர்கள் மீதும் மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தும் போது பதறித்துடிக்கும் அந்தத் தமிழ்வாத்தி, பெரியவாத்தி போன்ற 'மொழி இனக் கேடர்கள்' தமிழின் மீது கொஞ்சமும் தயக்கமின்றி.. பயமின்றி கை வைக்கிறார்களே அதனை என்ன சொல்வது???

தமிழைப் பழிப்பது தன் தாயைப் பழிப்பதற்கு ஒப்பாகும் என்ற உணர்வுகெட்ட முடர்களுக்கு இப்படி கடுமையாக உணர்த்தினால்தான் புரிகிறது..!

நாகரிகமாகச் சொன்னால் மண்டைக்கு ஏறாத கருத்துகள், நடுத்தெருவுக்கு இழுத்துவந்து வன்மமாகக் கண்டித்துச் சொன்னால்தான் ஏறுகிறது..!

தமிழைத் தற்காப்பதற்குத்தான் இந்த வன்மமே தவிர, தனிப்பட்ட முறையில் யாரையும் அழிப்பதற்கு அல்ல என்பதைத் தங்களுக்குத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

//தொட்டால் எரித்திடும் என்பதால் தான் மின்சாரத்தின் மீது பயம். அது தமிழ் மீதும் இருக்க வேண்டும்.//
என்ற தனேந்திரன் கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்.

Sivaganapathy சொன்னது…

சிலர் அழுவார்.....சிலர் சிரிப்பார் ....நாம் மலேசியா இந்தியர்கள் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் .....

இதுதான் இன்றைய மலேசியா இந்தியர்களின் நிலமை.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்....!!!

தயவு செய்து வாயிற்கு வந்தபடி தமிழ் பள்ளி படித்தவர்களையும் தமிழ் பள்ளி ஆசிரியர்களையும் ஏசுவதை நிறுத்துங்கள்..!!!!

அவர் அவர் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழிக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இன்னும் பலர் தமிழாவது தமிழ் பள்ளியாவது என்று சிறிதளவும் கவலைப்படாமல் இன்னும் வேற்று மொழி பள்ளிகளுக்கே ஆதரவு தருகின்றனர்.

நாம் இபோழுது இருக்கும் சூழ்நிலையில் நம் ஒற்றுமையை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும் . இந்த ஒற்றுமையை மேலும் வலு படுத்த மொழி என்ற ஆயுதத்தால் மட்டுமே முடியும்.

அதனால் நாம் மலேசியா இந்தியர்கள் அனைவரும் இது போன்ற பிரச்சினைகளையும் மனிதர்களையும் சமாளிப்பதற்காகவும், நம் மலேசியா அரசாங்கத்திற்கு ஒரு பாடம் புகட்டும் தோற்றத்திலும் உடனடியாக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வேற்று மொழி பள்ளிகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்.

இது சாத்தியம் என்றால் இனி விடியும் ஒவ்வொரு பொழுதுகளும் நம் மலேசியா இந்தியர்களுக்க்காகவே விடியும் என்று எள்ளளவும் ஐயமில்லை .

வீழ்வது நாமாக இருப்பினும் .....
வாழ்வது தமிழாக இருக்கட்டும் !!!!

ஆதவன் சொன்னது…

சிவகணபதி,

தொடந்து மறுமொழி எழுதிவருகிறீர்கள். மகிழ்ச்சி! நன்றி! தாங்கள் வலைப்பதிவு நடத்துகிறீர்களா? உள்நுழைய முடியவில்லையே?

நல்ல சிந்தனையை முன்வைத்துள்ளீர்கள். நன்றி!

யாரையும் வெறுமனே திட்டுவது நமது நோக்கமல்ல. தமிழைச் சிறுமைபடுத்தும் அல்லது ஏளனப்படுத்தும் கெடுமதியாளர்களைத்தான் கண்டிக்கிறோம்.

உண்மையில், தமிழரின் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் இத்தகைய தமிழ் எதிர்ப்பாளர்கள்தாம்.

எதிரியைத் தாக்குவதற்கு முன் இந்தக் கயவர்களை முதலில் திருத்த வேண்டும்.. முடியாவிட்டால் ஒழிக்க வேண்டும். அப்போதுதான், நமது பலம் வெளிப்படும். இவர்களை உடன் வைத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினால் நமகே குழி பறித்து விடுவார்கள்.

தமிழே வேண்டாம் என்று போய்விட்டவர்களால் நமக்கு வரப்போகும் ஆபத்து குறைவுதான். ஆனால், சோற்றுக்கும் சுகத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மட்டுமே தமிழைப் பயன்படுத்திக்கொள்ளும் நயவஞ்சக நரிகள்தாம் மிகவும் ஆபத்தானவர்கள்.

நரிகளை அடையாளங்கண்டு வேட்டையாடுவதில் தாங்களுக்கு உடன்பாடுதானே?

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் சொன்னது…

ஆய்தனின் புரட்சி மதி வாழ்க.
கெடுமதியாளர்கள் உள்ளவரை நாம் சாதிக்க இயலாது. நேர்மறை எதிர்மறை கருத்து தெரிவிக்கும் போது போதிய சான்றுகளை முன்படுத்தி பேசினால் தரமான வாதங்கள் அமையும். வெறுமனே தற்காத்து பேசுவது வெற்று உரலில் மாவிடிப்பது போன்றது. தாய்மொழி சம்பந்தப்பட்ட விடயங்களில் உலகில் பல இனத்தவரும் போராடியே வருகின்றனர். நாம் இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறோம். அதை கோழைத்தனத்தாலும் முதிர்ச்சியற்ற சிந்தனையாலும் கெடுக்க வேண்டாம். தாய்மொழி, இனத்தின் ஆதாரம். அதில் ஒருமித்த கருத்துதான் வேண்டும். மாற்றுக் கருத்து கூறுகிறேன் என்று ஊறு விளைவித்தல் ஓர் இனத்தையே சாகடிக்கும் முயற்சியாகும்.

Sivaganapathy சொன்னது…

திரு ஆய்தன் அவர்களே , மிகவும் தவறு ...உங்கள் கூற்று "........தமிழே வேண்டாம் என்று போய்விட்டவர்களால் நமக்கு வரப்போகும் ஆபத்து குறைவுதான். ஆனால், சோற்றுக்கும் சுகத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மட்டுமே தமிழைப் பயன்படுத்திக்கொள்ளும் நயவஞ்சக நரிகள்தாம் மிகவும் ஆபத்தானவர்கள்......"

அப்படி என்றால் எல்லோரும் தமிழ் மொழி வேண்டாம், தமிழ் பள்ளி வேண்டாம் என்று போய் விடுவோம் ....வேற்று மொழி படித்தால் மட்டும் போதுமே ......உங்கள் கூற்றின் படி ஆபத்து கொஞ்சம் கூட எட்டி பார்க்காது !!!!

ஐயா, ஒரு உண்மை வரலாறு உங்களுக்கு எடுதுரைக்க விரும்புகிறேன் !!!

துன் டாக்டர் மகதீர் ...

முன்னால் பிரதமர் ...பிரதமர் பதவி ஏற்கும் முன் அவர் ஒரு முன்னால் கல்வி அமைச்சர்!!!

அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அவர் மலேசியா கல்வி தரத்தை பல மடங்கு உயர்த்தினார். அதில் ஒன்று மலேசியர்கள் அனைவரும் கட்டாயம் தேசிய (மலாய்) மொழியை கற்க வேண்டும்.

இதனால் மலேசியர்களிடையே இனம் , மதம் , மொழி என பேதம் இல்லாமல் மாபெரும் ஒற்றுமை நிலவியது.

நாடும் சுபிட்சம் அடைந்து வெற்றி நடை போட்டது. அதில் துன் மகாதீர் உலகம் வியக்கும் அளவிற்கு பொருளாதாரம் , கல்வி, கலாச்சாரம் , பண்பாடு , மேம்பாடு , வேலை வாய்ப்பு , முதலீடு , என்று பல கோணங்களில் வெற்றியும் கண்டார்.

இதில் நம் கற்க வேண்டியது என்னவென்றால், ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் ஒற்றுமையாக இருந்தால் ஒழிய எதையும் சாதிக்க முடியும்.

இந்த ஒற்றுமையை சாத்தியமாக்குவது மொழி என்ற ஒரு சக்தியால் மட்டுமே முடியும்.

இந்தக் கருத்தை நம் இந்தியர்கள் அனைவரும் கருத்தில் கொண்டால் நாமும் ஒரு மாபெரும் சாதனைகளை உருவாக்க முடியும் .

இது உண்மை . உண்மை தவிர வேறு எதுவும் இல்லை

ஆதவன் சொன்னது…

#சிவகணபதி,

ஆக்கமான வாதத்திற்கு வழிசெய்துள்ளீர்கள். இப்படிப்பட்ட அறிவான வாதங்கள் நம்மினத்தில் நிறைய இடம்பெற வேண்டும்.

//எல்லோரும் தமிழ் மொழி வேண்டாம், தமிழ் பள்ளி வேண்டாம் என்று போய் விடுவோம் ....வேற்று மொழி படித்தால் மட்டும் போதுமே! உங்கள் கூற்றின் படி ஆபத்து கொஞ்சம் கூட எட்டி பார்க்காது!//

தாங்கள் எமது கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். தமிழே வேண்டாம் என்று சென்றுவிட்டவர்களின் சிக்கல் நீண்ட கால தீர்வுக்கு உட்பட்டது. அவர்களை மீண்டும் தமிழ்மயப் படுத்துவதற்கு தேவையான அணுகுமுறைகளும் வேறானது. அதனைச் சற்று தாமத்தித்தும் செய்யலாம்.

ஆனால், நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது, தமிழுக்குள்ளே இருக்கும் புல்லுருவிகளை முதலில் களையெடுக்க வேண்டும். நாற்றமெடுத்த குப்பைகளை நீக்கித் தமிழ் வீட்டை முதலில் தூய்மை செய்ய வேண்டும்.

இல்லையேல், இருக்கும் வீடும் முழுதுமாக நாறிப்போய்விடும். நாமும் குடியிருக்க முடியாது; ஏற்கனவே ஓடிப்போய்விட்ட நமது உடன்பிறப்புகளையும் கூட்டிவந்து குடிவைக்க முடியாது.

இந்தக் கருங்காளிக் கூட்டத்தை வைத்துக்கொண்டே வெளியே போனவர்களை அழைத்து வந்தால், அவர்களையும் கெடுத்து பிறகு எதிரணியில் பெரும்பான்மையாகி விடுவார்கள். இதனால், ஆபத்து இன்னும் அதிகமாகிவிடும்.

ஆயினும், தமிழரின் ஒற்றுமை தமிழ்மொழி உணர்வால் மட்டுமே உருவாக முடியும் என்பதில் தங்களோடு முழுமையாக உடன்படுகிறேன். தமிழை முன்னெடுப்பதால் மட்டுமே தமிழர் வாழ்வு மலரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆகவே, மலேசியத்தைப் பொருத்தவரை, தமிழை முன்னெடுப்பதும், தமிழ்ப்பள்ளிகளை முதன்மைப்படுத்துவதும் நாம் உடனடியாகச் செய்ய வேண்டியவை என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும்.

மகாதீர் என்பவர் ஒரு அரசாங்கத்தின் நிகராளியாக இருந்து செய்தாரே தவிர, தனியொருவராக அல்ல! ஒரு வலுவான அரசும், கோடானு கோடி பணமும், அதிகார பலமும், மொழியின பற்றுள்ள ஆள்பலமும் இருந்ததால் தான் மகாதீரால் இவ்வளவு சாதிக்க முடிந்தது.

நமது நிலை அப்படியா? நாமென்ன இந்நாட்டின் அரசாங்கமா? அல்லது மகாதீர் போல தெளிவும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்தான் நம்மினத்தில் உண்டா?

பெயரில்லா சொன்னது…

தமிழ்சோறு தின்றுகொண்டு தமிழுக்குக் குழிபறிக்கும் தமிழ்ப்பற்று இல்லாத தமிழ் ஆசிரியர்கள் இன்று பெருகி வருகின்றனர். குறிப்பாக இளம் ஆசிரியர்களிடம் தமிழ் பற்று என்பது தேய்ந்துகொண்டே வருகிறது. அவர்களைக் குறை சொல்லி ஒன்றுமில்லை!

அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கி அனுப்புகிறார்களே ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள்.. அவர்களைச் சொல்ல வேண்டும்.! குறைந்த வேலை.. அதிகமான ஊதியம் என கல்விக் கழகங்களில் போய் உட்கார்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டும், முடிந்தவரை தமிழைக் கெடுத்துக் கொண்டும் இருக்கும் தமிழ் விரிவுரையாளர்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்க வேண்டும்!!!