வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 16 அக்டோபர், 2008

ஈழத்துத் தமிழருக்காக எமது தமிழா ஒன்றுபடு!


தமிழ் ஈழ மண்ணில் தமிழருக்கு எதிராக இலங்கை இராணுவம் கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கொஞ்சங்கூட மாந்தநேயமும் மனசாட்சியும் இன்றி எமது தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது சிங்கள இனவெறிப் பிடித்த சிறீலங்கா இராணுவம். இந்தக் கொலைகார அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையில் உலகமெங்கிலும் உள்ள எமது தமிழர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம், அமைதி மறியல், எதிர்ப்புப் பேரணி என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எமது மலேசியத் தமிழரும் ஈழத்துத் தமிழருக்காகக் குரல்கொடுக்கவும் இனவெறி சிறீலங்கா அரசைக் கண்டிக்கவும் வேண்டியது பிறந்த தமிழினத்திற்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
ஆகவே, பின்வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் கலந்துகொள்ள மலேசியத் தமிழர்கள் அழைக்கப்படுகிறார்கள். வருக.. வருக.. அலையெனத் திரண்டு வருக!!

**நிகழ்ச்சி 1:- (பிறை , பினாங்கு )
நாள்: 17-10-2008 [வெள்ளிக்கிழமை]
நேரம்: இரவு 8.00 மணிக்கு மேல்
இடம்: பிறை, ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயம் முன்புறம்.
  • (சில குறிப்பிட்ட காரணங்களால் பிறை நிகழ்ச்சி வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதன் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)

**நிகழ்ச்சி 2:- (கோலாலம்பூர்)
நாள்: 18-10-2008 [காரி(சனி)க்கிழமை]
நேரம்: இரவு மணி 7.00
இடம்: தான் சிறீ சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன்
தொடர்புக்கு: 016-3262279, 012-3143910

ஈழத்தமிழர்களின் கண்ணிரைத் துடைக்க ஒவ்வொரு மலேசியத் தமிழனும் நமது பங்கை செய்வோமாக!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!!

@ஆய்தன்:-
தமிழரின் தாகம்.. தமிழீழத் தாயகம்!!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்கள் ஆதரவும் அன்பும் மனதை நெகிழவைக்கின்றது. தமிழக உறவுகளும் தங்கள் அன்பையும், ஆதரவையும் தருகின்றார்கள். தமிழீழம் மலரூம். அனைவருக்கும் எங்கள் அன்பும், நெஞ்சார்ந்த நன்றிகளும்.

ஒரு ஈழத் தமிழன்

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) சொன்னது…

அன்புடைய தமிழ் நெஞ்சங்களே,

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்
திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்வலைப்பதிவில் (மேலே காணப்படுவதைப்போல்) அறிவிக்கப்பட்டிருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டம்,தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று முதல் இந்த்ராஃப் எனப்படும் இந்து உரிமை பணிப்படையை அரசு தடை செய்துள்ளதை நாம் அறிவோம்.ஈழத்தமிழருக்கான ஆதரவு போரட்டத்தை இந்த்ராஃப் ஆதரவு போராட்டம் என்று ஆதரவு கூட்டத்தை சீர்குலைக்க ஒர் சில தரப்பினர் முயற்சிப்பதாக எமக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களை அடுத்தே,இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது.

மீண்டும் துரோகம்!!
தமிழனுக்கு எப்பொழுதுமே தமிழன்தான் துரோகம் புரிவான் என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.ஈழ தமிழரின் நலம் காக்க அப்பேற்பட்ட அரசியல் எதிரிகளான தமிழக அரசியல் கட்சிகளே ஒன்றிணைந்து விட்ட போதிலும்,இது வரையிலும் தங்களை மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று பிதற்றிக்கொண்டவர்கள் ஈழ தமிழருக்காதரவான போரட்டத்தைப் பற்றி காவல் துறைக்கு தவறான தகவல்களை தந்து,அவ்வற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.(சில தமிழின துரோகிகள் தந்த தவறான தகவல்களால்,காவல்துறை என்னை 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியது,விசாரணையின் இறுதியில் ஈழ தமிழர் ஆதரவு போரட்டத்தை வேறோரு நாளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வை தள்ளி வைப்பதற்கு பயம் காரணமல்ல;கவனம்தான் காரணம்,தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்கவே நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது)

தடைகள் தற்காலிகமே;
ஈழத்தமிழருக்கு ஆதரவான கவனயீர்ப்பு கூட்டத்தை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என்ற வேட்கை முன்பை விட இப்போதுதான் அதிகமாகியுள்ளது.எதிர்வரும் 24ஆம் தேதி,அதாவது இன்றிலிருந்து ஒரே வாரத்தில்,ஈழத்தமிழருக்கான ஆதரவு கூட்டம் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டுள்ள பல்வேறு தமிழ் சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு மிகப்பெரிய அளவில்,பட்டவொர்த் நகரில் நடத்தப்படுமென்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.நிகழ்வின் முழு விவரங்களும்,எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

எமது அறிக்கைக்கு மதிப்பளித்து தத்தம் வலைப்பதிவுகளில் வெளியிட்டிருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும்,மலேசியா இன்று இணயத்தளத்திற்கும் எமது தாழ்மையான நன்றிகள். அதேவேளையில்,இந்த தள்ளிவைப்பு அறிக்கையையும் தயைக்கூர்ந்து தாங்கள் வெளியிடுவீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.

எதிர்பாராவிதமாக நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதற்கு பெரிதும் வருந்துகிறோம்.துரோகங்களின் விளைவுதான் இந்த தள்ளி வைப்பு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்,

சத்தீஸ் முணியாண்டி,
செயலாளர்,
ஜனநாயக செயல் கட்சி,
ஜாலான் பாரு,பிறை கிளை.

*மேல் விவரங்களுக்கு 016-4384767 (சத்தீஸ்)

Sivaganapathy சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ...

நீண்ட காலமாக எதிபார்த்த ஒரு சந்தர்ப்பம் .....

இந்த நிகழ்வில் "சாக்கடை அரசியல்" கலக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

நமது தமிழ் சகோதர்களுக்காக ஒன்று படுவோம்.

வாழ்க தமிழ் ஈழம்...!!!!!

பெயரில்லா சொன்னது…

Dear Malaysiya Tamilargale, Tamil Eelam Tamilargalai kappatrungal.

from; Thilakan, Australia