வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 2 ஆகஸ்ட், 2008

மலேசியத் தமிழரின் 10 தாழ்வு எண்ணங்கள்


1.தமிழ்ப்பள்ளியில் படிப்பதைக் காட்டிலும் தேசியப் பள்ளியில் அல்லது சீனப் பள்ளியில் பயின்றால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

2.தமிழன் என்று சொல்லுவதைக் காட்டிலும் இந்தியன்; இந்து என்று சொன்னால்தான் பெருமையும் சிறப்பும் உண்டாகும்.

3.தமிழ் மரபை – பண்பாட்டைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்திய – இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் செல்வாக்கு உயரும்.

4.தமிழைக் காட்டிலும் வடமொழியில் இறைவழிபாடு, பூசை, சமய நிகழ்வு ஆகியவற்றைச் செய்தால்தான் முழுமையான பலனை அடைய முடியும்.

5.தமிழ்மொழி, இனம், கலை, இலக்கியம் பற்றி அறவே சிந்திக்காமல் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

6.தமிழ்க் குழந்தைகளுக்குச் சமற்கிருத மொழியில் அல்லது புரியாத மொழியில் அல்லது பொருளே இல்லாத புதுமையான பெயரைச் சூட்டினால்தான் புகழ் உண்டாகும்.

7.மொழிநலம் பற்றி அறவே கவலையில்லாமல், எண் கணித முறைப்படி பெயர்களை மாற்றிக் கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

8.வீட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி, பல்கலைக்கழகம், குமுகம், அரசியல் நிகழ்ச்சிகள் வரையில் தமிழைவிட மற்றைய மொழிகளில் அல்லது கலப்புமொழியில் நடத்தினால்தான் சிறப்பாக அமையும்.

9.தமிழ் நாளேட்டைப் படிப்பத்தைவிட மலாய், ஆங்கில நாளேடுகளைப் படித்தால்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

10.அச்சு, மின்னியல் சார்ந்த தமிழ்த் தகவல் ஊடகங்கள் கலப்புத் தமிழில் செயல்பட்டால்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும்.


@ஆய்தன்:-
தமிழா.. மலேசியத் தமிழா மாறிவிடு! -தமிழைத்
தாய்த்தமிழை உயர்த்திப் பிடித்துவிடு!

3 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் :(

Sathis Kumar சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் ஆய்தன் அவர்களே, தமிழர்களுக்கு மற்றுமொரு விடயத்திலும் தாழ்வு உணர்வு உள்ளது. அதுதான் நிறம். இயற்கை கொடுத்த கருப்பு நிறம் அழகில்லையாம். "பளிச்சிடும் சருமத்திற்கு வாங்குவீர்" என்று எதோ ஒரு கருமத்தை ஊடகங்கள் காட்டிவிட, நம் தமிழர்களும் அவற்றை வாங்கி முகம், கை, கால்களில் அப்பிக் கொண்டு கோமாளிகளைப் போல் காட்சியளிக்கின்றனர்.

பெயரில்லா சொன்னது…

இது இலங்கைத்தமிழருக்கும் மிகச்சரியாக பொருந்தும். அடிமைப்புத்தி என்பது இது தான் போலும். நானும் எத்தனையோ மொழி பேசும் மக்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் தர்ர்போதும் தமது பிள்ளைகளுக்கு தாய்மொழிப் பெயர் இடுகின்றனர். அனைத்து கருமங்களையும் தமது சொந்த மொழியில் செய்கின்றனர். தமது மொழியை பேச வெட்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக தமிழர் மட்டுமே நாகரீகம் என்ற பெயரில் அந்நிய மோகத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

- கலையரசன்